Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> செய்திகள்

சுவாமி பிரேமானந்தரின் ஜயந்தி தினம்!டிசம்பர் 16,2013

ஒரு நாள் சுவாமி பிரேமானந்தர் ஓர் ஏரிக்குச் சென்றார். அங்கு பூத்திருந்த அழகிய தாமரைகளைப் பார்த்ததும் மனதைப் பறிகொடுத்த சுவாமிகள் அவற்றை அன்னை சாரதாதேவிக்காகப் பறித்துக் கொண்டு போக விரும்பினார். சுவாமிகள் நீந்திச் சென்று சில தாமரைகளைப் பறித்துக் கொண்டு உற்சாகமாகக் கரை திரும்பினார். நீரை விட்டு வெளியே வந்த சுவாமிகளின் மென்மையான உடலில் பல அட்டைப் பூச்சிகள் ஒட்டியபடி ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தன. அப்பூச்சிகளைப் பிய்த்து எடுத்தபோது பிரேமானந்தரின் உடலிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. ஆனாலும் சுவாமிகள் அன்னைக்காகப் பூக்களைப் பறித்த ஆனந்தத்தில் இருந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்னை சாரதாதேவி மிகவும் வருந்தினார். அவர் சுவாமிகளிடம் இது போல் முன்னெச்சரிக்கை இல்லாமல் எதிலும் இறங்கக் கூடாது என்று மெல்லக் கடிந்து கூறினார்.

மேலும் செய்திகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)