Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

தலைமைப் பண்புகள் பிப்ரவரி மாத விவேகானந்தப் பயிற்சி!பிப்ரவரி 19,2013

சிறந்தவர்களை உருவாக்குவதற்கான வாழ்வியல் பயிற்சி: பிப்ரவரி 1- நீங்கள் மாணவர் என்றால், ஆசிரியர் கேட்கும் முன்பே, அல்லது உங்கள் பெற்றோர் கடிந்து கொள்ளும் முன்பே ஒர்க் முடித்து Responsible Leaderஆக மாறுவீர்களா?
பிப்ரவரி 2 - பள்ளியில், கல்லூரியில் சில இடங்களில் குப்பைகள் கிடக்கின்றன. நீங்கள் உங்களுடைய நண்பர்களையோ, தோழிகளையோ சேர்த்துக் கொண்டு அதைச் சுத்தம் செய்வீர்களா?அல்லது உங்கள் தெருவைச் சுத்தப்படுத்துவதில் நீங்கள் ஈடுபட்டு Team Leader ஆகி செய்து காட்ட முடியுமா?
பிப்ரவரி 3 - உங்கள் பள்ளியிலோ, அலுவலகத்திலோ யாருமற்ற இடத்தில் வீணாக விளக்குகள் எரிகின்றன. சேமிப்பு நாட்டின் பாதுகாப்பு போன்றது என்பதால் மின்விரயத்தைத் தடுப்பீர்களா?
பிப்ரவரி 4 - யாரோ ஒருவர் உங்கள் பகுதியின் கோயிலில், பள்ளியின் சுவற்றில் அசிங்கமான போஸ்டரை ஒட்டினால், பொறுப்பானவர்களுடன் சென்று அதனை நீங்கள் தடுப்பீர்களா?
பிப்ரவரி 5 - ஒரு பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ நம் நாட்டைப் பற்றியும், வரலாற்றைப் பற்றியும் யாரோ ஒருவர் ஒரு தவறான தகவலைத் தருகிறார். அதைக் கண்டித்துச் சரியான தகவலைக் கூறிப் பத்திரிகையில்Letters to the editor -க்கு எழுதுவீர்களா?
பிப்ரவரி 6 - நீங்கள் அலுவலகத்தில் பணி புரிபவர் என்றால், பணியில் உங்களுக்குள்ள பொறுப்பால், பணி புரியும்போது உங்களுக்கு தேவையில்லை என்று உங்கள் மேலதிகாரி நினைக்குமாறு செய்ய முடியுமா?
பிப்ரவரி 7 - கண்டபடி நடத்தும்போது, அலுவலகத்திலோ, பள்ளி, கல்லூரிகளிலோ யாரையாவது தாழ்வாக நடத்தும்போது, கிண்டலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகிறவருக்குத் தைரியத்தையும் ஏற்ற அறிவுரையும் தருவீர்களா?
பிப்ரவரி 8 - உங்களது அலுவலகத்தில் அல்லது பள்ளியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? அவர்களது நலனுக்காக இன்று ஏதாவது செய்வீர்களா? என்ன செய்தீர்கள் என்று குறிப்பிடுங்கள்.
பிப்ரவரி 9 - ஒருமுறை நரேனின் (சுவாமி விவேகானந்தர்) புவியியல் ஆசிரியர் வரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட நகரைச் சுட்டிக்காட்டுமாறு கூறினார். நரேன் சரியாகக் காண்பித்தார். அது தவறு என்று ஆசிரியர் தண்டித்தார். வீட்டிற்கு வந்து தன் தாயிடம் நடந்ததைக் கூறியதும் தாயார் இவ்வாறு கூறினார்: கண்ணே! உன் பக்கம் நியாயம் இருக்குமானால் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். நியாயத்தின் வழிகள் சில வேளைகளில் சிரமமானதாக, துன்பம் தருவதாக இருக்கலாம். ஆனால் நியாயம் என நீ கருதுவதைச் செய்ய ஒருபோதும் தயங்காதே பெற்றோர்களே! உங்கள் மகனோ, மகளோ இது போன்ற ஒரு நிலையில் சிக்கிவிட்டால் நீங்கள் விவேகானந்தரின் தாய்போல் உங்கள் பிள்ளைக்குத் தைரியம் தந்து Pragmatic leader ஆவீர்களா?
பிப்ரவரி 10 - சிலர் தெருக்களில் டூ-வீலர் மற்றும் காரில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் கோவில்கள் உள்ள பகுதிகளில்போகும் போதும் மிக வேகமாகச் சென்று தங்களது காட்டிக் கஷ்டப்படுத்துகிறார்கள். என்றும் அப்படிப்பட்டவனாக இருந்ததில்லை என்று நீங்கள் கூற முடியுமா?
பிப்ரவரி 11 - நீங்கள் வசிக்கும் பகுதி துர்நாற்றமும் குப்பைகளும் சாக்கடையுமாக உள்ளது. இன்று அதைச் சரிசெய்ய மக்களின் ஆதரவுடன் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து, Future Leader ஆவதற்கான துணிவு உங்களுக்கு உள்ளதா?
பிப்ரவரி 12 - நாட்டின் நலனுக்காகவோ, நமது சமுதாய நலனுக்காகவோ, மக்களுக்காகவோ அல்லது தனிமனித ஒழுக்கத்திற்காகவோ யாராவது ஒரு பத்திரிகையில் ஏதாவது நல்ல விஷயங்களை எழுதினால் அதைப் பாராட்டிக் கடிதம் எழுதுவீர்களா?
பிப்ரவரி 13 - ஓர் ஆசிரியர் 40 அல்லது 50 மாணவர்கள் உள்ள வகுப்பை நடத்துகிறார். அந்த இடத்தில் சிலர் ஒழுங்கின்றி நடந்து கொள்கிறார்கள். அங்கு நீங்கள் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்து Supportive Leader ஆக முடியுமா?
பிப்ரவரி 14 - இன்று வகுப்பிற்கு வராத மாணவனைத் தொடர்பு கொண்டு, காரணம் அறிந்து, இன்று வகுப்பில் நடந்ததைக் கூறி அவனை நாளைய வகுப்பிற்குத் தயார்படுத்த முடியுமா?
பிப்ரவரி 15 - பஸ்ஸில் போகும்போது வயதான ஒருவருக்கு நீங்கள் இடம் பிடித்துத் தருவீர்களா? அல்லது உங்களது இருக்கையை அவருக்காக வழங்குவீர்களா?
பிப்ரவரி 16 - உங்கள் பெற்றோர் உங்களிடம், எதற்கும் லாயக்கில்லை, நீ ஒரு தண்டச்சோறு என்றெல்லாம் திட்டுகிறார்கள். அப்போது கோபப்படாமல் அவர்கள் சொல்வது தவறு என்பதை நிரூபிக்க என்ன செய்வீர்கள்?
பிப்ரவரி 17 - உங்களது நண்பன் அல்லது சிநேகிதியின் வீட்டில் அவர்களது பெற்றோர் தங்கள் மகனையோ, மகளையோ என்று திட்டுகிறார்கள். அப்போது நீங்கள் அந்த நண்பனிடமோ, சிநேகிதியிடமோ சென்று அவர்கள் தங்களது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட உதவி செய்து Matured Leader ஆவீர்களா?
பிப்ரவரி 18 - பெற்றோர்களே, இன்று உங்களது மகனிடமோ, மகளிடமோ வீட்டின் ஒரு பொறுப்பைக் கொடுங்கள். உதாரணமாக, வீட்டைச் சுத்தம் செய்வது, மோட்டார், டியூப்லைட், மின்விசிறிகளைச் சுத்தம் செய்வது போன்றவற்றைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை எவ்வாறு முடிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவினீர்கள் என எழுதுங்கள்.
பிப்ரவரி 19 - மாணவனே, மாணவியே, ஏதோ ஒரு காரணத்தால் உங்களது அப்பாவிற்கு வர வேண்டிய பணம் தடைப்பட்டுள்ளது. அதனால் உங்களது பிறந்த நாளை, விசேஷ நாட்களைக் கொண்டாட முடியவில்லை. உங்களுக்கான ஆடை ஆபரணங்கள் வாங்கித் தர முடியவில்லை. அப்போது பெற்றோரின் மனக்குறையைப் புரிந்து கொண்டு உங்கள் தந்தைக்கு நீங்களே தைரியம் தர முடியுமா?
பிப்ரவரி 20 - சுவாமி விவேகானந்தர் இளைஞராக ஒரு உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது உதவ வந்த ஓர் ஆங்கிலேயர் மீது ஒரு பயிற்சி சாதனம் விழுந்து அவர் மயங்கிவிட்டார். உடனே அங்கிருந்த பலர் ஓடிவிட்டனர். இளைஞரான விவேகானந்தர் தமது நண்பர்களின் உதவியுடன் அவருக்கு மருத்துவ உதவி பெற்றுத்தந்தார். இதுபோல் Crisis Management - சமயத்தில் செம்மையாகச் செயல்படுவது உங்களது வாழ்வில் வந்துள்ளதா? எப்படி அதைச் சமாளித்தீர்கள்?
பிப்ரவரி 21 - உங்களது வகுப்பிலோ, உங்களது பகுதியிலோ சரியாகப் படிக்காத அல்லது பள்ளிக்குப் போகாத மாணவனுக்குச் சரியாகப் படிக்க வழிகாட்டுவீர்களா?
பிப்ரவரி 22 - இன்று உங்களது தெருவில், உங்களது நண்பர்கள், பெரியோர்களுடன் சேர்ந்து ஒரு நல்ல பொதுக்காரியத்தைப் பற்றி முடிவு செய்து அதனை முழுமையாகச் செயல்படுத்துங்கள். உதாரணமாக, சுவாமிஜியின் வீரமொழிகள் எழுத பொது இடத்தில் ஒரு தகவல் பலகை வைக்கலாம்.
பிப்ரவரி 23 - சுவாமி விவேகானந்தர் சிறுவனாக ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஓர் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி நாடக நடிகரைக் கைது செய்ய வந்தார்.அப்போது அனைவரும் பயந்து இருந்தபோது சிறுவனான விவேகானந்தர், வெளியே போ, நாடகம் முடிந்தபிறகு கைது செய் என்று உரக்கக் கத்தினார். பிறகு அனைவரும் அவ்வாறு குரல் எழுப்பியதால் ஆங்கிலேய போலீஸ் அடிபணிந்தது. முரட்டுத்தனமான அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் இதுபோன்ற ஒரு சூழ்நிலை உங்களது வாழ்வில் வந்துள்ளதா? வந்திருந்தால் அதனை எவ்வாறு சமாளித்தீர்கள்?
பிப்ரவரி 24 - மகாகவி பாரதியின் பாரதத்தினாய் வா, வா, வா பாடலை இன்று மனப்பாடம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
பிப்ரவரி 25 - உங்களது வீட்டில் இன்று நடக்கும் எல்லா வேலைகளையும் செய்ய முயற்சி செய்யுங்கள். (உதாரணம்: வீட்டைச் சுத்தம் செய்தல், கடைக்குச் செல்வது, பூஜை அறையைச் சுத்தம் செய்து அலங்கரிப்பது...)
பிப்ரவரி 26 - ஒரு தலைவனுக்குரிய பத்து தகுதிகளை எழுதி உங்களது ஆசிரியரிடமோ அல்லது நீங்கள் மதிக்கும் ஒருவரிடமோ காண்பித்து, கருத்து கேளுங்கள்.
பிப்ரவரி 27 - ஒரு நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்கிறீர்கள். அங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டில் நீர் தருகிறார்கள். அப்படிக் கொடுக்கும்போது பலரும் அதில் ஒரு பகுதியைக் குடித்துவிட்டு மிச்சத்தைக் கொட்டி விடுகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில், நீராதாரத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டுள்ள நீங்கள் உங்கள் தலைமைப் பண்பை அங்கு எப்படி வெளிப்படுத்துவீர்கள்?
பிப்ரவரி 28 - இன்று பிரபல விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் தமது விளைவு (Ramans Effect) கண்டுபிடித்த தினம். மேலைநாட்டிற்கு சர்.சி.வி.ராமன் சென்றபோது ஒரு விருந்தில் அவருக்கு பரிமாறப்பட்டது. ராமன் மறுத்தார். மற்றவர்கள் அன்புடன் வற்புறுத்தினர். அப்போது ராமன் want to see Raman effect in alcohol; not alcohol effect in Raman என்றார். சர்.சி.வி. ராமன் போல் எந்த இடத்திலும், எந்த நிர்ப்பந்தத்திலும், கொண்ட கொள்கைகளில் துணிவுடன் இருப்பீர்களா? அப்படி இருந்த அனுபவம் உண்டா?

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)