Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> கவிதைகள், கடிதங்கள்,

சுவாமி விவேகானந்தர் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் எழுதிய கடிதம்!ஜனவரி 11,2013

தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் சுவாமி விவேகானந்தர் கேத்ரி அரசருக்கு பேலூர் மடத்திலிருந்து 22 நவம்பர் 1898 அன்று இவ்வாறு கடிதம் எழுதினார்:

பேலூர் மடம்
22 நவம்பர் 1898


மிக முக்கியமான எனது சொந்தப்பிரச்சனை ஒன்றைக்குறித்து நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் மனத்தில் உள்ளதை உங்களிடம் திறந்து சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இந்த வாழ்க்கையில் உங்களை மட்டுமே நான் என்னுடைய நண்பராக கருதுகிறேன்.

......என் மனதை அரித்துக்கொண்டிருக்கிற மகா பாவம் ஒன்று உள்ளது. உலகத்திற்கு சேவை செய்வதற்காக நான் என் தாயை வருந்தத்தக்க விதத்தில் புறக்கணித்ததே அது. ....எனவே இனி சில வருடங்களாவது என் தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் கடைசி விருப்பமாக உள்ளது. நான் என் தாயுடன் வாழ விரும்புகிறேன். ....இது எனது இறுதி நாட்களையும், என் தாயின் இறுதி நாட்களையும் மனதிற்கு இதமானதாக ஆக்கும். அவர் இப்போது ஒரு சிறு குடிசையில் வசிக்கிறார். அவருக்கு அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு சிறிய வீடாவது கட்டுவதற்கு விரும்புகிறேன்.

..........ஸ்ரீராமனின் ராஜ பரம்பரையில் வந்த ஒருவர் தாம் நேசிக்கின்ற, தாம் நண்பன் என்று அழைக்கின்ற ஒருவருக் ஏதாவது செய்வது பெரிய காரியமா? வேறு யாரிடம் கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. ஐரோப்பாவிலிருந்து கிடைத்த பணம், பணிக்காக தரப்பட்டது. ஏறக்குறைய அதன் ஒவ்வொரு பைசாவும் கொடுக்கப்பட்டு விட்டது. எனக்காக வேறு யாரிடமும் கேட்கவும் என்னால் இயலாது.

எனது குடும்ப விஷயங்களை உங்களிடம் மனம் திறந்து கூறி விட்டேன். இது வேறு யாருக்கும் தெரியக்கூடாது. நான் களைத்து விட்டேன். இதயம் துவண்டு விட்டது. உயிர் ஓய்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எனக்கு எவ்வளவோ தாராளமாக செய்திருக்கிறீர்கள். இந்த ஒன்றையும் கூட செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் மேலும் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். முடிந்தால் என் அன்னைக்க நிரந்தரமாக மாதம் ரூ.100 மட்டும் கொடுக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னும் அது தொடர வேண்டும். மேலும் மதிப்பிற்குரிய தங்களின் அன்பும் கருணையும் என்மீது எக்காரணத்தினாலாவது குறைந்தாலும், ஒரு காலத்தில் ஒரு ஏழைச் சாதுவிடம் தாங்கள் கொண்டிருந்த அன்பை நினைவில் கொண்டு என் எளிய தாய்க்கு அந்த உதவியை தொடர வேண்டும்.

உங்கள்
விவேகானந்த


என்று கேத்ரி மன்னருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Bookmark and Share

மேலும் கவிதைகள், கடிதங்கள்,

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)