Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா கோயில் நிலம் பட்டா: எதிர்ப்பு வலுக்கிறது கோயில் நிலம் பட்டா: எதிர்ப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனிதமாகிறது சரவணப்பொய்கை: தினமலர் செய்தி எதிரொலி
எழுத்தின் அளவு:
புனிதமாகிறது சரவணப்பொய்கை: தினமலர் செய்தி எதிரொலி

பதிவு செய்த நாள்

08 நவ
2019
11:11

திருப்பரங்குன்றம்,:தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை புனிதம் காக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே பொய்கை நிரம்பும். பொய்கையிலிருந்து தண்ணீர் வெளியேற வழியில்லை. இங்கிருந்து தினமும் வெள்ளி குடத்தில் தீர்த்தம் (திருமஞ்சனம்) எடுத்து யானை மீது கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கொடிகம்பத்தின் அடிப்பகுதி, பலி பீடத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது.

திருவிழா காலங்களில் சுவாமியின் தங்க கிரீடத்திற்கு சரவணப் பொய்கை தண்ணீர்மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. கொடியேற்ற திருவிழாக்களின் கடைசி நாளில் அஸ்தர தேவருக்குசரவணப் பொய்கையில் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. புனிதம் வாய்ந்த சரவணப் பொய்கையில் அப்பகுதியினர் அசுத்தம் செய்வதால் சுகாதாரக்கேடு அடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. சரவணப்பொய்கை தண்ணீரை புனித தீர்த்தமாக பாதுகாக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக பொய்கை தண்ணீரை இயந்திரம் மூலம் துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. முடி காணிக்கை பின்புறமுள்ள இடத்தில் கழிப்பிடம், துணி துவைக்க, குளிக்க புதிய கட்டடம் கட்ட மாணிக்கம் தாகூர் எம்.பி., ரூ. 44 லட்சம் ஒதுக்கீடு செய்தார். விரைவில் அப்பணிகள் துவங்க உள்ளது. இதன்மூலம் சரவணப்பொய்கை புனிதம் பாதுகாக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar