ஆடி வெள்ளி; கூழ் வார்த்தலுக்கும், அம்மனுக்கும் என்ன தொடர்பு?
கோடை காலத்துக்கும், மழை காலத்துக்கும் இடையில் வரும் ஆடியில் வெயிலும், காற்றும் கலந்திருக்கும்.
ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்
எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம்
இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்
நோயிலிருந்து தப்பிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தடுப்பு மருந்து வெங்காயமும், மோர் கலந்த கூழும் தான்.
இதை உணர்ந்த முன்னோர், நம் அனைவரையும் கூழ் குடிக்க வைக்க எடுத்த முயற்சியே அம்மனுக்கு கூழ் ஊற்றும் வழக்கம்.
பலர்கூடும் ஆடி திருவிழாக்களில் அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு பிரசாதமாக தரப்படுவதால். நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.
ஒரு மகத்தான உணவை பல தலைமுறைக்கு கொண்டு செல்லும் இந்த முயற்சியால் 'கூல்' ஆகிறது கூழ்.