Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> கவிதைகள், கடிதங்கள்,

சுவாமி அகண்டானந்தருக்கு எழுதிய கடிதம் ..ஜனவரி 11,2013

ஓம் நமோ பகவதே ராமகிருஷ்ணாய

காஜிபூர்
பிப்ரவரி 1890


உயிரினும் இனியவனே,
உன் கடிதம் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். திபெத் பற்றி நீ எழுதியுள்ள விவரங்கள் நம்பிக்கை தருபவையாக உள்ளன. நானும் அங்கு ஒரு தடவை போய்வர முயற்சிக்கிறேன். சம்ஸ்கிருத்தில் உத்தரகுரு வர்ஷம் திபெத் என்று அழைக்கப்படுகடறது. அது மிலேச்ச பூமியல்ல, மிக உயரமான நாடு, ஆதலால் கடுங்குளிர்ப் பகுதியாக உள்ளது. ஆனால் சிறிதுசிறிதாக அதைப் பழகிக்கொள்ள முடியும். திபெத் மக்களின் பழக்கவழக்கங்களைப் பற்றி நீ ஒன்றுமே எழுதவில்லையே? அவர்கள் அவ்வளவுதூரம் விருந்தினரை உபசரிப்பவர்களானால் ஏன் உன்னை உள்ளே போக விடவில்லை? நீண்ட கடிதத்தில் எல்லாவற்றையும் விரிவாக எழுதி அனுப்பு. நீ இங்கு வர முடியாததற்கு வருந்துகிறேன். உன்னைக் காண மிகவும் ஆவலாக இருந்தேன். மற்றவர்களைவிட உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று தோன்றுகிறது. போகட்டும். இந்த மாயையையும் அறுத்தெறிய நான் முயற்சி செய்ய வேண்டும்.

நீ கூறியுள்ள திபெத்தியரின் தந்திர சாதனைகள், புத்த மதம் இழிநிலை அடைந்தபோது இந்தியாவில் தோன்றியவை. நம்மிடையே நிலவிவருகின்ற அவை முதலில் பவுத்தர்களால் உருவாக்கப்பட்டவை என்றே நான் நினைக்கிறேன். நமது வாமாசாரத்தைவிட அந்தத் தந்திரக் கிரியைகள் அதிபயங்கரமானவை. (அவற்றில் தவறுகள் கட்டுக்கடங்காத அளவுக்கு இடம் பெற்றுள்ளன) இந்த ஒழுக்கக்கேடுகளின் மூலம் பவுத்தர்கள் பலமிழந்தபோதுதான் குமாரிலபட்டரால் விரட்டப்பட்டார்கள். துறவிகள் சங்கரரையும் பவுல்கள் சைதன்யரையும்பற்றி, அவர்கள் ரகசியமாகக் காமத்தில் ஈடுபட்டனர். மது அருந்தினர், அவர்கள் பல்வேறு கேவலமான நடத்தைகளை உடையவர்கள் என்றெல்லாம் கதைகட்டினர்,அதுபோல் இந்தக் கால தாந்திரீக பவுத்தர்கள் புத்ததேவரைக் கோரமான வாமாசாரி என்று கூறுவதுடன் பிரஜ்ஞாபார மிதா விலுள்ள தத்வ காதா முதலிய மிகமிக அழகிய பகுதிகளுக்கெல்லாம் ஆபாசமான உரையும் கூறுகிறார்கள். இதன் விளைவாக இப்போது பவுத்தர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டார்கள், பர்மியரும் சிங்களர்களும் பொதுவாகத் தந்திர முறைகளை மதிப்பதில்லை. அதேபோல் அவர்கள் இந்துத் தேவதேவியரையும் புறக்கணித்துவிட்டார்கள். மேலும் வட பிரிவு பவுத்தர்கள் உயர்வாக மதிக்கின்ற அமிதாப புத்தரையும் அவர்கள் அடியோடு விட்டுவிட்டார்கள். முடிவு என்னவென்றால் வட பிரிவினர் வணங்கும் அமிதாப புத்தர் மற்றும் பிற தேவர்கள் பிரஜ்ஞாபாரமிதா போன்ற நூல்களில் குறிபக்கப்படவில்லை. ஆனால் பல தேவதேவியர் வழிபாட்டிற்கு உரியவர்களாகப் பேசப்படுகின்றனர். தென் பிரிவினர் வேண்டுமென்றே சாஸ்திரங்களுக்கு மாறாக தேவதேவியரை ஒழித்துக் கட்டிவிட்டனர். அனைத்தும் பிறருக்காவே என்று கொள்கின்ற எந்த பவுத்த மதப் பிரிவு திபெத் முழுவதும் வியாபித்துக் காணப்படுகிறதோ, அது இக்கால ஐரோப்பியர்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. இதைப்பற்றி நான் சொல்ல வேண்டியது அனேகம் உள்ளது. இந்தக் கடிதத்தில் அதைச் சொல்வது இயலாது உபநிடதங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கும் மட்டும் என்று கூறப்பட்டிருந்த அதே மதத்தை புத்தர் அதன் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து சாதாரண மொழியில் பலருக்கும் கிடைக்கச் செய்தார். நிர்வாண நிலையைப் பிரச்சாரம் செய்ததில் அவருக்கு என்ன பெருமை? அவரது இணையற்ற கருணையில் அல்லவா உள்ளது அவரது மகிமை! அவரது மதத்திலுள்ள உயர்ந்த சமாதி நிலைகள் போன்ற பெருமையான அம்சங்களுள் அனேகமாக எல்லாமே வேதங்களில் உள்ளன. அங்கு இல்லாதவை அவரது மதிநுட்பமும் பரந்த இதயமுமே; அந்த அறிவிற்கும் இதயத்திற்கும் ஈடாக சரித்திரத்தில் இதுவரை எதுவும் தோன்றியதில்லை.

