Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> வீர முழக்கம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்: 9 பிப்ரவரி 1897பிப்ரவரி 20,2013

நம் முன் உள்ள பணி: 9 பிப்ரவரி 1897 அன்று காலை திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

காலம் போகப்போக வாழ்க்கை என்னும் பிரச்சினை ஒவ்வொரு நாளும் ஆழமானதாகவும் அகன்றதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதன் உண்மையும் சாரமும் எது என்பது வேதாந்த உண்மை முதலில் கண்டுபிடிக்கப் பட்ட அந்த நாளிலேயே போதிக்கப்பட்டது - அது ஒருமை, வாழ்க்கையின் ஒருமை. பிரபஞ்சத்திலுள்ள ஓர் அணுக்கூடத் தனியே இயங்க முடியாது, அது தன்னுடன் இந்த உலகம் முழுவதையும் இழுத்துக்கொண்டு தான் இயங்க வேண்டும். உலகம் முழுவதும் தொடர்ந்து வராமல் எந்த முன்னேற்றமும் ஏற்பட முடியாது. நாடு, இனம் போன்ற குறுகிய கண்ணோட்டத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு கருத்தும் விரிந்துவிரிந்து உலகம் முழுவதையும் தன்னுள் கொள்ளத்தக்க அளவு விரிய வேண்டும். ஒவ்வொரு லட்சியமும் விரிந்து மனித குலம், இல்லை இல்லை, உயிர்க்குலம் முழுவதையும் உள்ளடக்கும் படி விரிய வேண்டும். அப்படி இல்லாததால் தான் நம் நாடு கடந்த சில நூற்றாண்டுகளாகத் தன் பண்டைய பெருமையை இழந்துவிட்டிருக்கிறது. இந்த இழிநிலைக்கான காரணங்களுள் ஒன்று நமது குறுகிய கண்ணோட்டமாகும்; நமது செயல்களின் எல்லை குறுகிவிட்டதாகும்.

ஒரே இனத்திலிருந்து இரண்டு விசித்திரமான நாடுகள் எழுந்தன. அவை நிலைபெற்றது வெவ்வேறான சூழ்நிலையிலும் இயற்கை அமைப்பிலும் ஆகும். வாழ்க்கை பிரச்சினைகளையும் அவை தங்களுக்கே உரிய தனி வழிகளிலேயே தீர்க்க முனைந்தன. புராதனமான இந்து மற்றும் கிரேக்க இனங்களையே நான் குறிப்பிடுகிறேன். வடதிசையில் பனி படர்ந்த இமயமலை, சம நிலத்தில் பொங்கும் கடல்போல் சுற்றிலும் பாய்ந்த நன்னீர் ஆறுகள், உலகின் எல்லை வந்துவிட்டதோவென நீண்டு பரந்து கிடந்த அடர்ந்த காடுகள் இவையெல்லாம் நாற்புறமும் கட்டுப்படுத்தியபோது இந்திய ஆரியனின் பார்வை அகமுகமாகியது. இதனுடன் அவனது இயல்பான உள்ளுணர்ச்சி, கூர்த்த நுண்ணறிவு, அவனைச் சுற்றிச் சூழ்ந்து கிடந்த இயற்கையழகு இவையெல்லாம் சேர்ந்து அவனைத் தனக்குள்ளேயே மூழ்குகின்ற சிந்தனையாளனாக மாற்றின. சொந்த மனத்தை ஆராய்வது இந்தோ- ஆரியனின் மகத்தான நோக்கமாக இருந்தது. மாறாக, கிரேக்கர்கள் இயற்கை எழில் கொஞ்சித் தவழும் கிரேக்கத் தீவுகளில் குடியேறினார்கள். சூழ்ந்து கிடந்த இயற்கை, அவர்கள் மனத்தில் நுண்ணுணர்வுகளைவிட அழகுணர்ச்சியையே தட்டியெழுப்பியது; அது எல்லையற்றுப் பரந்து கிடந்தாலும் எளிமை நிரம்பியதாக இருந்தது. எனவே அவர்கள் மனம் புறத்தை நாடியது, புறவுலகை ஆராய விழைந்தது.

இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியாவிலிருந்து, பகுத்தறிவும் விஞ்ஞானங்களும், கிரீஸிலிருந்து பொதுமைப்படுத்தும் விஞ்ஞானங்களும் தோன்றின. இந்துவின் மனம் தன் சொந்த வழியிலேயே சென்று அற்புதமான பலன்களைக் கண்டது. இன்றும்கூட இந்துவின் வாதத் திறமையும் அவனது மூளையின் மாபெரும் ஆற்றலும் ஈடிணையற்றதாகவே உள்ளன. போட்டி என்று வருமானால் நம் இளைஞர்கள் உலகிலுள்ள எந்த இளைஞர்களையும் வெல்வார்கள் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தத் தேசிய வலிமை இன்று ஒடுங்கிவிட்டது. ஒரு வேளை முகமதியர் இந்தியாவை வெல்வதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த வீழ்ச்சி நேர்ந்திருக்கலாம். அப்போது நமது இந்தத் தேசியப் பண்பைக் குறித்து அவ்வளவு ஆரவாரம் செய்யப்பட்டது, அதுவே அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

அந்த வீழ்ச்சியின் அடையாளங்களை, இந்தியாவின் கலை, இசை, விஞ்ஞானம் என்று ஒவ்வொன்றிலும் நாம் இன்றும் காண முடிகிறது. இன்றைய கலையில் பரந்த நோக்கு இல்லை, ஒழுங்கு இல்லை நுண்ணுர்வுகளின் வெளிப்பாடு இல்லை, வெறும் பகட்டும் ஆடம்பரமும் மேலோங்கிய ஒரு நிலைமை தற்போது உள்ளது. இந்த இனத்தின் தனித்தன்மை அழிந்துபோய் விட்டதைப் போல் தோன்றுகிறது. இசையிலும் அதுபோலவே. புராதன இசைமரபில் இருந்தது போன்ற, ஆன்மாவைக் கிளர்ந்தெழச் செய்கின்ற கருத்துக்கள் இல்லை, தன் சொந்த அமைப்பில் நின்று அற்புதமான இசைவு எழுப்பக்கூடிய ராகங்கள் இல்லை. ஒவ்வொரு ராகமும் தன் தனித்தன்மையை இழந்துவிட்டது. தற்கால இசை, ராகங்களின் வெறும் கலப்படமாகவும் குழப்பக் கலவையாகவுமே உள்ளது. இசையின் தரம் தாழ்ந்து விட்டதையே இது காட்டுகிறது. உங்கள் லட்சியக் கருத்துக்களை ஆராய்ந்தால் அங்கும் இதே நிலைமைதான் - தனித்தன்மையை இழந்து, வெறும் வார்த்தை ஜாலங்களாக மாறிவிட்ட நிலைமை. உங்கள் சிறப்புத் துறையான மதத்திலோ மிகவும் பயங்கரமான வீழ்ச்சியே தென்படுகிறது. தண்ணீரை வலது கையால் குடிப்பதா, இடது கையால் குடிப்பதா என்பன போன்ற அதிமுக்கியமான பிரச்சினைகளை விவாதிப்பதில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சுறு சுறுப்பாக ஈடுபட்டிருந்த ஓர் இனத்திடமிருந்து வேறு நாம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? நாட்டின் மிகச் சிறந்த மேதைகள், நூற்றாண்டுகளாகச் சமையலறையைப் பற்றியும், நான் உங்களைத் தொடலாமா, நீங்கள் என்னைத் தொடலாமா, அப்படித் தொட்டுவிட்டால் என்ன பிராயச்சித்தம் என்பது பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்த இனத்திற்கு அதைவிடப் பெரிய சீரழிவு வேறென்ன வேண்டும். வேதாந்தக் கருத்துக்களும், இதுவரை பூமியில் போதிக்கப்பட்டவற்றுள் நிகரற்றவையான இறைவன், ஆன்மா பற்றிய அதிநுண்மையான மகத்தான கோட்பாடுகள் ஏறக்குறைய தொலைந்துவிட்டது போல்தான். ஏதோ காடுகளில் முடங்கி, ஒரு சில துறவியரால் அவை காக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மீதிப் பகுதியினர், ஒருவரை ஒருவர் தொடுவது, உடை, உணவு போன்ற அதிமுக்கியமான விஷயங்களை விவாதிப்பதில் காலத்தைக் கழிக்கின்றனர்.

