Web Stories
பவுர்ணமியில் கிரிவலம் செல்வது ஏன் சிறப்பாக சொல்லப்படுகிறது?
ஆன்மிகத்தில் உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் முக்கியம்.
உள்ளம் தனது எண்ண ஓட்டங்களில் ஒருமுகப் பட்டால்தான் ஆற்றலுடன் விளங்க முடியும்.
இதற்கு சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும்.
அதன் குளிர்ந்த கிரணங்கள் நம்மைச் சுற்றி உள்ள பிரதேசங்களை மட்டுமின்றி நமது தேகத்தையும் ஊடுருவும்.
பவுர்ணமியன்று வலம் வந்தால், சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம்.
கிரிவலம் செல்வதால் பிணிகளை அகலும். தோஷங்கள் நீங்கும். சக்தி பரிபூரணமாய் கிடைக்கும்!
கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும்.