சபரிமலை வழக்கு: நீதிபதிகள் கூறியது என்ன?

நவம்பர் 14,2019



 புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் இன்று, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து இவ்வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், தனிப்பட்ட உரிமைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் இடையேயான வழக்கு. தீர்ப்பு இந்து பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்து விட முடியாது. பெண்களுக்கான கட்டுப்பாடு சபரிமலையில் மட்டுமல்ல. வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை தொடர்பான வழக்கில் மதம் தொடர்பான நம்பிக்கை பற்றி வாதங்களை கருத்தில் கொண்டோம். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கில் 5 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து விரிவான அமர்விற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்படுகிறது. 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள், இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற பரிந்துரைத்தனர். இதனையடுத்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பின் நிலையே தொடரும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்