Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் குவிந்த பக்தர்கள் சின்னதிருப்பதி கோவிலில் திருத்தேர் திருவிழா சின்னதிருப்பதி கோவிலில் திருத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
மகா மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

21 அக்
2019
11:10

புவனகிரி: வள்ளலார் சுவாமிகள் அவதரித்த மருதுார் அருகே கிருஷ்ணாபுரத்தில் அருள்பாலித்து வரும் மகா மாரியம்மன் கோவிலில், அம்மன் கனவில் தோன்றிய உத்தரவிட்டதன் பேரில்,  உலக நன்மை வேண்டி லட்ச அர்ச்சனை நடந்தது. இந்த அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜையில் சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வருந்திய வள்ளலார் சுவாமிகள் அவதரித்த கடலுார் மாவட்டம், மருதுாருக்கும் கிழக்கே ஒரு கி.மீ., தொலைவில், புவனகிரி தாலுகாவைச் சேர்ந்த கிருஷ்ணாபுரம் கிராமம் பச்சை பசேல் என விவசாயம் சூழ்ந்த பகுதியாக உள்ளது. இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மகாமாரியம்மன்கோவிலில், அம்மன் சுயம்பு வடிவில்பக்தர்களு க்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் நுழைவு வாயிலில் ஈசான மூலையில் நவக்கிரங்களுங்களும் அருள் பாலிப்பதால், வள்ளலார்பிறந்த புண்ணிய பூமியில் தரிசனத்திற்குவரும் பக்தர்களுடன்,குல தெய்வ வழிபாட்டிற்கும், பக்தர்கள், அம்மனை தரிசிக்க வருவதால், எப்போதும் கூட்டம் மிகுந்தே காணப்படும்.

கிருஷ்ணாபுரத்தில் வசித்தவரும்,  இக்கோவிலில் பல ஆண்டுகள் பூஜைகள் செய்து, தற்போது சென்னையில் வசித்து வரும் தியாகராஜன்அய்யர் கனவில் அம்மன்தோன்றி ‘தனக்கு லட்ச அர்ச்சனை செய்யவேண்டும்’ என கூறி மறைந்துள்ளார். அதன் பேரில் அவரது உறவினர்கள் சென்னை, திருச்சியில் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து  கடந்த இரு தினங்களுக்கு முன் கிருஷ்ணாபுரம் வந்தவர்கள், கிராம நிர்வாகிகளிடம் விபரத்தை தெரிவித்தனர். அன்று இரவு, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்ததால், அப்பகுதியினர் எந்த பணிகளையும் மேற் கொள்ளாமல் கோவிலில் குவிந்தனர். அதிகாலையில் கோவிலில் வினாயகர், வருண, வாஸ்த்து, நவக்கிரகம் மற்றும் ரேணுகா உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தினர். அதன் பின் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிங்கள் மற்றும் திரவப்பொடிகள் மூலம் சிறப்பு அபிேஷகம் செய்து, பின்னர் லட்ச அர்ச்சனை நடத்தினர். சுற்றுபகுதியினர்கள் பங்கேற்று  சுவாரி தரிசனம் செய்தனர்.  பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை விருந்து வழங்கினர்.

இது குறித்து தியாகராஜஅய்யர் கூறுகையில், இந்த கோவிலில் தொடர்ந்து எங்கள் குடும்பத்தினர் பூஜை செய்தோம். தற்போது அனைரும் வெளியூரில் வசிக்கின்றனர். அம்பாள் என் கனவில் தோன்றி உத்தரவிட்டதால் இந்த பூஜையை முதல் முறையாக நடத்துகிறோம். இனி ஆண்டு தோறும் நடத்துவோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar