சபரிமலை கோவிலுக்கு தனி சட்டம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நவம்பர் 21,2019



புதுடில்லி :சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்க, தனி சட்டம் இயற்றுமாறு, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பத்தணம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலை, திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், கோவில் நிர்வாகத்தில் உள்ள சிக்கல் களுக்கு தீர்வு காண்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தில், 2011ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, கோவிலை நிர்வகிக்க, தனி சட்டம் இயற்றுவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக, கடந்த ஆகஸ்ட்டில், கேரள அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கவும், பக்தர்களின் நலன் குறித்தும் தனி சட்டம் இயற்றுமாறு, கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்திற்குள், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்