Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை ... மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் உட்பிரகாரம் திறப்பு மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயிரம் பொன் சப்பரத்தில் அகரம் முத்தாலம்மன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
10:40

திண்டுக்கல் : திண்டுக்கல் அகரம் முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 9:30 மணிக்கு, கோயிலில் இருந்து பண்டார பெட்டியும், அம்மன் உற்ஸவரும் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான கண்திறப்பு வைபவம் நேற்று நடந்தது.காலை 10:30 மணிக்கு அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் கண் திறப்பு மண்டபத்திலிருந்து கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார். குழந்தையாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த அம்மனை திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். 11:00 மணி முதல் கொலு மண்டபத்தில் வீற்றிருந்தார். ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் துாக்கி வந்தும், கம்பு, நெல், சோளம் போன்றவற்றை சூறையிட்டும், மண் பொம்மைகளை காணிக்கையாக அளித்தும், சேத்தாண்டி வேடம் அணிந்தும்நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 12:00 மணிக்கு அம்மன் புஷ்ப விமானத்தில் வானக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். 12:30 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. இன்று பகல் 1:30 மணிக்கு அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு எழுந்தருகிறார்.

ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.பங்கேற்ற பிரமுகர்கள்: அகரம் பேரூர் அ.தி.மு.க., செயலாளர் சக்திவேல், மாணவரணி செயலாளர் ஸ்ரீதர், அருணா சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர் மணிகண்டன், கார்த்திக், அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம், ஆச்சீஸ் ஓட்டல், வெங்கடஷே், வேல்முருகன் ஏஜென்சி ராமமூர்த்தி, எஸ்.எஸ்.எஸ்., மீட்டிங் ஹால் சுரஷே், யாசீன் மவுலானா பேக்டரி ஜாபர் அலி.நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகவேல், சூரியா அக்ரோ டிரேடர் முருகன், சபரிஸ் அக்வா லதா, தர்மராஜ், பி.ஆர்.டி., கன்ஸ்ட்ரக்ஷன் ராஜாத்தேவர், மணிகண்டன், பெத்தநாச்சி அம்மன் ரியல் எஸ்டேட் மற்றும் முருகன் பைனான்ஸ் பாலமுருகன்.பரம்பரை அறங்காவலர் பிச்சைபிள்ளை, நாட்ராயன் போர்வெல்ஸ் நாட்ராயன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், அகரம் பேரூராட்சி தனி அலுவலர் சரவணக்குமார், செயல் அலுவலர் பாஸ்கரன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, ஊஞ்சல் ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், ... மேலும்
 
temple
தர்மபுரி: ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தர்மபுரி அடுத்த விருபாட்சிபுரம் ராகவேந்திரர் கோவிலில், லட்ச தீபம் ... மேலும்
 
temple
 புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் முக்கிய நகரில் வலம் வந்த, அய்யப்ப தர்ம பிரசார ரதத்தை, பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.