Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

ஆசிரியர்களுக்கான விவேகானந்தப் பயிற்சி!ஏப்ரல் 25,2013

மாணவர்களால் விரும்பப்படுபவர்களாக மலர ..: பிறருக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. பிறரது நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதுகூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நம் இதயத்திற்குப் படிப்படியாகத் தரும். - சுவாமி விவேகானந்தர்

சுவாமிஜியின் இந்த ஓர் உபதேசத்தை ஆசிரியர்களாகிய நீங்கள் கடைப்பிடித்து முன்னேற வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம்.மாணவ மாணவிகளின் மனங்கள் அன்புக்காக ஏங்குகின்றன. ஆசிரியரின் பாராட்டுக்குத் தாங்கள் பாத்திரமாக வேண்டும் என்று துடிக்கின்றன. நீங்கள் ஆசிரியப் பணியில் சிறந்திட, ஆசிரியர் - மாணவர் உறவு சிறப்பாக இருப்பது அவசியம்.நல்ல விஷயங்களைக் கற்றுத் தரும் ஆசிரியர்களை மாணவர்கள் மறக்க மாட்டார்கள். ஆகவே ஆசிரியர்களே, இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பயிற்சிகளின் மூலம் மாணவர் விரும்பும் ஆசிரியராக நீங்கள் மலர்வீர்கள். இப்பரிந்துரைப் பயிற்சிகளைக் கடைப்பிடித்து, மேலும் சிறப்பான செயல்களைச் செய்தால் சுவாமிஜியின் ஆசியையும் ஆற்றலையும் நீங்கள் உணர்வீர்கள்.இந்தப் பயிற்சியில் உங்களால் செய்ய முடிந்ததையும், முடியும் என்பதையும் 4 போட்டும், செய்ய இயலாததை து இட்டும் குறிப்பிடுங்கள். ஒவ்வொரு நாளும் இந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலாவிட்டாலும், குறிப்பிடப்பட்டுள்ள விஷயங் களை அந்தந்த நாட்களில் வாசித்து, அதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கலாம். இந்தப் பயிற்சிகள் லட்சிய ஆசிரிய ருக்கே பொருந்தும்; நடைமுறைக்கு ஒத்து வராது என்று இருந்துவிடாமல் முடிந்தவரை கடைப்பிடியுங்கள். ஏப்ரல் மாதத்து 4 வாரப் பயிற்சிகளை முழுமையாக முடித்து, இப்பயிற்சி தொடர்பாக நீங்கள் செய்த வேறு நல்ல, பாராட்டத் தக்கச் செயல்களையும் எழுதி மே 7-க்குள் எங்களுக்கு அனுப்புங்கள். அதற்கு மேல் அனுப்பப்படும் படிவங்கள் ஏற்க இயலாதவை. நன்கு எழுதிய முதல் 10 பேருக்குத் தலா ரூ.500/- பரிசாக வழங்கப்படும். பரிசு பெறுபவர்களின் புகைப்படங்களும் விஜயத்தில் வெளியிடப்படும்.

விவேகானந்தப் பயிற்சிக் குழு
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், 31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 4. - : 2462 1110.

ஏப்ரல் மாதத்திற்கானது:

சிறந்தவர்களை உருவாக்குவதற்கான வாழ்வியல் பயிற்சி

ஏப்ரல் 1 : மேலை நாடுகள் தினம் என இன்றைய நாளைக் கொண்டாடும். ஆனால் சுவாமி விவேகானந்தரோ, ஒவ்வொருவரிடமும் அளவற்ற ஆற்றலும் அறிவும் உண்டு. அவற்றை வெளிப் படுத்தும் விதமாக அவனது செயல்கள் அமைய வேண்டும் என்கிறார். ஆசிரியர்களே, இந்த ஒரு சிந்தனையை இன்று உங்கள் மாணவர் களிடம் கூறி அவர்களுக்குப் புரிய வைப்பீர்களா?
ஏப்ரல் 2 : வரை கற்றுக் கொண்டே இருப்பேன் என்றார் சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ணர். அதன்படி, நீங்கள் உங்கள் ஆளுமையை, கற்பிக்கும் திறனைப் பெருக்கிக் கொள்ளப் பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமாக, நூலகத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது ஆகும். உங்களது விடுமுறையில் நீங்கள் எந்தெந்த நூல்களைப் படிக்க உள்ளீர்கள் என்று கூறுங்கள்.
ஏப்ரல் 3 : மாணவனின் ஆர்வத்தைக் கவர்ந்தால், அவனது கவனம் ஆசிரியர் நடத்தும் பாடத்தில் பதியும் என்பது பலரது அனுபவம். ஆக, ஒவ்வொரு வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு ஒரு ஐந்து நிமிடம் உங்கள் மாணவனின் ஆர்வத்தை எழுப்ப என்னென்ன கதைகள் / சம்பவங்கள் / சுவையான செய்திகள் கூறலாம் என இன்று யோசிப்பீர்களா?
ஏப்ரல் 4 :ஆசிரியர்களே, உங்களது மாணவ மாணவிகள் ஒவ்வொருவரின் தனித் திறமைகளை, சிறப்பம்சங்களைக் குறித்து வைத்துக் கொள்ள முடியுமா? இன்று அதைச் செய்யுங்களேன், ப்ளீஸ்!
ஏப்ரல் 5: நீ என்னவாக ஆக விரும்புகிறாய்? என்று பொதுவாக 10 மற்றும் +2 மாணவர்களிடம் மட்டுமே கேட்கிறார்கள். இந்தக் கேள்வியைப் பிற மாணவர்களிடமும் கேட்டு அவர்களை யோசிக்க வைத்து அவர்களது வாழ்வில் ஒரு விதை இன்று விதைக்கலாமா?
ஏப்ரல் 6 : இன்று உங்களது மாணவர்கள் சிலருடன், உங்களுக்குப்பாடம் நடத்திய ஆசிரியரையோ அல்லது உங்கள் பகுதியில் உள்ள சிறந்த ஆசிரியர் ஒருவரையோ மரியாதை நிமித்தமாகச் சந்திக்கலாமா? அது உங்கள் மாணவனுக்குச் சிறந்த முன் உதாரணமாக இருக்கும்.
ஏப்ரல் 7 : மாணவ - மாணவிகள் பலர் திரைப்படக் கதாநாயக/நாயகிகளைத் தங்கள் ஹீரோக்களாக / ஹீரோயின்களாகக் கருதுகின்றனர். அவர்கள் மனங்களில் நற்சிந்தனைகள் இருப்பதில்லை. ஆதலால் நீங்கள் கற்றுத் தரும் பாடங்கள் அவர்களது மனங்களில் ஏறுவதில்லை. அவர்களிடம் உள்ள வேண்டாதவை நீங்குவதற்கு, வேண்டியதை நீங்கள்தான் வழங்க முடியும். ஆகவே ஆசிரியர்களே, மேற்கூறியவாறு உங்கள் மாணவர்கள் யாராவது இருந்தால், விவேகானந்தரின் சிறு நூல்களை அவர்களுக்கு வழங்கி அவர்களை வாசிக்க வைக்க முடியுமா?
ஏப்ரல் 8: மாணவ மாணவிகள் பாடம் தொடர்பான கேள்விகள் கேட்டால் முதலில் அவர்களைப் பாராட்டுங்கள்; பிறகு விடை கூறுங்கள். இதன் மூலம் முதலில் நீங்கள் மாணவனின் மனதையும் பின் மூளையையும் பிடிக்கிறீர்கள். பிறகு அவர்கள் உங்கள் வசம்தான்.
ஏப்ரல் 9 : மாணவர்களின் சிரமங்கள், பிரச்னைகள், பலவீனங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டுக் கொள்ள முடியுமா? இது நீங்கள் அவர்களை நன்கு அறிந்துகொள்ள உதவும்.
ஏப்ரல் 10 : நமது சமுதாயத்திலுள்ள ஒரு பிரச்னையைப் பற்றி உங்கள் மாணவர்களிடம் கூறுங்கள். பிறகு அவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அந்தப் பிரச்னையைப் பற்றி அவர்களை விவாதிக்கச் சொல்லுங்கள். இப்படியாக, நல்ல முறையில் சிந்திக்க அவர்களைப் பழக்குங்கள்.
ஏப்ரல் 11 : ஒவ்வொரு பாடம் நடத்துவதற்கும் ஒரு சில அணுகுமுறைகள் உள்ளன. அந்தந்தப் பாடங்களை அதற்குரிய முறையில் நடத்தினால், நீங்கள் பாடம் நடத்தும் முறை மாணவர்களை ஈர்க்கும். எனவே உங்கள் துறை சார்ந்த பாடங்களை நன்கு நடத்திய அனுபவமிக்க ஆசிரியர்களைச் சந்தித்து இதற்கான சில பெறலாமா?
ஏப்ரல் 12 : உங்கள் சக ஆசிரியர்களுடன் என்றும் இணக்கமாக இருப்பதற்காக என்னென்ன வழிகள் உள்ளன என இன்று யோசிக்கலாமா?
ஏப்ரல் 13 : மாணவ, மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களை அழையுங்கள். மாணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுமுறை எடுத்தால் முதலில் நலம் விசாரியுங்கள். அதன் பிறகே மற்றவை.
ஏப்ரல் 14 : சிரித்த முகமும் மதிக்கத்தக்கத் தோற்றமும் கொண்டு வகுப்பிற்குச் செல்வதில் கவனம் வையுங்கள். சிறிது ஹாஸ்யமும் வகுப்பில் இருக்கட்டும்.
ஏப்ரல் 15 : இதுநாள் வரை சரியாகப் படிக்காத அல்லது பொதுவாக நன்கு படிக்காத மாணவனை அழைத்து, அவனது எதிர்காலம் பற்றி இன்று அவனுக்கு இதமாகக் கூறலாமா? உதாரணமாக, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மார்ச் 2013 இதழில் வெளிவந்த பரீட்சை நேரத்தில் நீ பூனையா? புலியா? சிங்கமா? போன்ற கதைகளைப் படித்து மாணவர்களுக்கு நீங்கள் புரிய வைக்கலாம்.
ஏப்ரல் 16 : சுவாமி விவேகானந்தர் கூறுவதுபோல், ஆசிரியரின் முக்கிய பணி, மாணவர்களுக்குள்ள தடைகளை நீக்கு; அவர்கள் கற்பதற்கான ஆர்வத்தைப் பெருக்கு! என்பதுதான்.உங்கள் மாணவர்களின் கற்றலுக்குத் தடைகள் எவையெவை என்று கண்டு கொண்டுள்ளீர்களா? அந்தத் தடைகளை மாணவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா?
ஏப்ரல் 17 : நீங்கள் பாடம் நடத்தும் முறை, மாணவ மாணவிகளிடம் அன்பாகப் பழகும் விதம் போன்றவை பற்றிய மாணவர்களின் ஆக்கபூர்வமான கருத்துகளை அறிவதற்காக ஒரு தனிப் பெட்டியை வைக்கலாம்.
ஏப்ரல் 18 : மாணவர்கள் உங்களது பாடங்களை ஆர்வத்துடன் கேட்பதற்குப் பாடம் தொடர்பான புதுப் புதுச் சுவாரஸ்யமான தகவல்களைத் தாருங்கள். அதனால் உங்களது பாடம் நடத்தும் திறனும் மாணவனின் பாடம் கற்கும் திறனும் மெருகேறும்.
ஏப்ரல் 19 : இன்றைய சூழ்நிலையில் பல மாணவர்களின் சிந்தனைகள் மிகக் குறுகிய வட்டங்களுள் சிக்கியுள்ளன. அவர்களிடம் தேசப்பற்றை வளர்க்க ஓர் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்ற தலைப்பில் சில நிமிடங்கள் அவர்களைப் பேச வைக்க முடியுமா?
ஏப்ரல் 20 : திரைப்படம் பார்ப்பது மாணவர்களுக்குப் பிடிக்கும். அதனால் நீங்கள் உங்கள் மாணவர்களுக்குச் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதற்குச் சொல்லலாம். அதில் முக்கியமாக, சினிமாக்களில் எதை ரசிப்பது? எப்படி ரசிக்க வேண்டும்? எதை ரசிக்கக் கூடாது? எதை அலட்சியப்படுத்த வேண்டும்? எவற்றைக் கற்பது போன்றவற்றைக் கற்றுத் தாருங்கள். அதன் மூலம் அவர்களது ரசனை அதிகரிக்கும்.
ஏப்ரல் 21 : மனிதனின் தந்தை என்பார் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த். ஆசிரியரின் பார்வையில் இருந்து கல்வியை நோக்குவது மாணவர்களிடம் புதிய சுவையை ஏற்படுத்தும்; கற்றலை ஆழப்படுத்தும். இதற்கு உங்கள் மாணவர்களைச் சுழற்சி முறையில் சில வகுப்புகளை நடத்த ஊக்குவிப்பீர்களா? இதனால் மாணவர்களுக்குக் கற்பித்தலில் உள்ள சுகமும் சிரமமும் புரியும்.
ஏப்ரல் 22 : இன்று உங்கள் ஒவ்வொரு மாணவனும் மற்ற மாணவர்களிடம் உள்ள நல்லவற்றைப் பற்றிச் சில நிமிடங்கள் பேசக் கூறுங்கள். இதனால் அவர்களிடம் பரஸ்பர நல்லெண்ணம் பெருகும்.
ஏப்ரல் 23 : இது தகவல்கள் கொட்டிக் கிடக்கும் இன்டர்நெட் யுகம். கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த அரிய கருத்தை உங்கள் மாணவர்களுக்கு அறிஞர்கள், பெரியோர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் புரிய வைப்பீர்களா?
ஏப்ரல் 24 : பிரச்னைக்கு என் ஆசிரியரை அணுகினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மாணவ, மாணவிகளுக்கு வர வேண்டும். அவ்வாறு யாராவது உங்களிடம் இதுவரை வந்துள்ளார்களா?
ஏப்ரல் 25 : மாணவர்களிடம் படைப்பாற்றலை ஆசிரியர்கள் தூண்ட வேண்டும். அவர்களது மனதை வசப்படுத்த அவர்களிடம் உள்ள திறமை மற்றும் ஆர்வங்களைக் கண்டு, அவற்றில் அவனை ஊக்குவித்து ஈடுபடச் செய்ய வேண்டும். அதற்காக இன்று நீங்கள் முயற்சி எடுக்கலாம்.
ஏப்ரல் 26 : மாணவ-மாணவிகள் செய்யும் தவறுகளைப் பலர் முன் கூற வேண்டாம்; அவர்களைத் தனியே அழைத்துப் புரிய வையுங்கள்.
ஏப்ரல் 27 : ஐ டீச், யூ லிசன் என்ற ஆசிரியரின் சாதாரண அணுகுமுறையானது, மாணவர்களுக்குள் ஐ பே, யூ டீச் என்று வரட்டு மனநிலையை உருவாக்கிவிடுகிறது. மாறாக, உங்களது சரியான அணுகுமுறையில் மாணவனே, நாம் இருவரும் சேர்ந்து கற்கலாம்- லெட் அஸ் லென்ர் டூகெதர் என்ற நிலையை உருவாக்க முடியுமா?
ஏப்ரல் 28 : வாலிப வயது மாணவ, மாணவிகளுக்குப் படைப்பாற்றல் கிரியேட்டிவிட்டி முகிழும் காலம்! அந்த வயதில் உடல், மூளை, மனம் மூலமாக வெளிப்படும் சக்தி ஒரு புதுமையான படைப்புத் திறனுடன், நுண்கலையாகவோ, எழுத்தாற்றலாகவோ இயற்கையாகவே வெளிப்படுகிறது. இவற்றைக் கவனித்து மாணவ - மாணவிகளைப் பாராட்டுவீர்களா?
ஏப்ரல் 29 : ஆசிரியர்கள் தங்களது துறை சார்ந்த சாதனையாளர்கள், வாழ்கையில் போராடி வெற்றிவாகை சூடியவர்களின் சம்பவங்கள், மகான்களின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களின் மனநலனைத் தூண்டலாம்.
ஏப்ரல் 30 : இரக்கம் கொள்; உதவிக்காக விண்ணை (இறைவனை) நோக்கு, உதவி வந்தே தீரும் என்பார் சுவாமி விவேகானந்தர். ஆகவே ஆசிரியர்களே, உங்களது மாணவ - மாணவிகளின் முன்னேற்றத்திற்காகத் தினம் ஒருமுறையாவது இறைவனிடம் வேண்டுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் நிச்சயம் மாணவர் போற்றும் ஆசிரியராக இருப்பீர்கள்.

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)