Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

சுதந்திரம் பெற்றதும் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா?ஆகஸ்ட் 19,2013

ஆங்கிலேயனை விட்டால் நம்மை ஆள்வதற்கு ஆளில்லை என உயிருள்ள பிணங்களைப் போலாகிப் பிதற்றி வந்தார்கள், நாட்டின் விடுதலைக்கு முந்தைய நம் மக்கள். அந்த நேரத்தில், அடிமைகள் மத்தியில் ஆண்மை உருக் கொண்ட மாமனிதரான விவேகானந்தர் ஒளிமயமான பாரதத்தைக் கண்டார். இந்திய விடுதலைக்கான மிக முக்கியமான முயற்சி சுவாமி விவேகானந்தருடையது என எல்லா பாரதத் தலைவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று, இரண்டு வித இந்தியாக்கள் உள்ளன. முன்னேற்றத்திற்கு ஒவ்வாத சிந்தனைகளைக் கொண்டுள்ள, உழைக்காதவர்களால் வந்த வறுமையில் வாடும் இந்தியா ஒன்று. அடுத்து, விவேகானந்தர் கண்ட இந்தியாவோ அடிமைத்தனமற்ற அமர பாரதம். அதை லட்சியமாகக் கொண்டு தேசத்தலைவர்கள் பலர் உருவானார்கள்; அந்த லட்சிய பாரதம் நாட்டின் நலனிற்காகப் பாடுபடும் பலரை இன்றும் படைத்து வருகிறது. வளர்ச்சிக்கான முதல் தேவை - ஊணூஞுஞுஞீணிட் டிண் tடஞு ஞூடிணூண்t ஞிணிணஞீடிtடிணிண ஞூணிணூ எணூணிதீtட என்கிறார் சுவாமி விவேகானந்தர்.1947-இல் நாடு சுதந்திரம் பெற்றாலும், நாட்டு மக்களாகிய நாம் உண்மையில் சுதந்திரம் பெற்றுவிட்டோமா? நாம் பல இடங்களில், பல நிலைகளில் உடலாலும், மனதாலும், சிந்தனையாலும் இன்றும் அடிமைப்பட்டுள்ளோம். அதில் பெருமையும் கொள்கிறோம்! ஆகஸ்ட் 15 அன்று பல பள்ளிகளில், அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, பேசுவதும் இனிப்பு வழங்குவதுமே நடக்கின்றன. பிறகு கொடியை இறக்கிவிட்டுப் பழையபடியே உள்ளோம். அப்படியில்லாமல், நாம் தனிமனித நிலையில், குடும்பத்தில், பள்ளி மற்றும் அலுவலகத்தில் சுதந்திரமானவராக இருந்தால் சுதந்திரம் உண்மையில் தேசத்திற்கும் நமக்கும் பெரும் நன்மையையும் வலிமையையும் தரும்.சுதந்திரம் பெற்றவர் எப்படி செயல்படுவார்? போல் வேலை செய்; அடிமை போல் அல்ல என்பார் சுவாமி விவேகானந்தர்.எந்தவிதமான அடிமைத்தனமும் இல்லாத விவேகானந்தர் கூறும் சுதந்திர பாரதத்தைப் படைப்பது எப்படி? இதை அறிவதற்கு முன்பு, இக்காலத்தில் நாம் என்னென்ன நிலையில், எங்கெல்லாம் கட்டுண்டிருக்கிறோம் என்பதை அறிய வேண்டும். அதை அறிவதற்கான முயற்சியே இந்த மாத விவேகானந்தப் பயிற்சி.67-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த ஆண்டில் இங்கு 67 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றைக் கவனமாகப் படித்து ஆம் அல்லது இல்லை என்ற பதிலைத் தாருங்கள். இந்தப் பயிற்சிகளை முடித்து, இவை தொடர்பாக நீங்கள் செய்த வேறு நல்ல, பாராட்டத்தக்கச் செயல்களையும் எழுதி செப்டம்பர் 7-க்குள் எங்களுக்கு அனுப்புங்கள். நன்கு எழுதிய சிறந்த 15 பேருக்குத் தலா ரூ.150/- பரிசாக வழங்கப்படும். உங்கள் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், 31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4.

மாணவ - மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சி


1.காலையில் நேரத்தோடு எழுந்து நான் அடிமை இல்லை என்று கூற முடியுமா?
2. எதையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று டும் அடிமை நான்!
3. அழகாக இல்லையே என ஏங்கும் அடிமை நான்!
4. எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்று நான் நம்பவில்லை!
5. பணம் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் உடைய அடிமை நான்!
6. வசதியான வாழ்வு எனக்கில்லை என்று புலம்பாத, நல்ல முயற்சியுள்ள சுதந்திரன் நான்!
7. சினிமா, டி.வி., இணைய தளம், கிரிக்கெட் போன்றவற்றுக்கு அடிமையாக மாட்டேன்.
8. அதிக மார்க் வருமா/ வராதா என எப்போதும் பயப்படும் அடிமை நீ?
9. என்னை உற்சாகப்படுத்த நல்ல ஆசிரியர்கள் இல்லை என ஏங்காமல், ஆசிரியர்களையே என் படிப்பால் என்னைப் பாராட்ட வைக்கும் உறுதியுள்ளவன் நான்!
10. படித்தது நினைவில் இருப்பதில்லையே என்ற சஞ்சலத்திற்கு அடிமையல்ல நான்!
11. படிக்கும்போது தூக்கம் வந்தால் விழுந்துவிடும் அடிமை நீ?
12. முடியாது ஒரு சாதாரணப் பெண் என யாராவது உன்னைத் தலையில் தட்டி அமுக்கி வைத்தால், திமிறிக் கொண்டு எழும் சுதந்திரச் சிங்கம் அல்லவா நீ?
13. நடிகர்களின் நடிப்பை ரசிக்கும் நீ, அவர்களின் கட்-அவுட்டிற்குப் பாலாபிஷேகம் செய்யுமளவிற்குப் அடிமை மாட்டாய் அல்லவா?
14. வாழ்வில் பிறர் மாதிரியே நடந்து கொண்டு அடிமை நீ?
15. சிறு தோல்விகளுக்கெல்லாம் துவண்டுவிடும் அடிமை நீ?
16. யார் எது சொன்னாலும் சிந்திக்காது நம்பிவிடும் அடிமை அல்ல நான்!
17. செல்போன் இல்லாதவன் செல்லாதவன் என்று நம்புபவன் அல்ல நான்.
18. அம்மாவும் தம்பியைத்தான் கவனிக்கிறார்கள். என்னைக் கவனிப்பதில்லை என்று ஏங்கும் அடிமை நான்!
19. சுதந்திரம் பெற்ற பிறகும் நமது ஆங்கில மோகம் போகவில்லை. ஆங்கில மொழி அவசியமே. ஆனால் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் பேசுவதுதான் கௌரவம் என்ற எண்ணத்திற்கு நீ அடிமையா?
20. ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்து எடைபோடும் பழக்கத்திற்கு அடிமை அல்லவே நீ?
21. டி.வி. பார்த்தால்தான் சாப்பிட முடியும் என்று எண்ணி கண்ணுக்கும், வயிற்றுக்கும் கெடுதல் தரும் விஷயத்தைச் செய்வதிலிருந்து விடுதலை பெறுவாயா?
22. உரையாடும்போது நீ கூறுவதைத்தான் பிறர் கேட்க வேண்டும் என்ற புத்திக்கு அடிமை இருப்பாயா?
23. என்னை மதிப்பதில்லை என்ற மனக்குறையற்ற மகிழ்ச்சியானவன் நான்!
24. பஸ்ஸில் சீட்டைக் கீறுதல், எழுதுதல் போன்ற சேஷ்டைக்கு அடிமை நீ?
25. இரண்டு சக்கர வாகனத்தில் பிறருடன் போட்டியிட்டு ஓட்டி, சாலையில் வருபவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் அடிமை நீ?
26. சில நிமிடங்கள் காத்திருந்தால்கூட உடனே ஊM ரேடியோவைக் கேட்டால்தான் முடியும் என்ற பந்தா காட்டும் பையனா நீ?
27. ஆடைக்குப் பொருத்தமாக கைப்பை, செருப்பு அணிந்தால்தான் தன்னை மற்றவர்கள் கவனிப்பார்கள் என்ற மடத்தனமான எண்ணத்திலிருந்து சுதந்திரம் பெறுவாயா?
28. பைக்கில் வேகமாகச் சென்றால்தான் ஆண் மகன் என்று நம்பும் அடிமையல்லவே நீ?
29. பைக்கில் வேகமாகச் செல்பவனே நிஜ ஹீரோ என்று நினைக்கும் பெண் அல்லவே நீ?
30. அழகாக உடுத்துவதைவிட கவர்ச்சியாக மட்டுமே உடையுடுத்தும் பெண்ணா நீ?
31. தெருவையே குப்பைத் தொட்டியாக நினைத்து சாக்லேட் பேப்பர், டிக்கெட் ஆகியவற்றைத் தூக்கி எறியாத பொறுப்புள்ளவனா நீ?
32. சுதந்திர தினத்தில், டி.வி.யில் பேட்டி என்ற பெயரில் உளறும் சிலரின் பேச்சுக் குப்பையை அள்ளுபவனா நீ?ஆசிரியர்களுக்கு....
33. உங்கள் நண்பர் /சக ஊழியருக்குப் பாராட்டு கிடைத்தால் மனம் வெதும்பாமல், அவர்களைப் பாராட்டும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளதா?
34. மாணவர்கள், தன்னைத் தவிர வேறு ஓர் ஆசிரியரைப் புகழ்ந்தால் பொறாமை எனும் அடிமைத்தனத்தில் நான் புக மாட்டேன்.
35. எப்போதும் எதற்காவது என்னைப் பிறரோடு ஒப்பிட்டுக்கொண்டு, நிம்மதி எனும் சுதந்திரத்தை இழக்க மாட்டேன்.
36. யார் வேண்டுமானாலும் எளிதில் என் தன்முனைப்பைத் (ஈகோ) தூண்டிவிட்டு, எனக்குக் கோபமூட்டிவிடலாம் என்ற அடிமையல்ல நான்.
37. சூழ்நிலை நன்றாக இருந்தால், நான் திறம்படச் செயலாற்றுவேன். சூழ்நிலை மாறிவிட்டாலோ, புலம்ப ஆரம்பிப்பேன் என்னும் அடிமை நீங்கள்?
38. மோசமான சூழ்நிலை வந்தாலும் நான் அதை நல்லபடியாக மாற்றுவேன். சூழ்நிலை என் மனதின் / அறிவின் சுதந்திரத்தைக் கவர விட மாட்டேன்.
39. எனக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் என்னைவிட அதிக அதிகாரம் உடையவர்கள் என்னை மதிக்கா விட்டால், மனப்பான்மை நான் அடிமையாகிவிட மாட்டேன்!
40. என்னைச் சுற்றி அறிவிலிகள், வசதி இல்லாதவர்கள், பண்பற்றவர்கள் என்று இருந்தால், நான் மனப்பான்மை குதிக்க மாட்டேன்.
41. உங்களைவிட சிறுவயதினர் உங்களுக்கு யோசனை கூறினால் எனக்குத் தெரியும் என்ற ஈகோவுக்கு அடிமையாகாமல் அவற்றை ஏற்கும் சுதந்திரமானவரா நீங்கள்?உங்கள் மனதை வளர்த்துக் கொள்வதற்கான கேள்விகள்
42. உங்களை அடிமையாக வைத்துள்ள ஆசைகள் எவை எவை என்று உங்களுக்குத் தெரியுமா?
43.சிறு சொல்லால்கூட மனமுடைந்து போகும் மனநிலை உடையவரா நீங்கள்?
44. பொழுதுபோக்கு என்று நேரத்தையும் சிந்தனையையும் வீணடிக்கும் பத்திரிகைகளில் உங்கள் சுதந்திரத்தை இழப்பீர்களா?
45. ஆசைப்பட்டுத் தேவையற்ற பொருள்களை வாங்கிவிடும் அடிமை அல்லவே நீங்கள்?
46. எல்லாவற்றிலும் மற்றவர் கருத்துப்படியே முடிவெடுக்கும் அடிமையா நீங்கள்?
47. வீட்டில், அலுவலகத்தில் பலர் இணிட்ஞூணிணூt ஙூணிணஞு -ல் உள்ளனர். இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் அதை ஏற்க மறுத்துப் புலம்பித் தள்ளுவார்கள். நீங்களும் அப்படியா?
48. உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைப் பிறருடன் ஒப்பிடும் குணத்திற்கு அடிமையா?
49. ஆங்கில நூல் படித்தால்தான் என்ற வலையில் சிக்கியவரா நீங்கள்?
50. பெற்றோர்/பெரியோர் சொற்படிக் கேட்காமலிருப்பது என் சுதந்திரம் என நினைத்து வாழ்க்கைமுறைகளை இழந்துத் தவிக்கும் சூழ்நிலைக் கைதி அல்லவே நீங்கள்?சமுதாயத்தில் நீங்கள் முக்கியமானவர் ஆவதற்கான கேள்விகள்
51. டெல்லியில் ஒரு பெண்ணுக்கு வன்கொடுமை நடந்தபோது அந்த வழியே சென்றவர்கள் ஊர் வம்பு என்ற சுயநலத்திற்கு அடிமையானார்கள். அப்படிப்பட்டச் சூழ்நிலையில் சிறுமை கண்டு சீறும் சுதந்திரமானவர்தானே நீங்கள்?
52. மீடியா காட்டும் செய்திகளை / காட்சிகளை அப்படியே நம்பும் அடிமைகளா நீங்கள்?
53. ஓட்டிற்காக இலவசம் பெறுவதற்காக இலவம் பஞ்சாகப் பறக்கும் அடிமையா நீங்கள்?
54. அதிக விலையுள்ள பொருளே தரமானது என்ற வியாபார யுக்திகளுக்கு நீங்கள் அடிமையா?
55. கடவுளை / பொதுக் காரியங்களைப் பற்றிப் பேசினால் சரியான என்று கூறி, பேசுபவரைக் கேலி செய்பவரா நீங்கள்?
56. வெள்ளைத் தோலே உயர்ந்தது என்ற அடிமைக் கலாச்சாரத்தை வளர்க்கிறது வெளிநாட்டு கம்பெனிகள். இந்த விளம்பரங்களிலிருந்து தூர இருக்கும்படி உங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பீர்களா?
57. சின்னத்திரையில், நம் பாரதக் கலாச்சாரத்தைக் கூறு போடும் அழுகைத் தொடரில் வாழ்வைத் தொலைத்து விடாமல், நீங்கள் நல்ல நிகழ்ச்சிகளை இனம் கண்டு காண்பவரா?
58. சினிமா, கிரிக்கெட் நாயகர்களுக்குத் துதி பாடி, கட்அவுட் வைக்கும் அடிமைத்தனம் நிழலை நிஜமாக நம்புவதால் அமைவது. பிள்ளை இதற்கெல்லாம் அடிமையில்லை என நீங்கள் துணிந்து கூற முடியுமா?
59. வெளிப் பகட்டுக்காக கார்டு போன்ற பகாசுரன்களிடம் மாட்டிக் கொண்டு, தேவையற்ற கடன் தொல்லைகளில் சிக்காதவர்தானே நீங்கள்?
60. தரம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் வெளிநாட்டுப் பொருள்களை வாங்கும் வீண் டம்பத்திற்கு நீங்கள் அடிமையா?
61. உங்கள் ஊழியர் மனந்திறந்து பேசுவதைக் கேட்கும் தலைமைப் பண்பாளரா நீங்கள்?
62. தனிமை, நோய் முதலியவற்றிடம் அடிமைப்பட்டுத் தவிக்கும் முதியோர்களை இயன்ற வரையில் அவற்றிலிருந்து விடுபட வைக்கும் செயல்திறன் மிகுந்தவர்தானே நீங்கள்?
63. கோவிலில் கடவுளை வணங்குவதை விட்டு அங்கு வந்து செல்பவர்கள் செய்வதை எல்லாம் நோட்டமிடும் நாத்திக அடிமையா நீங்கள்?
64. பெரிய வணிக வளாகங்களில் (குடணிணீணீடிணஞ் Mச்டூடூ) அவர்கள் கூறும் விலையைப் பேரம் பேசாமல் வாங்கிவிட்டு, தெருவோரம் கடை வைத்துள்ள ஏழை வியாபாரியிடம் பேரம் பேசும் அடிமையல்லவே நீங்கள்?
65. உங்கள் குழந்தைகள் எது கேட்டாலும் அவர்களுக்குப் பயந்து, யோசிக்காமல் எல்லாவற்றையும் வாங்கித் தரும் அடிமை அல்லவே நீங்கள்?
66. இன்று நம்மைப் பிடித்து ஆட்டும் லஞ்ச ஊழலுக்கு அடிமையாகாத நாட்டுப்பற்று மிக்க குடிமகன்தானே நீங்கள்?
67. இந்தச் சுதந்திர தினத்தன்று என் அடிமைத் தளைகளிலிருந்து விடுபட்டுச் சுதந்திரனாக வாழ்ந்து என் சக இந்தியர்களும் வாழ உறுதுணையாக இருப்பேன் என உறுதி ஏற்கிறேன்.

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)