சந்திர தரிசனம் (மூன்றாம் பிறை) செய்வதால் இத்தனை நன்மையா?
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி
ஜாதக கோளாறு, கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், உடல், ஆயுளைப் பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன.
இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சக்தியை மூன்றாம்பிறையன்று சந்திரன் அளிக்கிறார்.
மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் வருமானம், செல்வ செழிப்பு உண்டாகும்.
மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்யலாம்.
சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று தரிசனம் செய்வது சிறப்பு.
மனதில் களங்கம் இல்லாத துாய பக்தி கொண்டவர்களை சிவன், தன் தலையில் வைத்துக் கொண்டாடுவார் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார்.
மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது. சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும்.