ஆடிப்பூரம் விழாவிற்கு இத்தனை சிறப்புகள் ஏன்?
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.
இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.
உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.
அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்த பெரியாழ்வார் ஆடிப்பூர நன்னாளில் துளசிச்செடியின் அடியில் குழந்தை ஆண்டாள் கண்டெடுத்தார்
அரங்கனை ஆட்கொண்டதால் கோதை, "ஆண்டாள் என்ற திருநாமத்துடன் சூடிக் கொடுத்த சுடர் கொடியானாள்.
ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள்.
ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் அருளாட்சி புரியும் ஆண்டாளின் திருவடிகளை போற்றுவோம்.