மிகக் கீழானவனும் மிக உயர்ந்தவனுக்குச் சிலவற்றைக் கற்பிக்க முடியும். முகமதியர்களின் ஆக்கிரமிப்பு சந்தேகமின்றி, நமக்குப் பல நல்லவற்றைத் தந்துள்ளது, ஆனால் நம் இனத்திற்கு அதனால் உத்வேகத்தைத் தர முடியவில்லை. நல்லதற்கோ கெட்டதற்கோ அதன்பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தனர். ஆக்கிரமிப்பு என்பதே கெட்டதுதான். ஏனெனில் ஆக்கிரமிப்பு ஒரு தீமை, அன்னிய அரசாங்கம் ஒரு தீமை. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் சிலவேளைகளில் தீமைமூலமும் நன்மை வரவேசெய்கிறது. ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பினால் விளைந்த நன்மை இதுதான்; இங்கிலாந்து, இல்லை இல்லை, ஐரோப்பா முழுவதுமே இப்பொழுது பெற்றிருக்கின்ற நாகரீகத்திற்காக கிரீஸிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொன்றின் மூலமும் கிரீஸ்தான் பேசுகிறது. ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு பொருளும் கீரீஸின் முத்திரையையே கொண்டுள்ளது. ஐரோப்பியர்களின் விஞ்ஞானமும் கலையும் கிரேக்கர்களுடையதே. இன்று புராதன கிரேக்கன் புராதன இந்துவை இந்திய மண்ணில் சந்திக்கிறான். இவ்வாறு நிதானமாக அமைதியாக உத்வேகம் மிக்கச் சூழ்நிலை வந்து சேர்ந்துள்ளது. இந்தச் சக்திகள் ஒன்றுசேர்ந்துதான், நாம் நம்மைச் சுற்றிக் காண்கின்ற விசாலமானவையும், உயிர்த் துடிப்பைத் தருபவையுமான மறுமலர்ச்சி இயக்கங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளன. வாழ்வு பற்றிய மேலும் தாராளமான விரிந்த கருத்து நம் முன் உள்ளது. முதலில்நாம் சற்று குழம்பி, எல்லாவற்றையும் குறுக்கிக் கொள்ள முயன்றோம். ஆனால் இன்று நம்மைச் சுற்றி இயங்கி வருகின்ற மறுமலர்ச்சி இயக்கங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பரந்த கோட்பாடுகள் எல்லாமே நமது பழைய நூல்களில் உள்ள கருத்துக்களைத் தர்க்க ரீதியில் வெளிப்படுத்தும் முயற்சியே என்பதை அறிந்து விட்டோம். நம் சொந்த முன்னோர்கள் கொண்டிருந்த அடிப்படைக் கருத்துக்களைக் கட்டுக்கோப்பான தர்க்க ரீதியில் வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளே அவை. பரந்த மனப்பான்மை பெறுவது, பிற நாடுகளுக்குச் செல்வது, மற்றவர்களோடு கலப்பது, நம் கருத்துக்களை உலகம் தழுவியதாக அமைப்பது இவையே நம் லட்சியத்தின் எல்லை. ஆனால் எப்போதுமே நாம் நமது சாஸ்திரங்களின் திட்டங்களுக்கு மாறாக, நம்மை மேலும் மேலும் சிறு சிறு கூட்டமாக ஆக்கிக் கொள்வதற்கே முயன்று கொண்டிருக்கிறோம்; மற்றவர்களோடு பழகுவதிலிருந்து விலகி வருகிறோம்.

