ஆடி- பெயர் வந்தது எப்படி ?
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம்
ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது
அப்போது ஒரு தேவகுல மங்கை பார்வதியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள்
வந்தது பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார்.
அவள் ஈசனை வணங்கி தங்கள் பார்வை என்மீது பாட வேண்டும் என்றே இவ்வாறு செய்தேன் என்று மன்னிப்பு கேட்டாள்
சிவபெருமான், பார்வதி இல்லாத சமயம் நீ அவளைப்போல வந்து தவறு. பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.
அவள் விமோசனம் கேட்க ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும் என்றார்.
ஆடி என்ற தேவலோகத்து பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள்.
ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.