கருடபஞ்சமி; கருட தரிசனம் கவலைகள் தீர்க்கும் என்பது ஏன்?

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்

கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான். அதனால் தான் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது.

விஷ்ணு அம்சமான கருடனை வழிபடுவதன் மூலம் திருமாலின் அருள் கிடைக்கிறது.

பரமபதத்தில் பெருமாளின் அருகே இருந்து சேவை செய்கின்ற நித்ய சூரிகளில் ஒருவர் கருடர்

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம்.

கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனி போல் கவலைகள், துன்பம் பறக்கும்.

கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...