தினமும் ஒரு சாஸ்தா – 7; பிரச்னை தீர்க்கும் எஸ்.பெரியபாளையம் அய்யனார்..!



திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையத்தில் அய்யனார் பெரியசுவாமி கோயில் உள்ளது. உத்திர நட்சத்திர நாளில் இவரை தரிசித்தால் பிரச்னை தீரும். 300 குடும்பத்தினர்கள் ஆறு தலைமுறையாக குலதெய்வமாக இங்கு வழிபடுகின்றனர். ஆரம்ப காலத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் மண்மேடை மீது களிமண் அய்யனார் சிலை இருந்தது. சில ஆண்டுக்கு முன்பு கருங்கல்லால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் கிழக்கு நோக்கிபடி அய்யனார் பெரியசுவாமி பூர்ணா புஷ்கலா தேவியுடன் இருக்கிறார். வாகனமாக யானை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கன்னி மூலை விநாயகர், கன்னிமார், பேச்சியம்மன், கருப்பராய சுவாமிக்கு சன்னதிகள் உள்ளன. அமாவாசையன்று அபிஷேகம், அலங்காரம் நடக்கும். பங்குனி உத்திரத்தன்று நொய்யல் ஆற்று நீரில் அபிஷேகம் செய்து பொங்கல் இடுவர். இதையடுத்து வரும் ஞாயிறன்று  கருப்பராய சுவாமி படையல் பூஜையுடன் விழா முடிவு பெறும்.


திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் 8 கி.மீ.,


நேரம்: காலை: 9:00 – 11:00 மணி 


தொடர்புக்கு: 91711 21515, 99949 20332 


அருகிலுள்ள தலம்: எஸ். பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயில்


நேரம்: காலை 7:00 – 1:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி 


தொடர்புக்கு: 94423 73455.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்