Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

சுவாமிஜியின் அருட்பணியில்.. ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், சேலம்!ஜனவரி 10,2013

சிறை வளாகத்தில் விவேகானந்தரின் பிறந்தநாள் விழா: சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழா சேலம் மத்திய சிறையில் உள்ளோர் பயன்பெறும் வகையில் 21.02.2013 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிறை வளாகத்தில் நடைபெற இருக்கிறது. ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தஜி மகராஜ் அவர்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை) தலைமையேற்று ஆசியுரை வழங்குவார். டாக்டர் ஓ.சுப்ரமணியம் (முன்னாள் முதல்வர், விவேகானந்த கல்லூரி, திருவேடகம்), திரு நாரை ச.நெல்லையப்பன் (சுவாமி விவேகானந்தர் தவ இல்லம், வனவாசி) ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கின்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் சீர்திருத்த இல்லவாசிகள் அனைவருக்கும் மதிய உணவு பிரசாதம் வழங்கப்படும். (சுமார் 1250 பேருக்கு). சிறைவாசிகள் பயன்பெறும் வகையில் சுவாமி விவேகானந்த நூலகம் தொடங்கும் பொருட்டு பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் இலக்கியத் தொகுப்பினை (ரூ.5000 மதிப்பு) ஆஸ்ரமம் வழங்க இருக்கிறது. சீர்திருத்த இல்லத்தில் உள்ளோரின் நலத்திற்காக இறைவனைப் பிரார்த்திப்போம். இறைப் பணியில்,

சுவாமி யதாத்மானந்தர்
செயலாளர்


விழாவை முன்னிட்டுச் சென்னை மடத்தின் வெளியீடுகளுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படும். விழாவிற்கு பணமாகவோ, பொருளாகவோ அளிக்கப்படும் நன்கொடைகள் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய ஒப்புதலும் வழங்கப்படும். வருமான வரிச்சட்டம் 80-எ படி நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு. காசோலைகளும், வங்கி வரைவோலைகளூம் “ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், சேலம்” என்ற பெயரில் வழங்கப்பட வேண்டும்.

"இங்கு அவர்கள் அதைச் சிறை என்று கூறுவதில்லை; சீர்திருத்த நிலையம் என்றே கூறுகின்றனர். நான் அமெரிக்காவில் பார்த்தவற்றுள் மிகச் சிறந்தது இதுவே ஆகும். சீர்திருத்த நிலையத்தில் உள்ளோர் எவ்வளவு நல்ல முறையில் நடத்தப் படுகின்றனர்! அவர்கள் எவ்வாறு சீர்திருத்தப் பட்டுச் சமுதாயத்தின் பயனுள்ள உறுப்பினர்களாகத் திருப்பி அனுப்பப் படுகின்றனர்! என்ன சிறப்பு! என்ன அழகு! நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும்." -சுவாமி விவேகானந்தர் (அளசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து).

சுவாமி விவேகானந்தர் 150 வது பிறந்த நாள் விழா: நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இந்த விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அந்தந்த இடங்களின் சூழ்நிலைகளுக்கும் நடைமுறைகளுக்கும் ஏற்ப நிகழ்ச்சிகள் அமையும். நிகழ்ச்சிகளுக்குத் தேவையான நிதிவசதிகள் மாநில அரசு உதவியைக் கொண்டும் தொழில் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், கொடை உள்ளம் கொண்ட பெருமக்களும் அளிக்கும் நன்கொடைகள் மூலமும் கூப்பன்கள் மூலமாகவும் அமையும்.

சமுதாயத்தின் எல்லாப் பிரிவினர்களும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான முயுற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர்களைப் பெருமளவில் கலந்துகொள்ளச் செய்வதில் தனிக் கவனம் செலுத்தப்படும்.

