நாக சதுர்த்தி; பாம்பு புற்றினை வழிபடுவது ஏன்?

இயற்கை வழிபாட்டு முறையில் பாம்பு புற்றினை வழிபடுவது பழங்காலம் முதலே இருந்து வருகிறது

ஆதிசேஷன், திருமாலின் படுக்கையாக பூமியைத் தாங்கும் பாக்கியம் பெற்றார்.

திருபாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற தேவாசுரர்கள் முயன்றபோது. வாசுகி என்னும் பெரும் பாம்பினை கயிறாகப் பயன்படுத்தினார்கள்.

நாகப்பாம்பினை அம்பிகையின் அம்சமாகக் கருதி வணங்குவர்

அம்மன் கோவில்களில் நாகமே காவல் புரிவதாகவும், அம்பிகையின் குடையாக இருப்பதாகவும் கூறுவர்.

மாரியம்மன் கோவில்களில் உள்ள புற்றினை புற்று மாரியம்மன் என்று குறிப்பிடுவர்.

ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு புற்று மண்ணையே பிரசாதமாக நெற்றியில் பூசிக் கொள்வர்.

நாகங்கள் குடியிருக்கும் புற்றுக்குப் பூஜை செய்தாலும் தோஷங்கள் நீங்குவதுடன் நினைத்த நல்ல காரியங்கள் வெற்றியடையும்.

நாகசதுர்த்தியில் புற்றுக்கு பால் ஊற்றி வழிபட நலமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...