ஆடி வெள்ளியும்.. அம்மன் வழிபாடும்.!
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு செய்ய சிறந்த நாள்.
ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள்.
இன்று அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுதல் சிறப்பு.
காஞ்சி மகாபெரியவர் மடத்தில் வாழ்ந்த காலத்தில், ஆடிவெள்ளியன்று பெரியவரே முன் நின்று திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை செய்வார்.
அம்பாளின் தியானத்தை விட வேறு ஏதும் வேண்டியதே இல்லை. அவளது அருளால் நாம் சாந்தியும், ஆனந்தமும் அடைவோம், என்று அறிவுரை சொல்வார்
ஆடிவெள்ளியன்று காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்வது மேலான பாக்கியம்.
வீட்டில் மாலையில் ஐந்து முகமாக தீபமேற்றி, அம்பிகைக்கு பிரசாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.
சுமங்கலிகளுக்கு ரவிக்கைத்துணியும், மங்கலப்பொருட்கள் தானம் அளித்தால் துன்பம் நீங்கி வாழ்வில் நன்மை உண்டாகும்.