இந்த விழாவின் எல்லாத் திட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இடம் பெற இருக்கும் மூன்று அம்சங்களாவன:

*அறப்பண்புகள், கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றின் மதிப்புகளை இளைஞர்கள் மனத்தில் நன்கு பதியச் செய்யக்கூடிய பண்பாட்டுக் கல்வி
* ஏழைகளுக்கு-குறிப்பாக, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கான தேவை.
* பெண்கள் நலத்திட்டங்கள்

இந்திய அரசின் ஈடுபாடு:
சுவாமி விவேகானந்தரது வாழ்க்கையின் தேசிய முக்கியத்துவம், அவர் வழங்கியுள்ள செய்தியின் உலகளாவிய தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விழாவுக்கு இந்திய அரசின் ஆதரவை ராமகிருஷ்ண மிஷன் நாடியது. இந்தியப் பிரதமர் அதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். சுவாமிஜியின் 150-ஆவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடைபெறச் செய்வதற்காக மத்திய அரசு ஒரு தேசிய உயர்மட்டக் குழுவை அமைத்தது. பிரதமரே அதன் தலைவர்.

மத்திய அரசு அமைத்துள்ள தேசியக்குழு, மத்திய நிதியமைச்சரின் தலைமையில் தேசியச் செயலாக்கக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பிரமுகர்கள் சிலருடன் ராமகிருஷ்ண இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுவாமியும் ஒரு துணைச் செயலாளர் சுவாமியும் இடம் பெற்றுள்ளனர்.

நடவடிக்கைக்கான அமைப்பு: இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் விழாவின் பல்வேறு நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் வகையிலும் பேலூர் மடம் இரண்டு செயற்குழுக்களை அமைத்துள்ளது. பொதுச்செயலாளர் சுவாமி பிரபானந்தர் அவற்றின் பொதுத் தலைவராவார். சுவாமி சுஹிதானந்தர் ஒரு செயற்குழுவுக்கும் சுவாமி கவுதமானந்தர் மற்றொரு செயற்குழுவுக்கும் துணைத்தலைவர்கள் ஆவார்கள். இரண்டு செயற்குழுக்களிலும் இயக்கத்தின் மூத்த துறவிகளும் பல பிரமுகர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.

செயற்குழு ஏ அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களைச் செயற்படுத்தும். செயற்குழு பி ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் சொந்த முறையில் மேற்கொள்ளும் திட்டங்களைச் செயற்படுத்தும் ஏ பிரிவு 6 துணைக்குழுக்கள் மூலமும் பி பிரிவு 5 துணைக்குழுக்கள் மூலமும் செயல்படும்.

துணைக்குழுக்களும் அவற்றின் அமைப்பாளர்களும் பின்வருமாறு:

பிரிவு ஏ
1. பத்திரிகை ஊடகம் - சுவாமி ஞானதானந்தர்
2. எலெக்ட்ரானிக் ஊடகம் - சுவாமி சர்வபூதானந்தர்
3. இளைஞர் நிகழ்ச்சிகள் - சுவாமி ஆத்மப்ரியானந்தர்
4. கலாசார நிகழ்ச்சிகள் - சுவாமி பலபத்ரானந்தர்
5. குழந்தைகள் நலத்திட்டம் - சுவாமி சுமேதானந்தர்
6. வறுமை நிவாரண திட்டம் - சுவாமி திவ்யானந்தர்

பிரிவு பி

1. விழாக் கொண்டாடங்கள் - சுவாமி சர்வலோகானந்தர்
2. நூல் வெளியீடு மற்றும் பிசாரம் - சுவாமி போதசாரானந்தர்
3. கருத்தரங்குகள் மற்றும் மாநாவு - சுவாமி சாந்தாத்மானந்தர்
4. இளைஞர்களுக்கான பணித்திட்டங்கள் - சுவாமி ஆத்மவிதானந்தர்
5. பாவபிரசார் நிகழ்ச்சிகள் - சுவாமி சிவமயானந்தர்

இந்த விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும் இரண்டு அம்சங்களை மையமாகக் கொண்டு அமையும். அவையானவன:

