Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்லியனூர் லூர்து அன்னை ஆலயத்தில் ... திருச்செந்தூர் கோவிலில் பாட்டரி கார் வசதி! திருச்செந்தூர் கோவிலில் பாட்டரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி லட்டு பிரசாதத்தில் தங்கத் திருகாணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
10:04

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் லட்டு பிரசாதத்தில், தங்க நகை இருந்ததைக் கண்ட பக்தர் ஒருவர் ஆச்சரியமடைந்தார். திருமலை கோவிலில் தினமும், 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டா டவுனில் ரங்கசமுத்திரம் சாலையில் வசிக்கும் சூரேரெட்டியப்பா, கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருமலைக்கு சென்றார். சாமி தரிசனத்திற்குப் பின், இவர் லட்டு பிரசாதங்களை வாங்கி வந்தார். இதில் ஒரு லட்டை, இதே டவுனில் சோகநாடி தெருவில் வசிக்கும் தனது நண்பரான சுபர்ணாச்சாரிக்கு வழங்கினார். இவர்கள் இந்த லட்டு பிரசாதத்தை திண்பதற்காக உடைத்துப் பார்த்தபோது, லட்டின் மையப் பகுதியில் வட்ட வடிவிலான, அரை கிராம் எடை கொண்ட தங்கத் திருகாணி இருப்பதைக் கண்டனர். திருமலையிலிருந்து வாங்கி வந்த லட்டு பிரசாதத்தில் தங்கம் கிடைத்தது எங்களின் அதிர்ஷ்டம் என தம்பதியினர் தெரிவித்தனர். கடந்த காலங்களில் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டு பிரசாதங்களில் இரும்பு ஆணிகள், கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே லட்டு பிரசாதத்தில் இப்போது தங்கம் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், ஆணியோ அல்லது தங்கத் திருகாணியோ, கவனக்குறைவால் வயிற்றுக்குள் சென்று உபாதை ஏற்படுத்தியிருந்தால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவச் செலவை ஏற்படுத்தியிருக்கும். லட்டு தயாரிப்பில் உள்ள கவனக்குறைவுக்கு இது ஒரு அடையாளம்.திருமலை கோவிலில் லட்டு தயார் செய்யும் இடத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம், அதிக கெடுபிடி செய்ய வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar