ஐப்பசி விஷு புண்ணிய காலம்; புனித நீராடி இறைவனை வழிபடுவது ஏன்?

தமிழ் மாதங்களை ஆறு, ஆறாக பிரித்து, சித்திரை மற்றும் ஐப்பசிக்கு, விஷு என்ற அடைமொழி கொடுத்து, புண்ணிய நீராடலுக்குரிய காலங்களாக கருதுகின்றனர்.

ஐப்பசியை, துலாம் (தராசு) மாதம் என்பர். இந்த மாதத்தில், துலாம் ராசியில் நுழைகிறார் சூரிய பகவான்.

ஐப்பசி மாதம் அடை மழைக் காலம்; அப்போது, நதிகள் பெருக்கெடுத்து ஓடும்.

நதிகளில், போதுமான தண்ணீர் வேண்டும் என பிரார்த்திக்கும் இயற்கை வழிபாடாகவே, சித்திரை விஷுவும், ஐப்பசி விஷுவும் அமைந்துள்ளன.

ஐப்பசி மாதத்தின், 30 நாட்களும், கார்த்திகை முதல் நாளும், நீராடி வழிபடுவது விசேஷம்.

இந்நாட்களில், தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார்.

கங்கை நதி, ஐப்பசியில் நீராடி, தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

இந்நாளில், காவிரியில் நீராடினால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும்.

ஐப்பசி விஷுவன்று நீர் நிலைகளை பாதுகாக்க உறுதியெடுத்து கடவுளின் அன்புக்கு பாத்திரமாவோம்..!

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...