வேதங்களில் உள்ள சர்வமதம் யூத மதம் போன்ற மற்ற எல்லா மதங்களிலும் உள்ள கர்மவாதம் போன்றதே; அதாவது யஜ்ஞம் முதலான புறச் சாதனங்களைக் கொண்டு அகத்தூய்மை பெறும் முயற்சியே. பூமியில் இந்தக் கொள்கையை எதிர்த்து நின்ற முதல் மனிதர் புத்தரே. ஆனால் அந்தக் கொள்கையின் மூலக்கருத்தும் முறைகளும் முன்போலவேதான் இருந்தது. அவர் உபதேசித்த அகக் கர்மவாதத்தைப் பாருங்கள், வேதங்களுக்குப் பதிலாக ஸூத்ரங்களில் நம்பிக்கைகொள்ளச் சொன்னதைப் பாருங்கள். ஜாதியும் முன்போலவே இருந்தது; ஆனால் அது குணத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது(புத்தர் காலத்தில் ஜாதி வேறுபாடு மறையவில்லை) புத்த மதத்தை நம்பாதவர்கள் பாஷண்டர் (உணமை மதத்திற்குப் புறம்பானவர்) என்று கூறப்பட்டனர். பாஷண்டர் என்ற சொல் மிகவும் பழமையானது. ஆனால் ஒருபோதும் அவர்கள் வாள் ஏந்தியதில்லை. மிகவும் தாராளகுணம் படைத்தவர்கள் அவர்கள். தாக்கத்தின்மூலம் வேதங்களைத் தகர்த்தெறிந்தார்கள். ஆனால் உங்கள் மதத்தின் நிரூபணம் எது? என்று கேட்டால், எல்லா மதங்களையும்போல் நம்புங்கள் என்பார்கள்

