Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

ராமகிருஷ்ணானந்தரின் சிந்தனைத் துளிகள்!மார்ச் 30,2013

*ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டுமானால். அதைச் சமன் செய்வதுபோல் ஒரு நல்ல பழக்கத்தை வளத்துக் கொள்ள வேண்டும். இதற்குத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

* இந்த உலகில் சிலர் அழகானவர்களாக, சிலர் அழகற்றவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் மன்னர்கள், சிலர் குடிமக்கள், சிலர் பிராமணர்கள், சிலர் மற்ற ஜாதியினர், சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், சிலர் துயரத்தில் வாடுகிறார்கள். சிலர் பாவிகள், சிலர் நல்லவர்கள், சிலர் கொடியவர்கள், சிலர் கருணை மிக்கவர்கள், சிலர் கடவுளுக்குத் தொண்டு செய்து புகழ் பெறுகிறார்கள். சிலர் தோட்டித் தொழில் செய்து பிறரது அருவருப்பிற்கு ஆளாகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வுகளின் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் விதியையும் வினைப்பயனையும் ஏற்றுக்கொள்ளாத் தான் வேண்டும். விதியும் உள்ளது. சுய முயற்சியும் உள்ளது. இரண்டுமே நமது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. முற்பிறவி வினைப்பயனை இந்தப் பிறவியில் விதி நம்மிடம் கொண்டுசேர்க்கிறது. இந்தப் பிறவி வினைப்பயனில் ஒரு பகுதியை மட்டுமே இந்தப் பிறவியில் அனுபவிக்கிறோம். அதுவே அடுத்தப் பிறவியின் சுகம் அல்லது துக்கத்திற்கான விதியாக அமைகிறது. சுய முயற்சி என்று சொல்கிறோமே அதுவும் தெய்வ சக்தியன்றி வேறல்ல. அவரது அருளன்றி சுய முயற்சி என்ற சொல்லே பொருளற்றதாகி விடும். இறையருளைப் பெற சுய முயற்சி வேண்டும். சுய முயற்சி இருக்க வேண்டுமானால் இறையருள் வேண்டும்.

*எப்போதும் இறைவனை நம்புகிறவர்கள் உண்மையில் மிகச் சிலரே. ஏன்? ஏனென்றால் நாம் கவலைகளுக்கும், சஞ்சலங்களுக்கும், பயத்திற்கும் மனத்தில் இடம் கொடுக்கிறோம். அதனால்தான்.

* நம்பிக்கையுள்ளவன் பாக்கியவான். மனிதர்களில் ஆனந்தம் மிக்கவன் அவனே. ஏனெனில் அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை.

* இந்த உடல் ஒரு கருவி மட்டுமே. அதிலும் உணர்வற்ற ஒரு கருவி. தனக்கெனச் சொந்தமாக ஒரு வாழ்க்கை ஒரு கருவிக்கு உண்மையிலேயே கிடையாது. ஏனென்றால் தன்னைப் பயன்படுத்தும் ஒருவனை அது முழுவதுமாகச் சார்ந்துள்ளது. உதாரணமாக, ஒரு பேனாவுக்கு உணர்வு இருப்பதாக வைத்துக்கொள்வோம். நான் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியுள்ளேன் என்று அதனால் சொல்ல முடியும். ஆனால் உண்மையில் அது ஒன்றுமே செய்யவில்லை. ஏனென்றால் அதைப் படிக்கும் ஒருவன்தான் அந்தக் கடிதங்களை எழுதியுள்ளான். நாமும், உணர்வுள்ளவர்களாக இருப்பதால், இந்தக் காரியங்களை எல்லாம் நாம்தான் செய்வதாக எண்ணுகிறோம். நமது கைகளில் பேனா இருப்பதைப் போலவே. ஓர் உயர்ந்த சக்தியின் கைகளில் நாம் ஒரு கருவியாக உள்ளோம். எல்லாக் காரியங்களையும் செய்து முடிப்பவன் இறைவனே.

*இந்த உலகத்தின் சிக்கல்களைத் தவிர்ப்பது எப்படி என்று என்னிடம் ஆலோசனை கேட்கிறீர்கள். எண்ணற்ற பிறவிகளின் பலனாக வந்துள்ளவற்றை ஒரு நாளில் அழித்துவிட முடியாது என்பதை முதலில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆமாம் நீங்கள் கேட்பது சரிதான். வாழ்க்கை என்னும் வலையிலிருந்து இந்தக் கணமே நாம் தப்பிக்க வேண்டும். ஏனென்றால் நமது குடும்பத்தினரின் அன்பார்ந்த அரவணைப்பிலிருந்து மரணம் நம்மை எப்போது பறித்துச் செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? அதற்காக, வாழ்வின் ஓட்டத்தில் ஒரு திடீர்த் தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒரு சிறுவன் தன் பெற்றோரின் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பதைப்போல, உங்கள் சிந்தனையை எப்போதும் ஸ்ரீராமகிருஷ்ணரை நோக்கி வைத்திருங்கள். அவர் உங்களை எந்த நிலையில் வைத்துள்ளாரோ அதில் திருப்தி அடையுங்கள். வெற்றிக்கு அதுவே மிகச்சிறந்த வழி. இறைவன் உங்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தி அடையுங்கள். ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் படியுங்கள். அவற்றைப்பற்றி சிந்தனை செய்யுங்கள்.

*எது மனத்தை மாசுபடுத்துகிறது? ஆசை, மனத்திலுள்ள ஆசைகளை விடுங்கள். உடனே அது தூய்மையாகிறது. ஆனால் இறைவனைப்பற்றி அறியாதவன். ஆசைகளை விட முடியாது. ஆசைகள் மகிழ்ச்சியைத் தருவதில்லை. மாறாக, எல்லா துயரங்களுக்கும் காரணம் அவையே என்பதை பக்தன் உணர்கிறான் இறைவனை உணர்வதால் மட்டுமே எல்லா ஆசைகளும் நிறைவேறும்; ஏனென்றால் இறையானந்தம் மட்டுமே எல்லையற்றது. பிற இன்பங்கள் எல்லாம் அளவிற்கு உட்பட்டவை. அழியக் கூடியவை என்பதை பக்தன் உணர்கிறான்.

*துல்லியமான பிரதிபிரம்பத்தைத் தரவல்ல ஒரு பெரிய கண்ணாடி போன்றது மனம். ஆனால் எதையுமே பார்க்க முடியாத அளவுக்கு அந்தக் கண்ணாடியின்மீது கனமாகப் புழுதி படர்ந்துள்ளது. புழுதியைத் துடைத்துச் சுத்தம் செய்யும் அளவிற்கு உன் உருவத்தை அதில் பார்க்க முடியும். தூசியின் கடைசிக் கறையையும் நீக்கினால் உன் உண்மையான ஆன்மாவின் தெளிந்த உருவைக் காணலாம். கண்ணாடியை மறைக்கின்ற அந்தப் புழுதி எது? தன்னல ஆசைகள்.

*கண் நோய் வந்தால் கறுப்புக் கண்ணாடி அணிகிறோம். உலகம் முழுமைக்கும் நாம் கறுப்பு வண்ணம் தீட்டுவதில்லை. அதுபோல் சிந்தனையைச் சீராக்குங்கள். உலகைச் சீராக்க முயல வேண்டாம்.

*தூய மனத்திற்கும் உண்மையான ஆன்மாவிற்கும் வேறுபாடு இல்லை. மனம் தனியாக இருக்கும்போது, அதாவது ஒரு பொருளில் மட்டும் மனம் முழுமையாக ஈடுபட்டிருக்கும்போது அது தூயதாக இருக்கிறது. நீ இறைவனைக் காண விரும்புகிறாயா? அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. தன்னல ஆசைகளைத் துறந்துவிடு; உள்ளத்தை இறைவனில் மட்டும் ஈடுபடுத்து.

*இதயத்தைப் பக்தியினால் நிரப்பு, மனம் இயல்பாகவே இறைவனை நாடும். உண்மையான பக்தன் ஒருபோதும் தன்னைப்பற்றி நினைப்பதில்லை. தன்னையே மறக்கும் அளவுக்கு அவனது மனம் இறைவனைப் பற்றிய எண்ணங்களால் நிறைந்திருக்கும். முக்திக்குச் சிறந்த வழி அதுவே.

*இறைவனை நாடும் அளவிற்கு நாம் நம்மை மறக்கிறோம். அந்த அளவு விரைவில் முக்தியை அடைகிறோம். ஒருபோதும் நம்மைச் சிந்திக்காமல் நமது மனத்தை எப்போதும் இறைவனின் சன்னிதியில் வைத்திருப்பதே இதற்குச் சிறந்த வழி.

*காலம், இடம், காரண காரியத் தொடர்பு- இவை எதுவுமே வெளியிலுள்ள தனித்தனிப் பொருட்கள் அல்ல. அவை எனக்கு உள்ளே உள்ளன. அதாவது என் மனத்தில் உள்ளன. பிரபஞ்சம் முழுவதும் மனிதனுக்குள் அடங்கியுள்ளது.

*சிலவேளைகளில் சிலர் என்னிடம் வந்து மனத்தை ஒருமுகப் படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. அது என் தொழிலுக்குப் போகிறது. வீட்டு விஷயங்களை நாடுகிறது. வேடிக்கை வினோதங்களுக்குச் செல்கிறது. உயர்ந்த எந்த சிந்தனையிலும் அதனை நிறுத்த முடியவில்லை. அது ஏன்? என்று கேட்கிறார்கள். ஏனெனில் உங்கள் மனம் உங்களுக்குச் சொந்தமாக இல்லை. அதனை உலக இன்பங்களிடம் நீங்கள் விற்றுவிட்டீர்கள். உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? என்று நான் அவர்களிடம் கேட்கிறேன்.

*மதம் என்பது அனகேமாக முற்றிலும் மனத்தைச் சார்ந்தது. துறவுச் சின்னமான காவியை உடுத்தாமலேயே ஒருவன் முக்தி பெற முடியும். முதலில் மனத்தைப் பண்படுத்த வேண்டும். அது முதல் படி. உடைகளும் இதர விஷயங்களும் இரண்டாம் படி. மனத்தினால்தான் ஒருவன் கட்டுப்படுகிறான். மனத்தினால் தான் அவன் முக்தியும் நெறகிறான். மனம் நல்லதாக இருந்தால் காவி உடை உதவி செய்யும். மனம் தீயதாக இருந்தால் அது ஏமாற்றும். காவி உடை, நெற்றியில் சின்னங்கள், தீர்த்த யாத்திரை செல்லுதல், கீர்த்தனம் ஜபம், தவம் எல்லாம் மதத்தின் முக்கியப் பகுதி அல்ல. அவை வெறும் புறச் சின்னங்களே, இறையருளைப் பெறுவதற்கு மனத்தை இந்தப் புறச் சின்னங்கள் பக்குவப்படுத்துகின்றன.

*நாம் முழு மனத்தோடு தீவிரமான ஆர்வத்தேடு பிரார்த்தனை செய்தால் நிச்சயமாகக் கடவுள் நம்மிடம் வருவார். பிர்ச்சனை என்னவென்றால், நாம் கடவுளைத் தவிரவும் பலரிடம் வேண்டுகிறோம். உடல்நலத்தை டாக்டரிடம் வேண்டுகிறோம். உணவைக் கடைக்காரரிடம் வேண்டுகிறோம். வேறு சிலவற்றிற்காக மற்றவர்களிடம் போகின்றோம். மீதியுள்ள விஷயங்களில், ஆன்மீக அறிவைக் கடவுளிடம் வேண்டுகிறோம். வேறு யாரிடமும் போகாமல், இறைவனை மட்டும் எதிர்நோக்கி, உண்மையான ஆர்வத்துடன் அவரிடம் பிரார்த்தனை செய்தால், அவர் நமது வேண்டுதல்களை நிச்சயமாக நிறைவேற்றிவைப்பார்.

*உலக வாழ்க்கை மிகுந்த கவர்ச்சிகள் நிறைந்தது என்று சொல்கிறீர்கள்....... உண்மைதான்! ஆனால் பலமாக வீசும் எதிர்க்காற்றுகள் பலவீனமான மரத்தின் வேர்கள் ஊன்றி நிற்பதற்கு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகக் கவர்ச்சிகளுடன் நீங்கள் நடத்தும் போராட்டம். உங்களிடம் தற்போது திடமாக இல்லாத நல்லொழுக்கங்களை உங்களிடம் வேரூன்றி நிற்கச் செய்யும். சீரான பயிற்சியும் போராட்டமும் உடல்நலத்தை மேம்படுத்தும்; மனநலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அது வழுக்கலான பாதை.கீழே விழாமல் நடக்க முடியாது. ஆனால் விழுந்து விடுவோமோ என்று கவலைப்படாமல் முயன்று முன்னேறினால். நிச்சயமாக அந்த வழுக்கலான இடத்தைக் கடந்து செல்ல முடியும். உறுதியான நம்பிக்கையோடு செல்ல வேண்டும். விழுந்து எழுந்தாலும் தளராமல் மேற்செல்ல வேண்டும். இஷ்டதெய்வத்தைத் தரிசிக்கும் வரை முயற்சியைக் கைவிடக் கூடாது. தெரியாமல் செய்த தவறுக்காகக் கவலைப் படாதே. தவறு செய்வது மனித இயல்பு. ஊக்கத்தை இழக்காதே. உறுதியாக முன்னேறு கறை படாமலேயே இந்த உலகத்தின் சேறு நிறைந்த பாதையைக் கடக்கலாம். என யாரும் எண்ண வேண்டாம், சேற்றைக் கடக்க முயலும்போது, அதில் மே<லு<ம் தாழ்ந்து விடுவோமோ என்று பயந்துகொண்டு, அதிலேயே உட்கார்ந்திருப்பதும் முட்டாள்தனம். முயற்சி செய், முயற்சி செய், மேன்மேலு<ம் முயற்சி செய் என்று பொன்மொழியை மறக்காதீர்கள். ஆறுமுறை தோற்ற பிறகும். தொடர்ந்து முயன்று ஏழாவது முறை வெற்றி பெற ஸ்காட்லாந்து நாட்டு புரூஸை நினைவில் கொள்ளுங்கள்.

*அறிவியல் என்பது புறுவுலகத்தில் மனிதன் செய்யும் போராட்டம். மதம் என்பது அக உலகத்தில் மனிதனின் போராட்டம். புறவுலகில் உண்மையைத் தேட வைக்கிறது அறிவியல். அகவுலகில் உண்மையைத் தேட வைக்கிறது மதம். இரண்டு போராளிகளும் சிறந்தவர்கள்தான். சந்தேகம் இல்லை. ஆனால் ஒருவர் வெல்கிறார். மற்றவர் தோற்கிறார். அதுதான் வித்தியாசம். அறிவியல் முடியும் இடத்தில் மதம் ஆரம்பிக்கின்றது.

*இந்த உலகம் நமக்கு நிலைத்த மனநிறைவைத் தர முடியாது. எனவே ஒரே தீர்வு இறைவன்தான். ஒருவன் ஏன் சரணடைய வேண்டும்? ஏன் சுயநலமில்லாமல் இருக்க வேண்டும்? அவன் மிக அதிக சுயநலத்தோடு இருக்கலாமே: அள்ள அள்ளக் குறையாத ஒன்றைத் தவிர வேறு எதிலும் அவன் நிறைவைக் காண வேண்டாம். இந்த உலகிலு<ள்ள நிரந்தரமற்ற சிறிய பொருட்களே போதுமென்று அவன் திருப்தியடைய வேண்டாம். அவனது ஆசைகள் எல்லையற்றவையாக இருக்கட்டும். பெரிய அளவு பயன் கிடைக்கும் என்பதற்காக, அவன் தியாகம் செய்ய வேண்டும். நூறு ரூபாய் நோட்டை ஒருவன் வீதியில் எறிந்தால். அவனைப் பைத்தியம் என்போம் ஆனால் லட்ச ரூபாய் கிடைப்பதற்காக அவன் நூறு ரூபாயை எறிந்தால், அப்போது அவனை புத்திசாலி என்போம். ஆகையால் நித்திய ஆனந்தத்தைத் தரும் இறைவனை அடைவதற்காக, நிலையற்ற இன்பங்களைத் தருகின்ற இந்த உலகத்தை மனிதன் துறக்க வேண்டும்.

மேலும் விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)