1. இளைஞர்களுக்கான பண்பாட்டுக் கல்வி
2. வறுமையில் வாடும் மக்கள், பின்தங்கிய மக்கள், பழங்குடி மக்கள். ஆகியோருக்கான சேவை.
இந்த நான்கு ஆண்டு விழாவில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட இருக்கும் நான்கு சேவைத் திட்டங்கள் பின்வருமாறு:

1. கதாதர் அப்யுதய ப்ரகல்ப (ஒருங்கிணைந்த குழந்தைகள் முன்னேற்றத் திட்டம்)
2. விவேகானந்த ஸ்வஸ்த்ய பரிசேவா ப்ரகல்ப (குழந்தைகள் உடல் நலம் பேணுவதற்கான திட்டம்)
3. சாரதா பள்ளிவிகாஸ் ப்ரகல்ப (கிராமப்புறப் பெண்களின் கல்வி மற்றும் சுய முன்னேற்றத்திற்கான திட்டம்)
4. சுவாமி அகண்டானந்த சேவா ப்ரகல்ப (கொடிய வறுமையில் வாடும் மக்களுக்கான சேவைத் திட்டம்)

இந்த பெரிய திட்டங்களைத் தவிர, மற்றும் பல திட்டங்களும் நிகழ்ச்சிகளும் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:
*சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும் பற்றிய சுருக்கமான நூல்களை வெளியிடுதல்-வழங்குதல்.
*சுவாமிஜியின் உரைகளும் எழுத்துகளும் அடங்கிய முழுமையான நூல் தொகுதிகளை நூலகங்களுக்கு வழங்குதல்
* சுவாமிஜி பற்றிய குறுந்தகடுகள், குறும்படங்கள் வெளியிடுதல்.
* கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல்.
* இளைஞர் மாநாடுகள், பண்பாட்டுக் கல்வி நிகழ்ச்சிகள் நடத்துதல்.
* விவேகானந்த ரதம், விவேக வாஹினி போன்ற ஊர்திகள் மூலம் நாடு முழுவதும் எழுச்சி ஏற்படுத்துதல்.
* ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பெயர்களில் இயங்கி வரும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளுதல்.

மொத்தத்தில், நம் நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பாரத நாட்டின் பழம்பெருமைகளையும் பண்பாட்டினையும் மறக்காதவர்களாகவும், அதே சமயம் தங்கள் அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்திப் புதிய இந்தியாவை உருவாக்க வல்லவர்களாகவும் ஆக வேண்டும் என்னும் சுவாமிஜியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரது 150-ஆவது ஆண்டு விழா அமையும்.
* விழாவை முன்னிட்டு சென்னை மடத்தின் வெளியீடுகளுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படும்
* விழாவிற்கு பணமாகவோ, பொருளாகவோ அளிக்கப்படும் நன்கொடைகள் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய ஒப்புதலும் வழங்கப்படும்
* வருமான வரிச்சட்டம் 80-ஜி படி நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு.
* காசோலைகளும்/வங்கி வரைவோலைகளும் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், சேலம் என்ற பெயரில் வழங்கப்பட வேண்டும்.

ஞான வேள்வி: தொண்டு செய்வதே தூய வழிபாடு என்னும் உயரிய கோட்பாட்டினை உலகுக்கு வழங்கிய மகான் சுவாமி விவேகானந்தர். அவர் உருவாக்கிய ராமகிருஷ்ண இயக்கத்தின் சார்பில் நல்ல பல பணிகள் உலகமெங்கும் நடைபெற்று வருகின்றன. வரும் 2013 ஆம் ஆண்டு சுவாமிஜியின் 150-ஆம் ஆண்டு விழா வருவதை முன்னிட்டுப் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்தின் சார்பில் ஏற்கெனவே நடந்து வரும் நற்பணிகளோடு புதிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆஸ்ரமத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் புத்தக விற்பனை நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆஸ்ரமத்துக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பொது மக்களும் பயன்பெறும் வகையில் இருபுறமும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நடமாடும் புத்தக விற்பனை நிலையம் ஒன்றும் இயங்கி வருகிறது. நகரின் பல பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ராமகிருஷ்ண விவேகானந்த இலக்கியங்களும் பொதுவான ஆன்மீக பண்பாட்டு நூல்களும் எளிதில் கிடைக்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் யோகம், தியானம், இந்து மதம் பற்றிய நூல்களும், பிரயோகங்கள் மற்றும் ஸ்தோத்ரங்கள் முதலிய நூல்களும் உள்ளன. சிறுவர்களுக்கான படக்கதைகள், இளைஞர்களுக்கான ஆளுமை வளர்ச்சி மற்றும் சுயமுன்னேற்ற நூல்கள், பஜனை மற்றும் தேவபாராயண குறுந்தகடுகள், திருமூவர் படங்கள் மற்றும் லேமினேஷன்கள் உள்ளன. மேலும் இத்துடன் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் செய்தியும் அடங்கிய கண்காட்சி ஒன்றும் காண்பிக்கப்படுகிறது.

