தட்சிணாயன புண்ணிய காலம் என்பது என்ன?

தை முதல் ஆனி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் உத்ராயண புண்யகாலம்

ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான, ஆறு மாதங்கள் தட்சிணாயன புண்யகாலம் எனப்படுகிறது

தட்சிணயான புண்யகாலத்தில், சூரியன் கிழக்கு மற்றும் தெற்கு திசைக்கு இடையே உதயமாகும்

பாரதத்தின் கங்கை, யமுனை, கிருஷ்ணா, நர்மதை, காவிரி உள்பட, ஏழு நதிகள் சப்த புண்ய நதிகளாகும்

புண்ய நதிகளில், தட்சிணாயன புண்ணிய நதி என்ற பெருமை காவிரிக்கு மட்டுமே உண்டு

தட்சிணாயன புண்ய காலம் துவங்கும் நாளில், காவிரியில் புனித நீராடி, சூரியனையும், குல தெய்வங்களையும் வழிபடுகின்றனர்

தட்சிணாயன காலம் துவங்கும் ஆடி 1 தேதி தான், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பாரதப் போர் துவங்கியது

தட்சிணாயன காலத்தில் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல் சிறப்பை தரும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...