சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் சாஸ்தா வில்வ மரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு மன்னர் ஒருவர் வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றை விரட்டிய போது அது மரப்பொந்தில் ஒளிந்து கொண்டது. மன்னருடன் வந்த வீரர்கள் அந்த பொந்தை தோண்டினர். அங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் சேவுகப்பெருமாள் சாஸ்தா சிலை இருப்பதைக் கண்டனர். சுவாமியின் தலையில் மகுடமும், கால்களில் யோகபட்டையும் இருந்தன. இதன்பின் இங்கு கோயில் உருவானது. சேவுகப் பெருமாள் என அழைக்கப்படும் இவருக்கு சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளால் அர்ச்சனை செய்கின்றனர். சிவன், மகாவிஷ்ணுவின் அம்சம் சாஸ்தா என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். கேட்ட வரம் தருபவராகவும், காவல் தெய்வமாகவும், விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பவராகவும் திகழ்கிறார். சனி, ராகு தோஷம் தீர இவரை வழிபடுகின்றனர். பசு, கன்றுகளை காணிக்கையாகத் தருகின்றனர்.
எப்படி செல்வது: * மதுரையில் இருந்து 60 கி.மீ., * காரைக்குடியில் இருந்து 55 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி.
தொடர்புக்கு: 98650 62422
அருகிலுள்ள தலம்: பிரான்மலை கொடுங்குன்ற நாதர் கோயில்
நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி.
தொடர்புக்கு: 94431 91300.