இதன் சேவையை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் கல்லூரி, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் ஆலய நிர்வாக அலுவலர்கள் நமது ஆஸ்ரமச் செயலாளர் சுவாமிஜியைத் தொடர்பு கொள்ளலாம்.

சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மனவலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு. இந்தக் கல்வியை மக்களுக்கு அளிக்கும் வகையில் சேலம் ராகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் நடத்தி வரும் இந்த ஞான வேள்வியில் பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அறிவார்ந்த பொது மக்களாக விளங்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள்

தமிழகத்தில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை: இந்தியத் திருநாட்டின் பெருமையையும், சிறப்பையும் உலக அரங்கில் ஒளிரச் செய்த வீரத்துறவி விவேகானந்தர் பிறந்து 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அவரது பெருமைகளையும், கருத்துக்களையும் போற்றிப் பரப்பும் வகையில் நாடெங்கும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமங்களும், ராமகிருஷ்ண மடங்களும் மட்டுமின்றி, ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் பெயரில் இயங்கிவரும் எல்லா அமைப்புகளும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் நடத்திவருகின்றன.

இவற்றுள் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக சுவாமிஜியின் திருவுருவைத் தாங்கிய ரதம் தமிழகமெங்கும் பவனிவர ஏற்பாடாகி வருகிறது. தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பாவ பிரசார் பரிசத் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் இந்த ரதயாத்திரை கோவை ராமகிருஷ்ண வித்யாலத்தில் 2013 ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்த ரதயாத்திரை நடத்தும் பொறுப்பைச் சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த ரதயாத்திரை திட்டத்தில் தங்கள் ஊரும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம். தாங்கள் அன்புகூர்ந்து அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம். இதற்காகத் தங்கள் பகுதியில் உள்ள பெருமக்களைக் கொண்ட விழாக் கமிட்டி ஒன்றை அமைத்து, அதன்மூலம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் ஊருக்கு ரதம் வரும்போது மேளதாளங்கள் முழங்க, சுவாமிஜியின் திருவுருவுக்கு மாலை அணிவித்துச் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து ஒரு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்த வேண்டும். பொதுகூட்டத்தில் சுவாமிஜியைப் பற்றிய சொற்பொழிவுகள், மாணவ-மாணவியரின் சிற்றுரைகள், கலை நிகழ்ச்சிகள் முதலியன இடம்பெற வேண்டும். ஊர்ப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படலாம்.

இந்த விழாவை முன்னிட்டு சுவாமிஜியின் வாழ்க்கை மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் (பேச்சு, கட்டுரை, ஒப்புவித்தல், வினாடி வினா, ஓவியம் முதலயின) ஏற்பாடு செய்யலாம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்கள் அடங்கிய புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக விற்பனை ஆகியவற்றுக்கு நடமாடும் புத்தக விற்பனை நிலையம் மூலம் ஏற்பாடு செய்யலாம் (தொடர்புக்கு திரு பி. பிரேமானந்த், செல் 99526 18979)

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சமிதிகள், ஆஸ்ரமங்கள், அன்பர்களின் இல்லங்கள் ஆகியவற்றில் விவேகானந்த வாசகர் வட்டங்களை உருவாக்குவது சிறந்த சேவையாகும்.

