Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

மேற்கு வங்காளத்தில் விவேகானந்தரின் 150 வது பிறந்த தின கொண்டாட்டம்!பிப்ரவரி 04,2013

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்தநாளை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றுவதற்காக மேற்கு வங்காளம் முதலமைச்சர் சில திட்டத்தினை அளித்துள்ளார்.

1. ஜனவரி 12 காலை (6.31மணிக்கு) சைரன் ஒளி முழக்கத்துடன் பாதுகாப்பு அதிகாரிகள் அணிவகுக்க வேண்டும்.

2. மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களும் சுவாமிஜியின் பிறந்த நாளான ஜனவரி 12 காலை (6.31மணிக்கு)அந்தந்த மதத்திற்குரிய இசை ஒளியுடன் அனுகூலமாக இணைந்திருந்து கொண்டாடவேண்டும்.

3. ஜனவரி 10 முதல் 12 வரை ஜங்கில் மஹாலில் யுபா உற்சவம் கொண்டாடவேண்டும்.

4. தொடர் ஓட்டபந்தயம் நடத்தப்படும். இதனை இரண்டு பாகமாக பிரித்து கோல் பார்கிலிருந்து ரவிந்திர சதன் மற்றும் காலேஜ் ஸ்கொயரிலிருந்து கொல்லட்டாவிலுள்ள சுவாமிஜியின் வீடு.

5. ஜனவரி 12 ஆம் தேதியை விவேக் திவாஸ் அல்லது யுபா திவாஸ் என்று அறிவிக்க வேண்டும்.

6. அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு அமர் பாரத் அமோர் பாரத் வழங்கவேண்டும். சுவாமிஜி எழுதிய கால் டூ தி நேஷன் என்பதை வங்காளதிற்கு மொழிபெயர்த்து அதனையும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு வழங்க வேண்டும்.

7. விவேகானந்தர் இருக்கை என்பதை அனைத்து மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்தில் அமைக்க வேண்டும்.

8. ஜீவிய சரித்திர சுருக்கத்தின் புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் வங்காளத்தில் வெளியிட வேண்டும்.

9. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் யுப சன்சாட்ஸ் அமைக்க வேண்டும். சிறந்த மனிதனாவது எப்படி மற்றும் எவ்வாறு
நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது என்று சன்மாட்ஸ் பாடதிட்டம் அமைய வேண்டும்.

10. எவ்வாறு நற்பண்புகளை அமைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்களும் விரிவுரையாற்ற வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகள் இதற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும். பள்ளி கல்வி மற்றும் உயர்நிலை பகுதி இதனையடுத்து தேவையான உத்தரவு அளிக்கப்படும்.

11. சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்தநாள் விழாவில் அனைத்து சங்கங்களும் கலந்துகொள்ள வேண்டும். என்.ஓய்.கே உட்படுத்த வேண்டும். இளமை மற்றும் விளையாட்டு துறைகள் ஒன்றாக கலந்து செயல்பாடுகளுக்குரிய திட்டம் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். செயல்பாடுகளுக்குரிய திட்டத்தினை 15 நாட்களுக்குள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

12. சிகாகோ விரிவுரை நாள் (11 செப்டம்பர், 2012) கொண்டாடப்படவேண்டும்.

13. இளைஞர் ஆலோசனை கூட்டம் தொகுதி அளவு, மாவட்ட அளவு, மாநில அளவு, தேசிய அளவு, உலக அளவு நடத்த வேண்டும். மாநில அளவிற்கான ஆலோசனை கூட்டம் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும். உலக அளவிற்கான ஆலோசனை கூட்டம் நேதாஜி ஸ்டேடியத்தில் 11 மற்றும் 12 ஜனவரி 2013 அன்று நடைபெறும்.

14. சுவாமிஜியின் பிறந்தநாள் ஆன ஜனவரி 11, 2012 , ஜனவரி 12,2012 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசாங்க விடுமுறையாக அளிக்கவேண்டும்.

15. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சொற்பொழிவு போட்டிகள் நடத்தவேண்டும். அதில் சிறந்த போட்டியாளருக்கு விவேக் புரஷ்கர் என்ற பட்டம் அளிக்கவேண்டும்.

16. ஹிமாசல் முதல் கன்னியாகுமரி வரை விவேக் யாத்ரா நடத்தவேண்டும். சொற்பொழிவு போட்டிகளில் அனைத்து மாநிலங்களில் வெற்றிபெற்றவர்கள் இந்த விவேக் யாத்ராவில் கலந்துகொள்ளலாம்.

17. மாநில அளவில் வெற்றிபெற்றவர்கள் சிகாகோவில் நடைபெறும் விழாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

18.சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாளை மாவட்ட அளவில், சப் டிவிசன் அளவில் மற்றும் பிளாக் அளவில் கொண்டாடப்படுவதற்கு மாவட்ட நீதிபதி, சப் டிவிசன் ஆபிசர்ஸ், பிளாக் டெவலப்மென்ட் ஆபிசர்ஸ் அறிவுரை குழுவில் பங்கேற்க வேண்டும்.

19. சிகாகோவில் அமைந்துள்ள விரிவுரை பொதுகூடம் மாதிரியாக கொல்கட்டாவிலும் ஒரு பொருட்காட்சி பொதுக்கூடம் அமைக்க வேண்டும்.

20. அனைத்து அரசு உயர் பணியாளர்களும் காவி மற்றும் வெள்ளை நிறத்தில் உடை அணியவேண்டும்.

Bookmark and Share

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)