நவராத்திரி வழிபாடு எவ்வாறு தோன்றியது தெரியுமா?
புரட்டாசி மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி தேவி வழிபாடு சிறப்பானது.
நவ என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் இரு விதமான பொருள்கள் உண்டு.
முப்பெரும் சக்திகளான மலைமகள், அலைமகள், கலைமகள் என்ற முப்பெருந்தேவியருக்கும் மூன்று தினங்கள் வீதம் 9 நாட்கள் பூஜை செய்யப்படுகிறது.
முதல் மூன்று நாட்கள் மலைமகள் அல்லது பார்வதி ஆராதனை நடைபெறும்
நவராத்திரியில் நடுநின்ற மூன்று நாட்களில் லட்சுமி தேவியை பூஜிக்கின்றனர்.
இறுதி மூன்று நாட்களில் கலைமகளைப் பூஜிக்கின்றனர். இவள் வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.
9 நாட்கள் நடைபெற்ற போரில் மகிஷனை வதம் செய்து மகிஷாசுரமர்த்தி என்ற பெயர் பெற்றாள்.
அன்னை வென்ற வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.
நவதேவியர் வழிபாட்டினை ஒன்பது நாட்களும் செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று தினங்களாவது வழிபாடு செய்தல் அவசியம்.