Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் பாலதண்டாயுதபாணி ... பனமரத்துப்பட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
02:11

சேலம்: கந்த சஷ்டி விழாவில், முருகன் கோவில்களில் நடந்த திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, கடந்த, 1ல் காப்புக்கட்டு உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று (நவம்., 3ல்) காலை, முருகன், மரமாக நின்ற சூரனை, இரண்டாக பிளந்து, சேவல், மயிலாக மாற்றி, ஆட்கொண்ட சினம் தணிந்து, மயில் வாகனத் தில் எழுந்தருளச்செய்தனர். மாலை, வள்ளி, தெய்வானையுடன், முருகனுக்கு திருக்கல் யாணம் நடந்து, மணக்கோலத்தல் சப்பரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.

பின், ஊஞ்சல் பாலி உற்சவத்துடன், கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. அதேபோல், சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று (நவம்., 3ல்) காலை, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை, வள்ளி, தெய்வானை யுடன், சுப்ரமணியர் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழநியாண்டவர் ஆசிரமம், பெரமனூர் கந்தசாமி ஆறுமுகனார், பேர்லேண்ட்ஸ் முருகன், குமரகிரி தண்டாயு தபாணி, அம்மாபேட்டை சுப்ரமணியர், ஊத்துமலை முருகன், செவ்வாய்ப்பேட்டை சித்திரைச் சாவடி முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களில், திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக நடந்தது.

சூரசம்ஹாரம்: தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் ஆலயத்தில், நேற்று முன்தினம் (நவம்., 2ல்) இரவு, சிலர், தேவர், அசுரர் வேடமணிந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பூமித்தாயை கடலில் மூழ்கடித்தல், மகா விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து, பூமித் தாயை மீட்டல், சூரவதம் பிறப்பு உள்ளிட்டவை காட்சிகளாக அரங்கேற்றப்பட்டன.

இதையடுத்து, சூரனை அழிக்க வேல் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து, முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar