Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> கவிதைகள், கடிதங்கள்,

எவரையும் குறை சொல முடியாது (கவிதைகள்)ஜனவரி 11,2013

சூரியன் கீழே இறங்குகிறான்
கடரும் அவனது செங்கதிர்கள்
பேரொளி மயமாய்ப் பகலதனைப்
பிறங்கச் செய்தன பெரிதாக

சட்டெனப் பின்புறம் என்பார்வை
தாவிச் சென்றது; நான்பெற்ற
வெற்றிகள் தம்மை எண்ணியது
வெட்கம் மிகவும் எய்தியது

என்னைத் தவிர மற்றிங்கே
எவரையும் குறைசொல முடியாது

ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வில்
ஆக்கம் ஆழிவென நான் செய்யும்
ஒவ்வொரு செயலும் அதனதனின்
உரிய பலனைத் தருகிறது

சிறந்தவை சிறந்ததைத் தருகிறது
தீயவை தீயதைத் தருகிறது
நிறைந்தெழும் அலைக்கொரு வழியமைந்தால்
நிறுத்திடல் யார்க்கும் இயலாது

என்னைத் தவிர மற்றிங்கே
எவரையும் குறைசொல முடியாது

இங்கே என்றன் முன்நாட்கள்
எடுத்த உருவம் நானாகும்
அங்கே தானே எண்ணத்தின்
அமைப்புரு வாக்கப் பட்டுளது

மனத்தில் தோன்றும் விருப்பத்தை
மற்றங் கெழும்பும் எண்ணத்தை
இணைக்கும் வெளிப்புற அமைப்பாக
இங்குள் ளதுவே என்னுடலம்

என்னைத் தவிர மற்றிங்கே
எவரையும் குறைசொல முடியாது

நல்லன் பதனைச் செலு<த்தினமேல்
நல்லன் பாய்த்தான் திரும்பிவரும்,
பொல்லா வெறுப்போ வலிமையுடன்
பொங்கிப் பெருகி எதிர்நிற்கும்

அவைகள் அவற்றின் அளவுகளை
அளக்கும் பிறப்பும் இறப்புமெனும்
இவைகளின் மூலம் உரிமைகளை
என்பால் கேட்டு நின்றிருக்கும்

என்னைத் தவிர மற்றிங்கே
எவரையும் குறைசொல முடியாது

என்றன் பயத்தை, மனத்துயரை
எங்கோ வீசி எறிகின்றேன்
என்றன் கர்ம வினை அலைய
இதயத் திற்குள் உணர்கின்றேன்

இன்பம், துன்பம், இழிந்தபழி
இனிய புகழ்ச்சி எனும் வடிவில்
என்செயல் எழுப்பிய பேய்கள் எலாம்
எதிரில் நிற்பதை நோக்குகிறேன்.

என்னைத் தவிர மற்றிங்கே
எவரையும் குறைசொல முடியாது

நல்லது, கெட்டது, நல்லன்பு
நனிமகிழ் வோடு துயர்வெறுப்பு
எல்லாம் ஒன்றாய் இணைந்தபடி
என்றும் செல்லும் தன்மையன

துன்பம் ஏதும் கொள்ளாமல்
சுகத்தின் கனவு காண்கின்றேன்
என்பால் அந்த அரியசுகம்
என்றும் வருவது கிடையாது

என்னைத் தவிர மற்றிங்கே
எவரையும் குறைசொல முடியாது

அன்பும் வெறுப்பும் அகற்றுகிறேன்;
ஆருயிர் வாழ்க்கையின் வேட்கையிலேன்
என்றும் இறவா இறப்பினையே
என்னுளம் தனிலே விரும்புகிறேன்

உயிர்வாழ் விதனின் வேகத்தை
உயர் நிர்வாணம் தணிக்கிறது
அயலில் குறைசொலும் படியாக
யாரும் இல்லை, எனையன்றி

என்னைத் தவிர மற்றிங்கே
எவரையும் குறைசொல முடியாது


எவன்என் றென்றும் நிறைவாக
இலங்கும் ஆன்மா உடையவனோ
அவனே அவனே அவன் மனிதன்
அவனே அவனே அவன்இறைவன்

எவன்இருள் சூழ இரண்டகமாய்
இயங்கும் முறைகளை இகழ்பவனோ
அவனே அவனே அவன்முனிவன்
அவனே அவனே அவன்இறைவன்

அவன்மனம் நினைந்து குறிக்கோளை
அன்பாய் காட்டிச் சென்றானோ
அவனே அவனே அவன்மனிதன்
அவன்தரும் குறிக்கோள் இதுவன்றோ

இறப்பொரு சாபம், அதுபோல
இன்னுயிர் வாழ்வும் ஒருசாபம்
சிறப்பெது வென்றால் அவை வந்து சேரா தொழிந்த நிலைதானே

ஓம் நம பகவதே சம்புத்தாய
ஓம் நம தேவா விழித்தவனே!

Bookmark and Share

மேலும் கவிதைகள், கடிதங்கள்,

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)