மங்கள வாழ்வு தரும் வரலட்சுமி விரதம்; எளிதாக செய்வது எப்படி?
லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது.
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த போது அவரோடு சேர்தே இருந்தாள்
பெண்கள் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இந்நாளில் பூஜையறையில் மாக்கோலமிட்டு, லட்சுமியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவர்
மகாலட்சுமிக்கு மாதுளை படைத்து வழிபட செல்வம் சேரும்
வரலட்சுமி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. விட்டில் பெருமாள், லட்சுமிக்கு விளக்கேற்றி வழிபட்டாலும் சிறப்பு தான்.
இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.