Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

தேசிய இளைஞர் தினப் போட்டி 2013!பிப்ரவரி 19,2013

பங்கேற்ற கல்வி நிறுவனங்கள் 3,000 பங்கு பெற்றோர் 10 லட்சம், பரி பெற்றோர் 15,000

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் கடந்த 10 ஆண்டுகளாக சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை - தேசிய இளைஞர் தினத்தை அதன் முழுப் பொருளும் பொலியும் விதத்தில் கொண்டாடி வருகிறது. இந்த வருடத்திய 2013-க்கான போட்டியை சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் ஓர் அம்சமாக, பிரமாண்டமான முறையில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், தமிழகக் கல்வி நிறுவனங்கள், சேவாலயங்கள் ஆகியவை இணைந்து கொண்டாடுகின்றன.சுவாமிஜியின் அருளாசியுடன் போட்டிக்கு, அந்த மாமனிதரின் பல்வேறு தலைப்பிலான அன்பு, வீரம், நம்பிக்கை, சேவை, நாட்டுப்பற்று ஆகிய உன்னதங்களை சிந்தனையில் மின்சாரமாய்ச் செலுத்தும் 150 பொன்மொழிகள் தொகுக்கப்பட்டு கையேடுகளாகத் தயாரிக்கப்பட்டன. இந்தப் போட்டியின் வெற்றியை, சாதனையை நாங்கள் பல கட்டங்களில் உணர்ந்தோம். கடிதம் எழுதிப் பெற்றுக் கொள்ளலாம் என்று விஜயத்தில் வந்த ஒரு வரிக்குப் பல கல்வி நிறுவனங்களிலிருந்து நல்ல வரவேற்பு.தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள், பட்டி தொட்டிகளில் அமைந்த சின்னஞ்சிறு கிராமங்களிலிருந்தும் 10 லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கையேடுகள் - சுவாமிஜியின் செய்திகள் சென்றடைந்தன. இது போட்டியின் முதற்கட்ட வெற்றி.

அடுத்த மலைக்க வைத்த பகுதி. பங்கேற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 3000-க்கும் மேற்பட்டது. இது இரண்டாம் கட்ட வெற்றி இதில் கிராமப் புற நிறுவனங்கள் அநேகம். புதிய இந்தியா எங்கிருந்து எழும் என்று சுவாமிஜி கூறினாரோ அங்கெல்லாம் அவரது வீரமொழிகள் இளைஞர்களின் குரல்களில் ஒலித்தன. சென்னை மாநகராட்சி, குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 19 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியரைப் பங்கேற்கச் செய்துள்ளது. வறுமை காரணமாக, வீட்டு வேலை செய்பவர்கள், கட்டிட வேலைக்குச் செல்பவர்கள் போன்றோரின் குழந்தைகள் இப்பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர் விவேகானந்தர் பல்கலைக்கழகத்திலி ருந்து, பார்வையிழந்தவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள் போன்ற சிறப்புக் கல்வி பெறும் மாணவர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றுள்ளனர்.பரிசு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 15,000.இது மூன்றாவது கட்ட வெற்றி.சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை மாணவர்களிடம் பரப்புவதற்குத் தங்களுக்கு வாய்ப்பு அளித்து இப்புனிதப் பணியில் பங்கு கொள்ளச் செய்ததற்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு நன்றி தெரிவித்துத் தலைமை ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.பொழிச்சலூரைச் சேர்ந்த சாரதா ஈஸ்வர் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் சுவாமிஜியின் பொன்மொழிகளைத் தங்கள் பள்ளியின் மாணவ மாணவியர்க்குக் கட்டாயப் பாடமாக வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வந்த கடிதங்களில் சில: வீரமொழிகள், எங்கள் மாணவர்களின் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதியும்படி நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு எங்களின் பாராட்டுக்கள் தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழ்சாத்தமங்கலம், வந்தவாசி தாலுகா. போன்ற போட்டிகள் குழந்தைகளிடம் ஒழுங்கு, கட்டுப்பாடு, விடாமுயற்சி, சிந்தனை சக்தி வளர்கின்ற வாய்ப்பைத் தந்துள்ளது - எஸ்.பரமசிவம், தாளாளர், காசிலிங்கம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பப்பநாடு. அறிவித்து மாணவர்கள் மத்தியில் தேசப்பற்று, வீரம், கடமை, தியாகம், பணிவு போன்றவற்றைப் பள்ளிப்பருவத்திலேயே ஊட்டி மாணவ சமுதாயத்தி னருக்குத் தாங்கள் செய்யும் தொண்டு மிகச் சிறப்புக்குரிய ஒன்று - எஸ். பூங்கோதை, இலவச கல்வி மையம், புதிய தலைமுறை அறக்கட்டளை பூவனூர், லால்குடி. இப்போட்டியில் பெருமளவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த துவக்கப்பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் பங்கு பெற்றனர். முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மாணவ மாணவியரும் பெருமளவில் பங்கு பெற்று பரிசுகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 15,000 பரிசுகளை 15 நாட்களுக்குள்ளேயே அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியதில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து பக்தர்கள், மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. பனி சத்தம் இன்றியும், விழுந்த இடம் தெரியாம லும் உலகின் அழகிய மலர்களில் வீழ்ந்து அவற்றை மலரச் செய்கிறதோ, அவ்வாறே இந்தியாவின் ஆன்மிக ஆதிக்கமும் உலகம் முழுவதும் செயல்படுகிறது என்பது சுவாமிஜியின் வாக்கு. இதற்கு முன்னோடியாக சுவாமிஜியின் வீர உரைகள் இன்று தமிழகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. நாளை அகில உலகிலும் அதன் செல்வாக்கு பதியும்.

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)