செல்வம் பெருகும் தீபாவளி வழிபாடும் சிறப்பும்..!

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு.

அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.

தீபத்தின் சுடரில் பரமாத்மாவும், பட்டாசுகளின் தீப்பொறியில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள்.

தீபாவளி நாளில் நீர்நிலைகளில் கங்கையும், புத்தாடை, அணிமணிகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும் உறைகிறார்கள்.

இனிப்புப் பலகாரங்களில் அமிர்தம் நிறைகிறது. மலர்களில் யோகினிகள் வசிக்கிறார்கள்.

தீபாவளித் திருநாளில் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறும் விதமாக, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, மலர்களால் இறைவனை அலங்கரித்து கொண்டாடுகின்றனர்.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்.

தீபாவளியில் மகாலட்சுமியை வழிபட கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...