சகோதரத் திருநாள் எனும் ரக்ஷாபந்தன்; கொண்டாடுவது ஏன் தெரியுமா?
ரக்ஷாபந்தன் பாதுகாப்பு, அன்பு, மரியாதையை உணர்த்தும் பண்டிகை ஆகும்
இந்தியா முழுவதும், ஆவணி மாத பவுர்ணமி நாளில், சகோதரத்துவத்தை உணர்த்தும், ரட்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது
உடன்பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும், தங்கள் சகோதரர்களாக ஏற்று, ராக்கி எனும் புனித நூல் கட்டுவார்கள்.
ராக்கியை ஏற்றுக் கொண்ட சகோதரன், வாழ்வில் எப்போதும் பாதுகாப்பாகவும், உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறும் நாள் இது
ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கையிலே காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதை கண்ட திரௌபதி தன் புடவையின் தலைப்பை கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டிவிட்டு கையிலிருந்து வழியும் இரத்தத்தை தடுத்தார்.
மனம் நெகிழ்ந்துப் போன கிருஷ்ணர். 'உன்னை நான் வரும் எந்த விதமான கஷ்டங்களில் இருந்து எப்போதும் காப்பாற்றுவேன்' என்று திரௌபதிக்கு சத்தியம் செய்துக் கொடுத்தார்
திரௌபதி கிருஷ்ணரின் கையிலே கட்டிய இந்த நாளை க்ஷாபந்தன் என்று வடஇந்தியாவில் கொண்டாடுகிறார்கள்.
சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்வோம்.