இதனால் பல அபாயங்கள் நேர்ந்துள்ளன. நாம் தான் உலகத்திலேயே சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அது அவற்றுள் மிக மோசமான ஒன்று. நான் இந்தியாவை நேசிக்கிறேன், தேசப் பற்றுடையவன் நான், முன்னோர்களிடம் மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனாலும் நாம் பிற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன என்று நினைப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. பிறருடைய காலடியில் அமர நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் நமக்கு மகத்தான பாடங்களைப் போதிக்க முடியும். இதை மறக்கக் கூடாது.

நமது சமுதாயச் சட்டங்களை அமைத்தவராகிய மனு, இழிந்த குலத்தில் பிறந்தவரிடமிருந்தாயினும் சிறிது நல்லறிவு பெற்றுக் கொள்ளுங்கள். மிகத் தாழ்ந்த பிறவியாளருக்கும் சேவை செய்து சொர்க்கம் செல்லும் பாதையை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். எனவே மனுவின் உண்மையான பிள்ளைகளான நாம் அவரது கட்டளைக்குப் பணிந்து, இந்த வாழ்வு மற்றும் மறு வாழ்வு பற்றிய பாடங்களை நமக்கு போதிக்க கூடிய யாரிடமிருந்தேனும் கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலகத்திற்கு மகத்தானதொரு பாடத்தை நாம் போதிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகின் தொடர்பு இல்லாமல் நாம் வாழ முடியாது; வாழ முடியும் என்று நினைப்பது நமது முட்டாள்தனம். அதற்கான தண்டனையாகத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அடிமை வாழ்வை அனுபவிக்கிறோம்.

நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை, நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் கவனிக்கவில்லை. இந்தியா மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணம். அதற்கான தண்டனையை நாம் பெற்றுவிட்டோம், இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம். இந்தியர்கள் வெளியே போகக் கூடாது என்பது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் சிறுபிள்ளைத் தனமானவை. அத்தகைய கருத்துக்களின் தலையில் ஓங்கி அடிக்க வேண்டும். நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்க்கு பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்க்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது. இதை நீங்கள் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இன்று நீங்கள் உங்களை ஆள விரும்பும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடிமையாக அவைகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கமாட்டீர்கள். வாழ்வின் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற முதல் அடையாளம் - விரிவடைதல். நீங்கள் வாழ வேண்டுமானால் கட்டாயம் விரிவடைய வேண்டும். நீங்கள் விரிவடையாமல் நிற்கின்ற அந்தக் கணமே மரணம் உங்கள் தலைக்கு வந்துவிட்டது; ஆபத்து அருகில் வந்துவிட்டது.

நான் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்க்கும் சென்றேன். அதற்காக நீங்கள் என்னைக் கனிவுடன் பாராட்டினீர்கள்.நான் போகத்தான் வேண்டும் ஏனெனில் அதுதான் நம் தேசிய வாழ்வினுடைய விரிவின், மறு மலர்ச்சியின் முதல் அடையாளம், தன்னுள் விரிந்து மலர்ந்த இந்தத் தேசிய வாழ்க்கை, இங்கிருந்து என்னை வெளிநாடுகளுக்குத் தூக்கி எறிந்தது.ஆயிரக்கணக்கானோர் இவ்வாறே தூக்கி எறியப்படுவர். என் வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள் - இந்த நாடு வாழ்ந்தாக வேண்டுமென்றால் இது நடந்தாக வேண்டும். தேசிய வாழ்வின் மகத்தான மறுமலர்ச்சியின் அடையாளமான விரிவின் மூலமாக, அதாவது நம் மனம் இவ்வாறு விரிவடைந்து, நாம் மேலைநாடுகளுக்குச் செல்வதன் மூலமாக, மனித சமுதாயத்தின் பொதுவான வளர்ச்சிக்கு நமது பங்கை அளிக்க முடியும், உலகின் பொதுவான வளர்ச்சிக்கு நமது கொடையை வழங்க முடியும்.

வாழ வேண்டுமானால் ஒவ்வொரு நாடும் நிச்சயம் எதையாவது கொடுத்தேயாக வேண்டும். உயிர் கொடுத்தால் உயிர்பெறலாம். நீங்கள் ஒன்றைப் பெற்றால் மற்றவர்க்கு வழங்குவதன் மூலம் அதற்கான விலையை அளிக்க வேண்டும். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பது நிதரிசனமான உண்மை. அது எப்படி? அறிவிலிகள் எதையாவது நினைத்து விட்டுப் போகட்டும், நாம் வாழ்ந்து வருவதற்கான காரணம் நாம் வெளியுலகிற்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். மதம், தத்துவம் , ஞானம், ஆன்மீகம் இவையே உலகிற்கு இந்தியா வழங்கும் கொடை. மதம் பிற நாடுகளுக்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தப் படைகளின் அணிவரிசைகள் தேவையில்லை. ரத்த வெள்ளங்கள் மூலம் ஞானமும் தத்துவமும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதில்லை ரத்தம் பீறிடக் கிடக்கின்ற மனித உடம்புகளின் மீது அணிவகுத்து ஞானமும் தத்துவமும் செல்வதில்லை. வன்முறையின் துணையோடு அவை செல்வதில்லை அமைதி, அன்பு ஆகிய இறகுகளை விரித்தே அவை செல்கின்றன. எப்போதும் இப்படித்தான் நடந்து வந்துள்ளது. மேலும் இது புதிதான ஒரு விஷயமும் அல்ல. இந்துக்கள் எப்போதும் தங்கள் நாடாகிய நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்தார்கள் என்று உங்களுள் யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் பழைய நூல்களைப் படிக்கவில்லை, இந்த நாட்டு மக்களின் வரலாற்றைச் சரியாகப் படிக்கவில்லை.

எனவே நாம் கொடுத்தாக வேண்டியிருந்தது. நான் லண்டனில் இருந்தபோது ஓர் ஆங்கிலேய இளம்பெண் என்னிடம், இந்துக்களாகிய நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒரு நாட்டைக்கூட நீங்கள் இதுவரை வெல்ல வில்லையே? என்று கேட்டாள். வீரமும் தீரமும் உடைய க்ஷத்திரியர்களான ஆங்கிலேயர்களுக்கு இந்தக் கேள்வி சரிதான். ஒருவனை மற்றவன் வெல்வதுதான் அவர்களைப் பொறுத்தவரை பெருமைக்கு உரியது. இது அவர்களின் கண்ணோட்டத்தில் சரியானது. ஆனால் நம் கண்ணோட்டம் இதற்கு மாறானது. இந்தியாவின் பெருமைக்கான காரணம் என்னவென்று என்னையே நான் கேட்டுக்கொண்டால், நாம் எப்போதும் யாரையும் வெல்லாததே , என்றுதான் பதில் சொல்வேன். அதுதான் நமது பெருமை. சிலவேளைகளில் அரைகுறை ஆசான்கள் சிலர், நமது மதத்தைப்பற்றி, அது பிறரை வெல்கின்ற மதமாக இல்லை என்று குறை கூறுவதை நீங்கள் தினமும் கேட்கிறீர்கள். அவர்கள் கூறுகின்ற குறைதான் என்னைப் பொறுத்தவரையில் நமது நிறை. நமது மதம் பிற மதங்களைவிட உண்மையாக இருப்பதற்கான காரணம், அது எப்போதும் யாரையும் வெற்றி கொள்ளவில்லை.அது ஒருபோதும் ரத்தம் சிந்தவில்லை; அதன் உதடுகளிலிருந்து வாழ்த்துச் சொற்களே, அமைதியும் அன்பும் கனிவும் நிறைந்த வார்தைகளே எப்போதும் வந்தன. இங்கு மட்டும் தான் சகிப்புத் தன்மைபற்றிய லட்சியங்கள் முதலில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இங்கு மட்டும்தான் சகிப்புத் தன்மை, அனுதாபம் முதலியவை செயல்படுத்தப்பட்டன. மற்ற எல்லா நாடுகளிலும் இவை வெறும் கொள்கை அளவில்தான் இருக்கின்றன. இங்கு, இங்கு மட்டுமே இந்துக்கள் முகமதியர்களுக்கு மசூதிகளையும், கிறிஸ்தவர்களுக்குச் சர்ச்சுகளையும் கட்டுகிறார்கள்.

