சபரிமலையில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீசார்

நவம்பர் 14,2019



சபரிமலை: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு கால பாதுகாப்புக்கு, 24 எஸ்.பி.க்கள் தலைமையில் ஐந்து கட்டங்களில், 10 ஆயிரம் போலீசார் நாளை மறுநாள் (நவ.,15) முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சபரிமலையில், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், 41 நாட்கள் மண்டல கால பூஜை நடைபெறுகிறது. அதன் பின், டிச., 30 முதல், ஜன., 20 வரை, மகரவிளக்கு கால பூஜை நடைபெறுகிறது. கடந்த சீசனில் பிரச்னைகள் காரணமாக, போலீசார் குவிக்கப்பட்டனர். அது, இந்த ஆண்டும் தொடர்கிறது. 24 எஸ்.பி., 112 டி.எஸ்.பி.க்கள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1185 எஸ்.ஐ.க்கள் தலைமையில், 5 பிரிவாக பாதுகாப்பு பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில், 2000 போலீசார் வீதம், 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுவர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்