சபரிமலையில் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல்

ஜனவரி 16,2018



சபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றதையடுத்து மாளிகைப் புறத்தம்மன் சன்னிதானம் முன்பு தினமும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சபரிமலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றது.

வரும் 19-ம் தேதி வரை பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் இரவு 9:30க்கு 17-ம் தேதி வரை இந்த பவனி நடைபெறும்.கன்னி ஐயப்பன் சபரிமலைக்கு வராத ஆண்டில் திருமணம் செய்வதாக ஐயப்பன் கூறியதன் பேரில், மாளிகைப்புறத்தம்மன் சன்னிதானம் முன்பு எழுந்தருளுகிறார். 18-ம் தேதி சரங்குத்திக்கு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளுவார். அங்கு கன்னி ஐயப்ப பக்தர்கள் வந்ததன் அடையாளமாக மலை போல் குவிந்துள்ள சரக்குச்சிகளை பார்த்தபின் மீண்டும் கோயிலுக்கு திரும்புவார்.2016-ல் இந்த பவனியின்போது யானை தாக்கி ஒரு பெண் பக்தர் இறந்ததால், மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மாளிகைப்புறத்தம்மன் சிலையை பூஜாரிகள் சுமந்து வந்தனர். வரும் 19-ம் தேதி வரை படிபூஜை நடைபெறும். 18-ம் தேதி காலை 10:00 மணியுடன் நெய் அபிஷேகம் நிறைவு பெறும். 19-ம் தேதி இரவு 10:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசன வசதி உண்டு. அன்று இரவு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்