Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

உடல் வலிமைஜனவரி 02,2013

ஜனவரி மாத விவேகானந்தப் பயிற்சி சிறந்தவர்களை உருவாக்குவதற்கான வாழ்வியல் பயிற்சி

வலிமையே வாழ்வு- சுவாமி விவேகானந்தர்

ஜனவரி 1: இன்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அனைவருக்கும் அருள் செய்த கல்பதரு தினம். காலையில் வீட்டில் நீங்களே முதலில் எழுந்து, குளிர்ந்த நீரில் குளித்து நமஸ்தே/ வணக்கம்/ குட்மார்னிங் என எல்லோருக்கும் கூறி எழுப்புவீர்களா?

ஜனவரி 2: முதுகெலும்பை வளைக்காமல் நேராக நிமிர்ந்து அமர இன்று முதல் பழகுங்கள். பத்மாசனம் மற்றும் வஜ்ராசனம் முறையாகக் கற்கப் பயில்வீர்களா?

ஜனவரி 3: கம்பீரமாகவும் அமைதியாகவும் நடப்பதில் இன்று கவனமாக இருந்தீர்களா?

ஜனவரி 4: இன்று வெயிலில் உழைத்தோ, விளையாடியோ, நடந்தோ வியர்வையை வரவழைத்தீர்களா?

ஜனவரி 5: மாடிக்குப் படிக்கட்டுகளிலேயே ஏறிப் பழகுங்கள். லிப்ட் வயதானவர்களுக்கு என விட்டுவிடுங்கள்.

ஜனவரி 6: அறையில் வீரதீர புருஷர்களின் (அனுமன், ராணா பிரதாப்சிங், சத்ரபதி சிவாஜி, சுவாமி விவேகானந்தர், நேதாஜி, பாரதியார், காந்திஜி...) படங்களை மாட்டி, அவற்றை அடிக்கடி பார்த்து அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 7: ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இன்று செய்தீர்களா?

இரும்பை ஒத்த தசைகளும் எஃகைப் போன்ற நரம்புகளுமே நமக்குத் தேவை.

ஜனவரி 8: வீண் கோபமும், வெட்டி அரட்டையும் உங்கள் நரம்புகளைப் பலவீனமாக்கும்.

ஜனவரி 9: இன்று நான் நன்றாகப் படிப்பேன். திறமையாக வேலை செய்வேன். சோம்பி இருக்க மாட்டேன் என வீட்டில் எல்லோரும் பார்க்கும்படி பெரிதாக எழுதி வையுங்கள். அப்படி எழுதி வைத்தீர்களா?

ஜனவரி 10: உணவில் காய்கறி, கீரை, பழங்கள் போன்ற சத்தான இயற்கை உணவுகளை அம்மாவிடம் கேட்டு உண்ணுங்கள்.

ஜனவரி 11: திடமான உடல் படைத்தவர்கள் பற்றிய புத்தகம், மேலும் விவரங்களை யு.டியூப், டி.வி, இண்டர்நெட் என்று பலவற்றிலும் தேடிப் பிடித்துப் படித்து ஊக்கம் பெறுங்கள்.

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)