எனவே நம்முடைய செய்தி பலமுறை வெளியுலகிற்குச் சென்றிருக்கிறது. ஆனால் நிதானமாக அமைதியாக பிறர் தெரிந்து கொள்ளாதவகையில் சென்றிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொன்றும் இவ்வாறே நடைபெறுகிறது. இந்திய சிந்தனையின் ஒரு பண்பு அதன் மௌனம், அதன் அமைதி. அதே வேளையில் வன்முறையின் மூலம் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத மாபெரும் ஆற்றல் அதன் பின்னால் இருக்கிறது. அமைதியாகப் பிறர் மனத்தை வசீகரிப்பதே எப்போதும் இந்தியச் சிந்தனையின் தன்மை.

வெளிநாட்டினர் நம் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினால், முதலில் அவர்களுக்கு அது சலிப்பை அளிப்பதாக உள்ளது. பிற நாட்டு இலக்கியங்களைப் போல், உடனடியாக மனத்தை எழுச்சி பெறவோ கிளர்ச்சி பெறவோ செய்யும் தன்மை அவற்றில் இல்லை. ஐரோப்பாவின் சோக காவியங்களை நமது சோக காவியகளுடன் ஒப்பிடுங்கள். முன்னது முழுக்கமுழுக்கச் செயல் வேகம் நிறைந்தது, படிக்கும்போது உங்கள் மூளையிலிருந்து மொத்தமாகக் கழுவப்பட்டுவிடுகிறது. இந்தியச் சோக இலக்கியங்களோ ஒருவித மயக்கும் சக்தி உடையது, அமைதியானது, இதமானது; நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் , உங்களை அவை அப்படியே வசீகரித்துவிடும், உங்களால் நகர முடியாது, நீங்கள் கட்டப்படுவீர்கள். நம் இலக்கியங்களைத் தைரியமாகத் தொடுபவர்கள் அந்தப் பந்தத்தை உணர்கிறார்கள்; என்றென்றைக்குமாக அதில் கட்டப்பட்டு விடுகிறார்கள்.

மெல்லென பனி பெய்கிறது, அதை யாரும் காண்பதில்லை, கேட்பதுமில்லை எனினும் அழகிய ரோஜாக்களை அது எவ்வளவு அற்புதமாக மலரச் செய்து விடுகிறது! ! சிந்தனையுலகத்திற்குத் தன் நன்கொடையை இந்தியா வழங்கியதும் இவ்விதமே. மௌனம் யாரும் அறிய முடியாததுதான், எனினும் விளைவுகளைத் தருவதில் எல்லாம் வல்லது. உலகச் சிந்தனையையே அது மாற்றி உள்ளது. ஆனால் இது எப்போது நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இந்திய சாஸ்திரங்களை எழுதியவர்களின் பெயர்களை உறுதி செய்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது ! என்று என்னிடம் ஒரு முறை சொன்னார்கள் .அதுதான் இந்தியாவின் கொள்கை என்று நான் சொன்னேன். பிறர் எழுதியதிலிருந்து தொண்ணூறு சதவீதத்தைத் திருடி, பத்து சதவீதம் சொந்தக்கத்தையும் சேர்த்து, முன்னுரையில் மட்டும், இவை என் சொந்தக் கருத்துக்கள் என்று எழுதுகின்ற தற்கால எழுத்தாளர்கள். மனித குலத்தின் இதயத்தில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற அந்த மாபெரும் சிந்தனையாளர்கள். தங்களை ஆசிரியர் என்று அறிவித்துக் கொள்ளாமல் நூல்களை மட்டும் எழுதுவதில் திருப்தி கண்டார்கள். அந்த நூல்களைச் சந்திக்கு விட்டுவிட்டு அமைதியாக மறைந்து போனார்கள். நமது தத்துவங்களை எழுதியவர் யார்? நமது புராணங்களை எழுதியவர்கள் யார் ? யாருக்குத் தெரியும்? அத்தனைபேரும் பொதுப் பெயர்களான வியாசர், கபிலர் போன்ற பெயர்களின் கீழ் மறைந்து போனார்கள் . அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் உண்மையான குழந்தைகள், அவர்கள் கீதையை உண்மையாகப் பின் பற்றுபவர்கள்; வேலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு, அதன் பலனில் இல்லை என்ற மகத்தான ஆணையை நடைமுறையில் வாழ்ந்து காட்டியவர்கள்.

