Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலுார்பேட்டை திருவாசகம் முற்றோதல் ... நடுவீரப்பட்டு ஜீவ சமாதியில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் பாலாலயம்: கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
12:11

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், பாலாலயம் நேற்று (நவம்., 11ல்)நடந்தது.

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில், ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்பன், மஞ்சள் அம்மன், விநாயகர் மற்றும் பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன.கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2003ம் ஆண்டு நடத்தப்பட்டது.

தற்போது கும்பாபிஷேகம் நடந்து, 16 ஆண்டுகள் ஆகியுள்ளதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் (நவம்., 10ல்) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, விமான கலாகர்ஷன பூஜைகள், முதற்கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, நேற்று (நவம்., 11ல்) காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாகுதி, தீபாரா தனை, கலசாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணை யர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar