பழன: விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் ஆசிரியர்களுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்றது. பழனி அக்ஷயா பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இம்முகாமினை மாவட்ட கல்வி அலுவலர் கலையரசி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக மாத இதழின் ஆசிரியருமான சுவாமி விமூர்த்தானந்தஜி மகராஜ் தலைமையேற்று நடத்தினார்.. சரஸ்வதி தியானம் கற்றுத் தரப்பட்டது. கேள்வி பதில் நிகழ்ச்சி, குறும்படங்கள் மூலம் சுவாமிஜி சொற்பொழிவாற்றினார். இம்முகாமில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சங்கர் பொன்னர் பள்ளியின் செயலர் வேலுதுரைசாமி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் ராஜப்பன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.