டைம் இதழில் சாக்ஷி மாலிக்... டாப்-100 பட்டியலில் இடம்
அமெரிக்காவில் வெளியாகும் 'டைம்' இதழில், 2024ல் ஏப்., ல் 'உலகளவில் கவனம் ஈர்த்த 'டாப்-100' பேர் கொண்ட பட்டியலில்,' இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் 31, இடம் பெற்றுள்ளார்.
அதில், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கம் (தங்கம்) வென்ற ஒரே வீராங்கனை சாக்ஷி மாலிக்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய மல்யுத்த சங்க தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த போராட்டம், இந்திய விளையாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியளவில் உருவெடுத்தது.
இது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. இதனால் பிரிஜ்பூஷண் மீது பாலியல் தொல்லை, மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டன.
புதிய தலைவராக பிரிஜ்பூஷண் ஆதரவாளர் தேர்வு செய்யப்பட்ட சிறிது நேரத்தில், மிகவும் துணிச்சலாக மல்யுத்த போட்டியில் இருந்து விலகினார் அவர்.
இருப்பினும் போராட்டத்தை விட்டு விலகவில்லை. பாலியல் தொல்லைக்கு எதிராக போராடிய அனைவருக்கும் இவர் முன்னுதாரணமாக தொடர்ந்து திகழ்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.