மாவிளக்கு ஏற்றி வழிபட வீட்டிற்கே வருவார் திருப்பதி ஏழுமலையான்..!
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
இதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் மாவிளக்கேற்றி வெங்கடாசலபதியை வீட்டிலும் வழிபடலாம்.
குடும்ப பிரச்னை தீரவும், நோய் நொடியில் இருந்து விடுபடவும் திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி சனியன்று மாவிளக்கு ஏற்றுவதாக நேர்ச்சை செய்வர்.
இந்த வழிபாட்டின் போது திருப்பதி ஏழுமலையானே நம் வீட்டிற்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.