Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியில் மீனாட்சிக்கு ... வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் துலா உற்சவ தீர்த்தவாரி: குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
10:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவம் முதள் நாள் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

Default Image
Next News

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா உற்சவம் முதள் நாள் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது. சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாபவிமோசனம் பெற மயி ல் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்தநடனம் (மாயூர தாண்டவம்)ஆடினர். பின்னர் சிவமயில் தேவி மயிலை நோ க்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்மதீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறியது. அதை கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிர்ம்ம தீர்த்தத்தில் மூழ்கியெ ழுந்து மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றார். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண் டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும்.

நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடி, பாவ விமோச்சனம் பெற்றது போல் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா மாதத்தில் நீராடுபவர்களுக்கு பாவங்களை போக்கி அருள்பாலிக்க வேண்டும் என்று வே ண்டினார் என்பது ஐதீகம். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நகிழ்ச்சி நடைபெறும். அதே போல் இவ்வாண் டு நேற்று 18ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரி நடந்தது. அதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், அருள்மிகு விசாலாட்சி சமேத கா சிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர். தெற்கு கரையில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமி கள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மதியம். 2.15 மணியளவில் சுவாமி தீர்த்தம் கொடுக்க திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar