Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

அனைவரும் விவேகானந்த பயிற்சியில் பங்கேற்கலாம்!மார்ச் 27,2013

இளைஞர்களே! மாணவ மாணவிகளே! ஆசிரியர்களே! தாய்மார்களே! நீங்கள் அனைவரும் இந்த விவேகானந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ஆனால் மனதை ஒருமுகப்படுத்தத் தெரியாததால் பலரும் தங்கள் வெற்றிகளைச் சந்திக்காமலேயே போகிறார்கள். வாழ்க்கையில் வந்து செல்லும் தோல்விகளை எல்லாம் தங்களுக்கு வாய்த்ததாகவே கருதிக் கவலையில் சிக்கிவிடுகின்றனர். மாணவன் மனமொன்றிப் படிக்காததால், படித்த பாடத்தையே திரும்பத் திரும்பப் படிக்கின்றான். அதனால் அவனுக்கு போரடிக்கிறது. சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: பொருத்தவரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால் ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மனஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக் கொண்டு, பின் அந்தப் பூரணமான கருவியால் நான் விரும்பும் போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன் இவ்வளவு முக்கியமான மனஒருமைப்பாட்டை இந்த மாதத்து ஙடிதிஞுடுச்ணச்ணஞீச் -விவேகானந்தப் பயிற்சியாக நாம் செய்வோமா? நீங்கள் தினமும் செய்ய வேண்டியவை கீழே தரப்பட்டுள்ளன. செய்ய முடிந்ததை 4 போட்டும், செய்ய முடியாததை து இட்டும் உண்மையாகக் குறிப்பிடுங்கள். 4 வாரப் பயிற்சிகளை முடித்து, இதன் தொடர்பாக நீங்கள் செய்த வேறு நல்ல பணிகளையும் ஏப்ரல் 5-க்குள் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.பயிற்சியை முழுமையாகச் செய்தும், அதைத் தவிர, இப்பயிற்சித் தொடர்பாக நீங்கள் செய்த வேறு நல்ல, பாராட்டத்தக்கச் செயல்களையும் குறிப்பிட்டு எழுதவும். அவற்றில் நன்கு எழுதிய முதல் 15 பேருக்குத் தலா ரூ.150/- பரிசாக வழங்கப்படும். பரிசு பெறுபவரின் படங்களும் விஜயத்தில் வெளியிடப்படும்.


பெற்றோர்களே! ஆசிரியர்களே! உங்கள் வீடும் பள்ளியும் அன்பு நிலையங்களாக மாற இதோ சில யோசனைகள்: விவேகானந்தப் பயிற்சி செய்பவர்களிடம் தவறாமல் பயிற்சி செய்கிறீர்களா என நீங்கள் விசாரிக்கலாம். இப்பயிற்சி பற்றிய செய்தியைப் பள்ளி, கல்லூரி அறிவிப்புப் பலகையில் போடலாம். தினசரிப் பிரார்த்தனையின் போதும் அறிவிக்கலாம். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பயிற்சி குறித்து தினசரி 10 நிமிடங்கள் முயன்றாலும் அவர்களின் பள்ளி/கல்லூரியின் வளர்ச்சி மேம்படுவது உறுதி.



ஆசிரியர்களுக்கான விவேகானந்தப் பயிற்சி!


மார்ச் 1 - இன்று தேர்வு தினம் என்றால், உங்கள் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதுவதற்கு நேரிலோ, குMகு மூலமாகவோ அவர்களை வாழ்த்துங்கள்! இது மாணவர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.


மார்ச் 2 - அன்பு ஆசிரியர்களே! தேர்வில் மேற்பார்வையின்போது பிடிக்கும் மனோபாவம் வேண்டாமே, ப்ளீஸ். உங்களது கவனமும் கனிவும் உள்ள அணுகுமுறையால் தேர்வறையின் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து மாணவர்களை விடுவியுங்கள். அவ்வாறு இருப்பது மன இறுக்கத்தைக் குறைத்து அவர்களின் மனஒருமையைக் கூட்டும்.


மார்ச் 3 - தேர்வில் உங்கள் மாணவர்களுக்கு தெய்வ பலம் கூடுவதற்கு இதே ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பக்கம் 19 -ல் வெளிவந்த பிள்ளைகளுக்குப் பரீட்சை என்ற கதையில் வரும் ஆசிரியைபோல் நீங்களும் உங்கள் மாணவர்களுக்காக இன்று பிரார்த்தனை செய்தீர்களா?


மார்ச் 4 - ஒருமுறை நரேனுக்கு (விவேகானந்தர்) தியானம் செய்யும்போது ஓர் ஆலையின் சங்கொலி தொடர்ச்சியாக ஒலித்து, அவரது மன ஒருமையைக் கெடுத்தது. அதை அறிந்த ஸ்ரீராமகிருஷ்ணர் உன் மனதைச் சிதறடிக்கிறதோ, அதன் மீதே அதிக கவனம் செலுத்தி, வெற்றி காண் என்று அறிவுறுத்தினார். நரேனும் அவ்வாறே செய்து வெற்றி கண்டார். அன்பு ஆசிரியர்களே! நீங்களும் உங்கள் மாணவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற எளிய தீர்வைத் தர முடியுமா? அதற்கு இன்று முதல் ஒவ்வொரு மாணவனையும் கூர்ந்து கவனிப்பீர்களா?


மாணவர்களுக்கான விவேகானந்தப் பயிற்சி
மார்ச் 5- மாணவர்களே, சுமார் 300 நாட்கள் படிப்பதை நீங்கள் தேர்வில் மூன்றே மணி நேரத்தில் மிக விரைவாக எழுத வேண்டியுள்ளது. அதற்கு ஒரு முக்கிய பயிற்சியாக, இன்று 30 நிமிடங்களில் 3 பக்கங்களைப் படிக்க வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள். படித்ததைச் சுருக்கமாகவும் விரைவாகவும் எழுதுங்கள். முயன்றீர்களா?


மார்ச் 6 - தம்பி தங்கைகளே, உங்களுக்கு மனதைக் குவிக்கும் சக்தி நிச்சயம் உள்ளது. எப்படி என்றா கேட்கிறீர்கள்? கிரிக்கெட், டி.வி. போன்றவற்றைப் பார்க்கும்போது அம்மா உங்களிடம், டி.வியைக் கவனமாகப் பார்த்தால்தான் நீ முன்னேறுவாய் என்கிறார்களா? இல்லையே!
இருந்தாலும் நீங்கள் ஆர்வத்துடன் கிரிக்கெட்டையும் டி.வி.யையும் கவனிக்கிறீர்கள். அதே கவனத்தை உங்கள் பாடத்தில் ஏன் கொண்டு வர முடியாது? அதற்காக இன்று, உங்களது கவனத்தை டி.வி மற்றும் விளையாட்டுக்கள் ஏன் கவர்கின்றன என்பதற்கான இரு காரணங்களை இங்கே எழுதுங்கள்.


மார்ச் 7 - படிக்கும்போது ஒரு சிறு சத்தம், யாருக்கோ வந்த செல்போன் ஒலி, எங்கோ கேட்கும் பாட்டு - இவ்வாறு கண்டதெல்லாம் உங்கள் கவனத்தைக் கெடுக்கிறது. நரேன் (சுவாமி விவேகானந்தர்) சிறுவனாக இருந்தபோது, ஒரு நாகப்பாம்பு அவர் முன்னே படம் எடுத்து நின்றது. அப்போதும் நரேன் தமது தியானம் கலையாமலே அமர்ந்திருந்தார். இதை எண்ணிப் பார்த்து, இன்று உங்கள் கவனம் படிப்பிலிருந்து எத்தனை முறை வெளியே போயிற்று? அந்தக் கவனத்தைத் திரும்பப் பெற எத்தனை முறை நீங்கள் முயன்றீர்கள் என்று கூறுங்கள்.


மார்ச் 8 - அதிகம் வளர வளர, சின்னச் சின்ன விஷயங்களில் பெரும் மகத்துவத்தைக் காண்கிறேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதனைச் செயல்படுத்த, நீங்கள் பள்ளி / அலுவலகம் போன்றவற்றிலிருந்து வீடு திரும்புகிறீர்கள். வந்த வேகத்தில் ஷுவையும் சாக்ஸையும் அவற்றிற்குரிய இடத்தில் ஒழுங்காக வைத்தீர்களா?


மார்ச் 9 - மனதை ஒருமுகப்படுத்திச் சாதித்த ஐந்து விஞ்ஞானிகள் / அறிஞர்களின் பெயர்களை இந்தப் பக்கத்திலுள்ள இடத்தில் எழுதுங்கள்.


மார்ச் 10 - சூரிய நமஸ்காரப் பயிற்சி உங்கள் அயர்ச்சியைப் போக்கும். நல்ல நினைவாற்றலைத் தரும். படித்தது உங்கள் மனதில் நிற்கும். இன்று சூரிய நமஸ்காரம் கற்றீர்களா? கற்றிருந்தால் செய்தீர்களா?


மார்ச் 11 - தெருவிலோ/ டி.வி.யிலோ மோசமான எதையும் நான் பார்க்க மாட்டேன் என உங்களுக்கு நீங்களே கூறிக் கொண்டீர்களா?


மார்ச் 12 - ஒருவர் ஒன்றில் சாதித்து வெற்றி அடைந்தால், அதற்கு அவரது மனக்குவிப்புதான் காரணம். அதுபோல் ஒருவருக்குத் தோல்வி மேல் தோல்வி வந்தால் அதற்கு மனக்குவிப்பு இல்லாததே காரணம். இதன்படி, செஸ்/கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டுகளிலாவது வெற்றி பெற்ற மூவரின் பேரை இங்கு எழுதுங்கள்.


மார்ச் 13 - வீட்டில் உயரத்தில் கூடைப்பந்துக்கான வளையத்தைப் பொருத்தி, பந்தைக் குறிப்பிட்ட தூரத்திலிருந்து சரியாகப் போடுங்கள். பிறகு தூரத்தை அதிகப்படுத்துங்கள். எத்தனை முறை ஜெயித்தீர்கள்?


மார்ச் 14 - இன்று பள்ளியில் படிக்கட்டுகளில் ஜாக்கிரதையாக கண்ணை மூடியபடி ஏறியோ, இறங்கியோ நண்பர்களின் பாராட்டைப் பெறுவீர்களா?


மார்ச் 15 - பள்ளிக்குச் செல்லும்போது நல்ல விஷயங்கள் பல உங்கள் கண்களில் படும். அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்.


மார்ச் 16 - ஒரு பாத்திரம் நிரம்ப நீரை எடுத்துக் கொள்ளுங்கள். நீரைச் சிந்தாமல் ஒரு 10 அடி நடந்து பாருங்கள். மனதைக் குவிக்கும் சக்தி எந்த அளவிற்கு உள்ளது என உங்களுக்கே தெரியும். அதை இன்று செய்தீர்களா?


மார்ச் 17 - துப்பாக்கி சுடும் பயிற்சி சிறிதுமின்றி சுவாமி விவேகானந்தர், பல முட்டைகளைச் சுட்டு வீழ்த்திய சம்பவம் உங்களுக்குத் தெரியும். நானும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட்டு சாதிப்பேன் என இன்று சங்கல்பம் செய்ய உங்களால் முடியுமா?


மார்ச் 18 - ஆச்சாரிய ஸ்ரீராமாநுஜரின் சீடர் கூரத்தாழ்வான். அவர் ஒரு பெரிய நூலை ஒரே ஒருமுறை படித்தார். சில தினங்களுக்குப் பிறகு அதைப் பார்க்காமல் அப்படியே எழுதினார். மாணவர்களே, கூரத்தாழ்வானின் அளவிற்கு உங்களுக்கு முடியாவிட்டாலும், இன்று வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனமாகக் கேளுங்கள். கேட்டதை ஓரிருமுறை மனதால் நினைத்துப் பார்க்கலாம். அதனை அப்படியே உங்கள் நண்பரிடம் கூறியோ, எழுதியோ பாருங்கள். இதைச் செய்ததால் உங்களது மனஒருமை கூடியதா? பக்தர்களுக்கான விவேகானந்தப் பயிற்சி


மார்ச் 19 - இன்று 30 நிமிடங்கள் ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள். ஒரே மாதிரி எண்ணங்கள் எத்தனை முறை தோன்றின? வேண்டாத எண்ணங்களைத் தவிர்த்து, உயர் எண்ணத்தில் எவ்வளவு நொடிகள்/ நிமிடங்கள் உங்களால் இருக்க முடிகிறது என்பதையும் எழுதுங்கள்.


மார்ச் 20 - சக்திகளுள் பெருமளவு வீணான பேச்சுக்களால் விரயமாகிறது என்கிறார் சுவாமிஜி. நான் யாரிடமும் தேவையின்றி எதையும் பேச மாட்டேன் என நாள் முழுவதும் பயிற்சி செய்ய முடியுமா?


மார்ச் 21 - பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்: தக்ஷ?ணேஸ்வரத்தில் குரங்குகள் கண்களை மூடிக் கொண்டு தியானிப்பது போல் அமர்ந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே அவை எந்த மரத்தில் பழங்கள் பழுத்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்குமாம்.
பக்தர்களே! நீங்கள் இது போலன்றி, மன ஒருமையுடன் கடவுளிடம் பக்தி வளர்த்துக் கொள்வதற்காக தியானம் செய்பவர்தானே?


மார்ச் 22 - இன்று இரவு உங்களது இஷ்டமந்திரத்தை ஆர்வத்துடன் மெல்ல ஓதியபடியே தூக்கத்தில் லயித்திடுங்கள். அல்லது மகான்களின் வரலாறு, வேத, கீதை பாராயணத்தைக் கேட்டபடி உறங்குங்கள். மறுநாள் எழும்போது ஒரு புத்துணர்வுடன் எழுகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். இந்தப் பயிற்சியை ஒரு வாரம் செய்தால் மனம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதை இன்று தொடங்குவீர்களா?


மார்ச் 23 - சுவாமிஜி காசிப்பூரில் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். எங்கிருந்தோ எண்ணற்ற கொசுக்கள் அவரது திருமேனியை மொய்த்தன. தியானத்தில் ஆழ்ந்திருந்த சுவாமிஜியின் கவனம் சிதறவே இல்லை. நமக்குத் தினமும் வரும் சின்னச் சின்ன இடைஞ்சல்களை எல்லாம் காரணம் காட்டி, ஜப, தியானத்தை விடாமல் செய்ய முடியுமா? இன்று எவ்வளவு நிமிடங்கள் நீங்கள் ஜப, தியானத்தில் ஈடுபட்டீர்கள்?


மார்ச் 24 - எல்லாத் துன்பங்களுக்கும் அவனது நான் என்று கூறிக் கொள்ளும் தன்முனைப்பே காரணம் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஆகவே, இன்று விழிப்பாக இருந்து, உங்களை முன்னிலைப்படுத்தி அகங்காரமாகப் பேசாமல் இருக்க முடியுமா?


தாய்மார்களுக்கான விவேகானந்தப் பயிற்சி
மார்ச் 25 - இன்று உங்கள் மகனோ, மகளோ தேர்வு எழுதி திரும்பியதும், அவனை நலம் விசாரியுங்கள். முடித்த தேர்வில் எவ்வளவு மார்க் வரும்? என்று கேட்டு அவன்/ அவள் மனதைக் குழப்பாதீர்கள்.மாறாக, அவனுக்கோ/அவளுக்கோ உணவு, ஓய்வு, உற்சாகம் தருவதில் கவனமாக இருங்கள். செய்தீர்களா?


மார்ச் 26 - ஒருத்தி, துடைப்பத்தால் தரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். வேலை முடிந்ததும் துடைப்பத்தை வீசி எறிந்தாள். அன்னை ஸ்ரீசாரதாதேவி அவளிடம், துடைப்பத்தை வீசி எறியும் ஓரிரு நொடிகளே, அதைச் சரியாக வைக்கவும் ஆகும். சரியாக வைக்கும்போது உன் மனம் அமைதி பெறும் என்றார். இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் மிகக் கவனமாக - மிகுந்த மரியாதையுடன் செய்வீர்களா? அவ்வாறு செய்த செயல்களைப் பட்டியலிட முடியுமா?


மார்ச் 27 - ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அது முடியும் முன்பே வேறொரு பணியில் மனதைச் செலுத்தாமல் உங்களுக்கு நீங்களே பயிற்சி தந்து கொள்வீர்களா?


எல்லோருக்குமான விவேகானந்தப் பயிற்சி
மார்ச் 28 - இன்று ஓரிடத்திற்குச் செல்லும்போது அங்குள்ள 10 பொருள் களின் நிறங்களைக் கவனித்து, பின் அவற்றைப் பார்க்காமல் கூறுங்கள்.


மார்ச் 29 - வாகனம் ஓட்டியபடி மொபைலில் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். அவ்வாறு யாராவது செய்தால் அவர்களை அன்புடன் திருத்துவீர்களா?


மார்ச் 30 - செய்தி படிக்கும்போது உங்களுக்குப் பிடித்த நல்ல செய்திகளை முழுமையாக ஆழமாகப் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்வீர்களா?


மார்ச் 31 - ஒருமைப்பாடே எல்லா அறிவின் சாரம். மனம் குவியாமல் எதுவும் செய்ய முடியாது என்றார் சுவாமி விவேகானந்தர். இந்த அற்புதமான செய்தியை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ பளிச்சென்று எழுதி வைக்க முடியுமா?


பெயர்:


பள்ளி/கல்லூரி/ வீட்டு முகவரி:


போன்:


உங்கள் படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டும் உங்கள் புகைப்படத்தை ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்திற்கு அனுப்பவும்.


மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)