Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> செய்திகள்

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை வெளி உலகிற்கு தெரிவித்த ஆங்கிலேயர்!டிசம்பர் 11,2013

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தரின் பல அற்புதமான சொற்பொழிவுகளை உலகம் அறியச் செய்தவர் ஆங்கிலேயரான குட்வின். 1870-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர் ஜோஸ்வா குட்வின். இவர் தனது 14-வது வயதில் எழுத்தாளராகப் பணியாற்றி வந்தார். 1895-ல் சுவாமி விவேகானந்தரின் உரையைப் பதிவு செய்ய ஸ்டேனோகிராபர் தேவை என நியூயார்க் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது. இதைப் பார்த்து விண்ணப்பித்து பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் சம்பளத்துக்குப் பணியில் சேர்ந்த குட்வின், பின்னர் விவேகானந்தரின் உரையைக் கேட்டு சம்பளம் வாங்க மறுத்து விட்டார்.ஜம்மு, லாகூர் போன்ற இடங்களில் விவேகானந்தரின் சொற்பொழிவுகளை சுருக்கெழுத்தில் பதிவு செய்தார். பின்னர் சுவாமி விவேகானந்தர் ஜப்பானில் சொற்பொழிவுக்குச் செல்ல சென்னை வந்தார். அப்போது குட்வினிடம் ஜப்பான் பயணத்தின்போது மீண்டும் சந்திக்கலாம் என்றார். ஆனால் அதன்பின் இருவரும் சந்திக்கவே இல்லை. சென்னைக்கு வந்த குட்வின், சகோதரி நிவேதிதாவுடன் ஆன்மிகப் பணியை தொடர்ந்தார். சென்னையில் அதிகமான வெயில் காரணமாக குளிர் பிரதேசமான உதகைக்கு வந்தார். உதகையில் நிலவிய கடுமையான குளிரின் தாக்கத்தால் குட்வின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. கடும் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் 1898 ஜுன் மாதத்தில் தனது 28-வது வயதில் காலமானார். இவரது உடல் உதகை தாமஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தரின் பிறந்த தினத்தன்று குட்வின் கல்லறையில் ராமகிருஷ்ண மடத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை குட்வின் பதிவு செய்ததால்தான், இன்றுவரை அந்த சொற்பொழிவுகளை நாம் கேட்கவும், படிக்கவும் முடிகிறது. சுவாமியின் சொற்பொழிவுகள் குட்வினால்தான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது. டிசம்பர் 15-ம் தேதி குட்வின் கல்லறையில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் தியான நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

மேலும் செய்திகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)