அன்று அந்தக் கருத்து மிகவும் தேவையாக இருந்தது, அதனால்தான் புத்தர் அவதரித்தார். அவரது மாயாவாதம் கபிலருடையது போன்றதுதான். ஆனால் சங்கரருடையதோ இன்னும் எவ்வளவு பெருமையுடையதாக , அறிவுபூர்வமானதாக உள்ளது! புத்தரும் கபிலரும் உலகில் துன்பம், துன்பம் மட்டுமே; ஓடு விலகி ஓடு என்று கூறினர். இன்பம் அடியோடு இல்லவே இல்லையா என்ன? உலகில் எல்லாம் இன்பமயம் என்று பிரம்ம சமாஜத்தினர் கூறுவது போன்றதே இது. துக்கம்தான் அதற்கு என்ன செய்வது! ஒரு வேளை சிலர், துன்பத்தையே தொடர்ந்து அனுபவிக்கும் போது துன்பத்தையே இன்பமென உணரலாம் என்று கூறக்கூடும்.

சங்கரர் இந்த வழியில் வாதம் செய்யவில்லை. அவர் கூறுவதாவது; ஸன்னாபி அஸன்னாபி, பின்னாபி, அபின்னாபி,-பிரபஞ்சம் இருக்கிறது. ஆனால் இல்லை; அது பலவாக உள்ளது, ஆனால் ஒன்று, அதன் ரகசியத்தை நான் அறிந்துகொள்வேன். அதில் துன்பம் உள்ளதா, வேறு ஏதாவது உள்ளதா என்பதை அறிந்துகொள்வேன். வீண்பயத்தால் அதிலிருந்து விலகி ஓட மாட்டேன் ஆம், நான் அறிந்தே தீர்வேன். வழியில் வருகின்ற எல்லையற்ற துன்பங்களையும் முழுமனத்தோடு ஏற்றுக்கொள்வேன். வெறும் புலன்களால் வருகின்ற சுகம், துக்கம், மூப்பு. மரணம் இவற்றதல் பயப்பட நான் என்ன மிருகமா? நான் அறிந்தே இருக்கிறேன். இந்த உலகில் அறிவதற்கு எதுவும் இல்லை. ஆதலால், இந்தச் சார்புலகிற்கு அப்பால் ஏதாவது இருக்குமானால் எதை புத்தர் ப்ரஜ்ஞாபாரம் என்று குறிப்பிட்டாரோ, அப்படி ஒன்று இருக்குமானால், அதுவே எனக்கு வேண்டும். அவ்வாறு செய்வதில் துக்கம் வந்தாலும் சரி, சுகம் வந்தாலும் சரி நான் பொருட்படுத்தவில்லை. ஆகா எத்தனை உயர்ந்த சிந்தனை! எத்தகைய சிறந்த நோக்கம்! உபநிடதங்களின் பின்பலத்திலேயே புத்த மதம் எழுந்தது. அதே உபநிடத ஆதாரத்தின்மீதுதான் சங்கர வாதமும் எழுந்தது. ஆனால் புத்தரின் ஆச்சிரயமான இதயம் உள்ளதே, அதில் அணுவளவுகூட சங்கரரிடம் இல்லை. அவரிடம் இருந்ததெல்லாம் வறண்ட அறிவு மட்டுமே. தந்திரக் கிரியைகளைக் கண்டு அஞ்சி, பாமர மக்களைக் கண்டு அஞ்சில, காயத்தை ஆற்றும் முயற்சியில் கையையே வெட்டிவிட்டார் அவர். இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டுமென்றால், ஒரு பெரிய புத்தகமே எழுதியாக வேண்டும் ஆனால் அதற்கு வேண்டிய அறிவும் நேரமும் எனக்கு இல்லை.

