Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் ... கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்குடியில் ‘வாமன’ கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கொல்லங்குடியில் ‘வாமன’ கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 நவ
2019
12:11

சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடியில் 350 ஆண்டு பழமையான வாமனக்கல் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் கே.காளிராசா கண்டறிந்துள்ளார்.
அவர் கூறியதாவது: கொல்லங்குடி அருகே வீரமுத்துபட்டியில் செங்குளி வயலில்  கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பக்கத்தில் ஒரு கையில் விரித்த குடை, மற்றொரு கையில் கமண்டலம், தலையின் பின் பகுதியில் கொண்டை, மார்பில் முப்புரிநுால் பொறித்த வாமன உருவம் காணப்படுகிறது.

மாவிலி சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கிய திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன உருவம் அரசர் காலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் வழங்கும் போது இறைவனுக்கானது என்பதை அடையாளப்படுத்துவதற்காக வடித்துள்ளனர். இக்கல்வெட்டு மூலம் பொது ஆண்டு 1666ல் பிங்கள ஆண்டு கார்த்திகை மாதம் 2 ம் நாள் ராமநாதபுரம் ரகுநாத சேதுபதி என்ற திருமலை சேதுபதி, காளையார்கோவில் காளீஸ்வரருக்கு வழங்கிய பிரம தாயமாக இருக்கலாம்.  இதன் எல்லை கீழ செங்குளி, மேல செங்குளி முனி பட்டையருக்கு அடி ஊரணிக்கு மேற்கு, கண்மாய்க்கு வடக்கு, கண்டிபட்டி அய்யனாருக்கு கிழக்கு, பசு கொடை பொட்டலுக்கு தெற்கு. இதில் கிழக்கு பகுதியில் காட்டிய ஊரணி தற்போது இல்லை. ராமநாதபுர சேதுபதி மன்னர்களுள் புகழ் பெற்ற கீழவன் சேதுபதிக்கு முந்தைய மன்னராவார். ரகுநாத சேதுபதி என்று அழைக்கப்பட்ட இவர், மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரிடத்தில் இணக்கமாக இருந்து போர் உதவிகளை புரிந்துள்ளார். ஆகவே இவர் திருமலை சேதுபதி என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலம் 1645 முதல் 1676 வரை. பிரமதாயம் என்பது பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலமாகும். அரசர்கள் பொதுவாக ஆவணங்கள் வழங்கும் போது கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொடுப்பது மரபு. இது தொடர்பான செப்பேடு கிடைத்ததாக தெரியவில்லை. இதுபோன்று மன்னர்கள் தம் ஆட்சிக்காலத்தில் இறையிலி நிலமும், பிரமதாயமும் வழங்கி இறைத்தொண்டு புரிந்தனர் என்பதற்கு இக்கெல்வெட்டே ஆதாரம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar