Web Stories
அனுமன் ஜெயந்தியன்று அனுமனை எவ்வாறு வழிபட வேண்டும்?
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.
ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.
மாலையில் 1008 முறைக்கு குறையாமல் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும்.
கோயிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.
இரவில் தூங்கும் முன் ஸ்ரீராம ஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும்.
அனுமன் ஜெயந்தியன்று அனுமன் சாலீஸா பாராயணம் செய்து அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.