புத்தரே என் பாதை, அவரே என் இறைவன், அவர் இறைவனைப்பற்றி எந்தக் கொள்கையையும் போதிக்கவில்லை, அவரே இறைவன் இதை நான் முழுமையான நம்புகிறேன். இறைவனை இது என்று சுட்ட யாராலும் முடியாது. தம்மை எல்லைக்கு உப்படுத்திக்கொள்ளும் சக்தி இறைவனுக்கே இல்லை. நீ ஸுத்த நிபாத் திலிருந்து கண்டார ஸுத்தத்தை மொழிபெயர்ந்து அனுப்பியுள்ளது மிக நன்றாகவுள்ளது. அதில் தனிய ஸுத்தம் என்று வேறொன்றும் உள்ளது. அதிலும் ஏறக்குறைய இதே கருத்து உள்ளது. தம்மபதத்திலும் இத்தகைய கருத்துகொண்ட பல பகுதிகள் உள்ளன. ஆனால் இவையெல்லாம் ஜ்ஞானம் மற்றும் விஜ்ஞான த்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய (ஞானத்தாலும் அனுபூதியாலும் திருப்தியடைந்து, எல்லா நிலைகளிலும் ஒரே தன்மையில், பொறிகளை வென்று வசப்படுத்தியவன்-கீதை 6.8) ஆகின்ற இறுதி நிலையில்தான் கிடைக்கும். யாருக்கு அணுவளவுகூட உடலுணர்வு இல்லையோ, அவன் மத யானையைப்போல் இங்குமங்கும் நடைபோடலாம்,. என்னைப்போன்ற அற்ப ஜீவனான ஒருவனோ, ஒரே இடத்தில் இருந்து சாதனை செய்து நிறைநிலையை அடைய வேண்டும். அதன்பிறகு இப்படியாகலாம் ஆனால் அது தூரத்தில் நெடுந்தூரத்தில் உள்ளது

சிந்தா சூன்யமதைன்யபைக்ஷ்யமசனம் பானம் ஸரித்வாரிஷு
ஸவாதந்தர்யேண நிரங்குசா ஸ்திதிரபீர்நித்ரா ச்மசானே வானே!
வஸ்த்ரம் க்ஷõலனசோஷணாதிரஹிதம் திக்வாஸ்து சய்யா மஹீ
ஸஞ்சாரோ நிகமாந்தவீதிஷு விதாம் க்ரீடா பரே ப்ரஹ்மணி
விமானமாலம்ப்ய சரீரமேதத்
புனக்த்யசேஷான் விஷயானுபஸ்திதான்
பரேச்சயா பாலவதாத்மவேத்தா
யோவ்யக்தலிங்கோனனுஷக்தபாஹ்ய
திகம்பரோ வாபி சிதம்பரஸ்த
உன்மத்தவத்வாபி ச பாலவத்வா
பிசாசவத்வாபி சரத்யவன்யாம்

பிரம்ம ஞானகக்கு முயற்சியின்றித் தானே உணவு தன் விருப்பப்படி இங்குமங்கும் சுற்றியலைகிறான். அவனுக்கு பயம் இல்லை. ஒருசமயம் காட்டிலும், ஒரு சமயம் மயானத்திலும் உறங்குகிறான். எந்தப் பாதையின் முடிவை வேதங்களும் காணவில்லையோ, அந்த வேதாதப் பாதையில் அவன் செல்கிறான். அவனது உடல் ஆகாயம்போல் உள்ளது. குழந்தையைப்போல் அவன் பிறர் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்கிறான் ஒரு சமயம் ஆடையின்றிக் கிடக்கிறான். ஒருசமயம் சிறந்த ஆடைகளை அணிகிறான். வேறொருசமயம் ஞானம் ஒன்றையே ஆடையாக ஏற்றுத் திகழ்கிறான். ஒருசமயம் குழந்தை போலவும், வேறொரு சமயம் பித்தன் போலவும் மற்றுமொரு சமயம் பிசாசு போலவும் நடந்துகொள்கிறான்

உனக்கு இத்தகைய நிலை வாய்க்க வேண்டுமென்றும், நீ காண்டாமிருகம் போன்று பயமற்று நடைபோட வேண்டுமென்றும் நான் நம் குருதேவரின் திருவடிகளைப் பிரார்த்திக்கிறேன்.

உனது
நரேந்திரன்

Bookmark and Share

மேலும் கவிதைகள், கடிதங்கள்,

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)