Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடம்!ஜனவரி 11,2013

சுவாமிஜி இருந்த நாட்களைப் போற்றும் விழா:

தமிழ்நாட்டில் 1897-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுவாமிஜி இருந்த நாட்களைப் போற்றும் விழா:

சுவாமி விவேகானந்தர் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்தியா திரும்பினார். அவர் தமிழ்நாட்டில் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் (பாம்பன்) குந்துக்காலிலும், ஜனவரி 27-ஆம் நாள் இராமேஸ்வரத்திலும், ஜனவரி 29-ஆம் நாள் இராமநாதபுரத்திலும், பிப்ரவரி 1-ஆம் நாள் காலை பரமக்குடியிலும், அன்றைய தினம் மாலை மானாமதுரையிலும், பிப்ரவரி 2-ஆம் நாள் மதுரையிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதன்பிறகு அவர் கும்பகோணத்தில் பிப்ரவரி 3-ஆம் நாள் சொற்பொழிவு செய்தார். சென்னையில் அவர் 1897 பிப்ரவரி 9-ஆம் தேதி, 11-ஆம் தேதி, 13-ஆம் தேதி, 14-ஆம் தேதி ஆகிய நாட்களில் சொற்பொழிவுகள் செய்தார். 1897-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுவாமிஜி சொற்பொழிவு செய்த 1.குந்துக்கால், 2.இராமேஸ்வரம், 3.இராமநாதபுரம், 4.பரமக்குடி, 5.மானாமதுரை, 6.மதுரை, 7. கும்பகோணம் ஆகிய ஊர்களில் அந்தந்த தேதிகளில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பொதுநிகழ்ச்சி வைத்துக்கொள்வதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

மதுரை மடம் நடத்திய கட்டுரைப் போட்டியில் 294 கல்வி நிறுவனங்களிலிருந்து 25, 401 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் விழுப்புரத்திலிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 1145 மாணவ - மாணவிகள் கலந்துகொண்டார்கள். சுவாமிஜியின் 150-ஆவது ஜயந்தி விழா தொடர்பாக மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மத நல்லிணக்கம் - சமய சமரசம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்வி நிறுவனங்களில் விவேகானந்தர் புகைப்படக் கண்காட்சி:

சுவாமி விவேகானந்தர் பற்றிய நூற்றுக்கும் அதிகமான ஊடூஞுது ஆணிச்ணூஞீண் தயாரித்து, அதை மதுரையில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கடணிtணி உதுடடிஞடிtடிணிண வைத்தல்.
மதுரையில் பல கல்வி நிறுவனங்கள் இருப்பதால், இந்த கடணிtணி உதுடடிஞடிtடிணிண வைப்பதை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஒரு வருடம் அல்லது ஒரு வருடத்திற்கு அதிகமாகவும் செய்யும்.

தமிழ்நாட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு ராமகிருஷ்ண - விவேகானந்த பாவ பிரச்சார் பரிஷத் பள்ளிகள், விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா, விவேகானந்தா எஜுகேஷனல் சொஸைட்டி போன்ற பல பள்ளி டைரிகளில் விவேகானந்தர் பொன்மொழி - படம் வெளியிட்டிருக்கிறார்கள். 2013-2014-ஆம் ஆண்டில் இது இன்னும் அதிகமாக இருக்கும்.

மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா 3.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 சொற்பொழிவு சுவாமி கமலாத்மானந்தர்

மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா இளைஞர் பண்பாட்டு பயிற்சி முகாம் 16.2.2013 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கல்லூரி மாணவிகள் கலந்துகொள்ளும் ஆளுமை வளர்ச்சிக்குரிய பயிற்சி முகாம் நடைபெறும். இதில் கலந்துகொள்வதற்கு நபர் ஒருவருக்குக் கட்டணம் ரூ 25, நடத்துபவர் சுவாமி கமலாத்மானந்தர்.

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)