பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது: நாளை மாலை 6:30 மணிக்கு மகர ஜோதி

ஜனவரி 13,2022



சபரிமலை:மகரஜோதி நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பவனி பந்தளத்திலிருந்து புறப்பட்டது. நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி திருகிறது.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரஜோதி காலம் நிறைவு கட்டத்தை நெருங்கி உள்ளது. நாளை மாலை மகர ஜோதி பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மகரஜோதி நாளில் பந்தளம் அரண்மனையில் இருந்து கொடுக்கப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்ததாகவும், சபரிமலை சென்ற பின்னர் ஐயப்பனை காண பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றதாகவும், அதை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரண பவனி சபரிமலை வருவதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

திருவாபரண பவனி: நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மதியம் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொட ங்கியது. இந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது. 12:55 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி சங்கர் வர்மா கோயிலில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து அவரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கி வந்தனர். மதியம் 1:00 மணிக்கு சரணகோஷங்கள் முழங்க திருவாபரணபவனி புறப்பட்டது. முக்கிய திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் தலையில் சுமந்து வந்தார். தொடர்ந்து இரண்டு பெட்டிகள் வந்தது. 25 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது. இன்று ளாகா சத்திரத்தில் தங்கும் திருவாபரணம் நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்திக்கும், 6:25 க்கு சன்னிதானத்திற்கும் வந்து சேரும். காட்டுப்பாதையில் திருவாபரணங்கள் செல்வதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வருகின்றனர். மகரஜோதிக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்திகிரியைகள் சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலையில் தீபாராதனைக்கு பின்னர் பிராசாத சுத்தி கிரியைகள் நடந்தது. பிம்பசுத்தி பூஜைகள் இன்று நடக்கிறது. இதன் பின்னர் ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடக்கும் என தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கூறினார்.

15 முதல் 18 வரை நெய்யபிேஷகம் தவிர்த்த நேரங்களில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம்.பம்பை விளக்கு, விருந்துமகரஜோதிக்கு முன்னோடியாக பம்பையில் இன்று பம்பை விளக்கும், விருந்தும் நடக்கும். நேற்று முன்தினம் எருமேலியில் பேட்டை துள்ளி பெருவழி பாதை வழியாக நேற்று இரவு பம்பை வந்து சேர்ந்த அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்கள் இந்த வழிபாட்டை நடத்துவர். மதியம் பல்வகை கூட்டு வகைகள், பாயாசத்துடன் உணவு சமைத்து பக்தர்கள் வட்டமாக அமர்ந்து சரண கோஷமிட்டு உண்பர். பின்னர் மாலையில் மூங்கில்களால் தேர் போல வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் மிதக்கவிடுவர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்