Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

விவேகானந்தப் பயிற்சிஜனவரி 02,2013

இளைஞர்களே-யுவதிகளே! மாணவ-மாணவிகளே! விவேகானந்தரை மதிப்பவர்களே! வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் இந்த விவேகானந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பெற்றோர்களே! ஆசிரியர்களே!
உங்கள் குழந்தைகளையும் மாணவர்களையும் உங்களது அன்புக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை என ஏக்கமா? இதோ விவேகானந்தப் பயிற்சி செய்பவர்களிடம் நீங்கள், தினமும் தவறாமல் பயிற்சி செய்தீர்களா என விசாரிக்கலாம். இப்பயிற்சி பற்றிய செய்தியைப் பள்ளி நோட்டீஸ் போர்டில் போடலாம். தினசரிப் பிரார்த்தனையின்போது அறிவிக்கலாம். ஆசிரியர்களே உங்கள் மாணவன்/மாணவி பலவீனமாக இருந்தால், அவர்களை இப்பயிற்சியில் ஊக்குவித்து அவர்களது தரம் மேம்பட உதவுங்கள். தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் இப்பயிற்சி குறித்துத் தினசரி 10 நிமிடங்கள் முயற்சி மேற்கொண்டாலும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரியின் வளர்ச்சி மேம்படுவது உறுதி.

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நீங்கள் படித்துள்ளீர்கள். படிப்பதோடு அவற்றை நீங்கள் கடைப்பிடிக்கும்போது அவற்றின் சிக்தி மற்றும் செல்வாக்கை உங்களது தினசரி வாழ்வில் காண்பீர்கள்; அதனால் உங்களது உடல் பலப்படும். மனம் திடப்படும். சாதாரண மக்களைப் போலின்றித்தனித்துவத்துடன் நீங்கள் விளங்குவீர்கள். அவ்வாறு நீங்கள் விளங்குவதற்கான ஓர் அறிமுகம்தான் விவேகானந்தப் பயிற்சி.

ஜனவரி 2013 முதல் ஜனவரி 2014 வரை ஒவ்வொரு மாதத்திற்கும் சுவாமிஜியின் 13 முக்கியமான கருத்துகளை அவரது 58 அறிவுரைகளைக் கொண்டு கடைப்பிடிப்பது எவ்வாறு என்று இந்தப் பயிற்சியில் விளக்கப்படும். அந்த முக்கிய கருத்துகள்: உடல்வலிமை, மனவலிமை, மனஒருமை, தலைமைப் பண்புகள், எதையும்திறம்படச் செய்தல், சேவை, இளைஞர்களின் கடமை, நம் பண்பாடு, இளைஞர்சக்தி, இந்தியாவை நேசித்தல், சமயமே பாரதத்தின் முதுகெலும்பு, ஆக்கபூர்வமான சிந்தனைகள், பிறர் நலம் நாடுதல். இந்த பயிற்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம்! இதில் ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய முடிந்ததை (ரைட்) போட்டும், செய்ய முடியாததை (ராங்) இட்டும் உண்மையாகப் பதிவு செய்யுங்கள்)

தங்களுக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடவும். ஒரே நாளில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதி விடாதீர்கள். நான்கு வாரப் பயிற்சிகளை முடித்து. இதன் தொடர்பாக நீங்கள் செய்த வேறு நல்ல பணிகளையும் 2013 பிப்ரவரி 5-க்குள் ..

தி எடிட்டர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், பழைய எண் 16, புதிய எண் 31, ராமகிருஷ்ண மடம் ரோடு, மைலாப்பூர், சென்னை. 600 004

என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். சிறந்த செயல்களைச் செய்து, பயிற்சியை முழுமையாகச் செய்ததை விவரிக்கும் படைப்புகளை எழுதிய முதல் 15 பேருக்கு தலா ரூ 150/- வழங்கப்படும். பரிசுகள் ஒவ்வொரு மாதமும் இந்த ஆண்டு முழுவதும் வழங்கப்படும். பரிசு பெறுபவர்களின் புகைப்படங்களும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து (1)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)