தாங்கள் இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு ரதயாத்திரையின் போது ரதத்துடன் வரக்கூடிய தொண்டர்கள் சுமார் 25 பேருக்குத் தேவையான உணவு அல்லது சிற்றுண்டிக்கும் தேவையானால் தங்குமிடத்திற்கும் ஏற்பாடு செய்யும்படி மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

* ஊர்வலத்தின்போது வீர முரசு போன்ற நூல்கள், விவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குதல்.
* சுவாமிஜியின் புகைப்படம் வழங்குதல், பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களை ரதயாத்திரையில் பங்கேற்கச் செய்தல்.
* விழா நிகழ்ச்சிகளை, தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல்.
* ஊரில் விவேகானந்தரின் நூலகம் ஏற்படுத்த உரிய முயற்ச்சிகள் மேற்கொள்ளுதல்.
தங்கள் தொடர்புகொள்ளத் தேவையான தங்களின் முகவரி, தொலைபேசி எண், கைபேசி எண், மின் அஞ்சல் (அ)பேக்ஸ் தெரிவிக்க வேண்டுகிறோம்.

குறிப்பு: எங்கும் விவேகானந்தர் நூலகத்திட்டத்தில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 நூல்கள் அடங்கிய பெட்டகம் அக்டோபர் 2012-இல் வெளி வந்துள்ளது. தமிழ்நூல் பெட்டகம் சிறப்புச்சலுகை விலை ரூ 4500, ஆங்கில நூல் பெட்டகம் சிறப்புச்சலுகை விலை ரூ 5500 என மிகக் குறைவான விலையில் கிடைக்கும். இவற்றை பள்ளி, கல்லூரி மற்றும் பொது நூலகங்களில் வைப்பதற்கு ஊக்கமளிப்பது சிறந்த சேவையாகும்.

சுவாமிஜி தொடர்பான 17 நூல்கள் மிகவும் குறைவான விலையில் ஜனவரி 2013 இல் வெளிவர இருக்கின்றன. இவை வாசகர் வட்டத்திற்கு மிகவும் பயன்படும்.

2013 ஜனவரி 27 ஆம் நாள் கன்னியாகுமரியில் சுவாமிஜியின் 150-ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதில் கலந்துகொள்வதால் அனைவருக்கும் எழுச்சி ஏற்படும்.

திருநெல்வேலி ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் தமிழ்நாடு பக்தர்களின் மாநாடு 2012 டிசம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். பக்தர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். (தொடர்புக்கு: ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி, சாரதா நகர், வி.எம். சத்திரம் அரியகுளம், திருநெல்வேலி-627 011, போன்: 0462-2520596)

சேலம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் விவேகானந்தர் வாழ்வில் என்ற புத்தகத்தை 50,000 பிரதிகள் அச்சிட்டு மாணவ - மாணவிகளுக்கு இலவசமாக வழங்கியது. சேலம் ஆசிரமம் இந்த ஆண்டு 50,000 மாணவ - மாணவிகள் விவேகானந்தர் பற்றிய கட்டுரைப்போட்டியில் கலந்துகொள்ளச் செய்தது. ஜனவரி 12-ஆம் தேதி சேலம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு டாக்டர் அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார். சுவாமிஜியின் 150-ஆவது ஜயந்தி விழா தொடர்பாக .சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் மத நல்லிணக்கம் - சமய சமரசம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுவாமிஜியின் அருட்பணியில்

சுவாமி யதாத்மானந்தர்
செயலாளர்
ஸ்ரீராமகிஷ்ண மிஷன் ஆஸ்ரமம்
17, ராமகிருஷ்ண சாலை, சேலம் 636-007
போன் 0452 231 9457
மொபைல்: சேலம் 96291 45643/ வெளியூர் +91 98402 08102

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)