இவ்வாறு இந்தியா உலகின் மீது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும். கருத்துக்கள் எவ்வாறு பரவும் ? வியாபாரத்திற்கான சரக்குகள்போல், அவையும் மற்றவர்களால் உண்டாக்கப்பட்ட வழியில்தான் செல்ல முடியும். சிந்தனைகளும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்க்குப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். எப்போதெல்லாம் உலக வரலாற்றில் பெரியசாம்ராஜ்யங்கள் தோன்றி, உலக நாடுகளை வென்று அவற்றை இணைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த இணைப்புப் பாதை வழியாக இந்தியக் கருத்துக்கள் பாய்ந்து, ஒவ்வோர் இனத்தின் ரத்தத்திலும் கலந்துள்ளது. பௌத்தர்கள் தோன்று முன்னரே, இவ்வாறு இந்தியச் சிந்தனைகள் உலக நாடுகளுள் ஊடுருவிச் சென்றதற்கான ஆதாரங்கள் ஓவ்வொரு நாளும் கிடைத்தவண்ணம் உள்ளன. புத்த மதத்திற்கு முன்னாலேயே சீனா, பாரசீகம் மற்றும் கீழைத் தீவுகளில் வேதாந்தம் பரவி இருந்திருக்கிறது. பின்னர் கிரீஸின் மகத்தான சிந்தனைகள் கீழ்த்திசை உலகின் பல்வேறு பகுதிகளை இணைத்த போது இந்தியச் சிந்தனைகள் மறுபடியும் பரவத் தொடங்கின. இன்று தன் நாகரீகத்தை பற்றி இவ்வளவு பெருமையடித்துக் கொள்கின்ற கிறிஸ்தவ மதம், இந்தியச்சிந்தனைகளுடைய சின்னஞ்சிறு துணுக்குகளின் சேர்க்கையே தவிர வேறல்ல. நமது மதம் எவ்வளவு மகிமை வாய்ந்தது தெரியுமா! எவ்வளவோ பெருமை வாய்ந்த புத்த மதம் இருக்கிறதே, அது நம் மதத்தின் வெறும் ஒரு துடுக்குக் குழந்தை மட்டுமே! கிறிஸ்தவமதமோ நமது சில சிந்தனைத் துனுக்குகளை இணைத்து ஒட்டுபோடப்பட்ட ஒரு போலி மட்டுமே.

இந்தச் சுற்றுக்களில் ஒன்று மறுபடியும் வந்துள்ளது. இங்கிலாந்தின் மகத்தான ஆற்றல் உலகத்தின் பல்வேறு பகுதிகளை இணைத்திருக்கிறது. ஆங்கிலேயரின் பாதைகள் ரோமப் பேரரசின் பாதைகளைப்போல் நிலங்களில் ஓடுவதுடன் மட்டும் திருப்தி அடைய வில்லை, அவர்கள் கடலின் உள்ளேயும் எல்லா திசைகளிலும் நுழைந்துள்ளார்கள். எல்லா கடல்களிலும் இங்கிலாந்தின் பாதைகள் செல்கின்றன. உலகத்தின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் புதிய தூதனைப்போல் மிக அற்புதமான காரியங்களைச் செய்கிறது.

மேலும் வீர முழக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)